படையப்பா சிவாஜி கணக்கா பீல் பண்ணும் எலான் மஸ்க்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

படையப்பா படத்தில் சிவாஜி.. வீட்டை விட்டு வெளியே வரும்போது கடைசியா ஒரு தடவ தூண்-ஐ கட்டிப்பிடித்துப் பீல் செய்வது போல்.. தற்போது எலான் மஸ்க் தன் வீட்டை விற்பனை செய்ய உள்ளார்.

 

டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் போன்ற பெரு நிறுவனங்களுக்குச் சொந்தக்காரரும், உலகின் 3வது பெரும் பணக்காரருமான எலான் மஸ் கடந்த ஒரு வருடமாகத் தனது சொத்துக்களைத் தொடர்ந்து விற்பனை செய்து வரும் நிலையில், தற்போது தன்னிடம் கடைசியாக இருக்கும் ஓரே வீட்டையும் விற்பனை செய்ய முடிவு செய்ய உள்ளார்..

இந்தியாவில் முதல் முறையாக நஷ்டம்.. ஆடம்பர பிராண்டான ஜரா சோகம்..!

இந்நிலையில் எலான் மஸ்க் தனது வீட்டை விற்பனை செய்யும் வகையில் தனது வீட்டை ஆன்லைன் ரியல் எஸ்டேட் தளத்தில் விற்பனைக்காகப் பட்டியலிடப்பட்டு உள்ளது. வீட்டின் விலை என்ன தெரியுமா..?

சான் பிரான்சிஸ்கோ பே ஏரியா

சான் பிரான்சிஸ்கோ பே ஏரியா

ஆமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ பே ஏரியாவில் எலான் மஸ்க் வசித்து வந்த "special place" எனப் பெயரிடப்பட்டு உள்ள தனது வீட்டை பெரிய குடும்பத்திற்கு விற்பனை செய்ய உள்ளதாகத் தனது டிவிட்டரில் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

100 ஆண்டுப் பழமையான வீடு

100 ஆண்டுப் பழமையான வீடு

இதேவேலையில் 100 ஆண்டுப் பழமையான மற்றும் பிரம்மாண்ட வீடு தற்போது zillow என்னும் ஆன்லைன் ரியல் எஸ்டேட் தளத்தில் விற்பனை செய்யப் பதிவிடப்பட்டு உள்ளது, அமெரிக்கப் பணக்காரர்கள் மத்தியில் ஹாட் டாப்பிக் ஆக விளங்குகிறது.

47 ஏக்கர் பிரம்மாண்ட வீடு
 

47 ஏக்கர் பிரம்மாண்ட வீடு

Hillsborough பகுதியில் இருக்கும் இந்த வீட்டு சுமார் 47 ஏக்கர் பகுதியில் 16,000 சதுரடியில் 6 பெட் ரூம், 10 பாத்ரூம், நீச்சல் குளம், ஹைக்கிங் டிரைல்ஸ், சிறிய மலைப் பகுதி, நீர்த்தேக்கம், 11 கார்கள் நிறுத்தும் அளவிற்குக் கார் பார்கிங் எனப் பிரம்மாண்டமாக உள்ளது.

37.5 மில்லியன் டாலர் விலை

37.5 மில்லியன் டாலர் விலை

1916ல் கட்டப்பட்ட இந்த வீட்டின் விலை 37.5 மில்லியன் டாலர் மதிப்பிற்குப் பட்டியலிடப்பட்டு உள்ளது. 2017ல் எலான் மஸ்க் இந்த வீட்டை 23 மில்லியன் டாலருக்கு வாங்கினார் 4 வருட இடைவேளையில் இந்த வீட்டை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார்.

எலான் மஸ்க் திட்டம்

எலான் மஸ்க் திட்டம்

எலான் மஸ்க் அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியில் புதிய டெஸ்லா தொழிற்சாலை கட்ட துவங்கிய முதல் தனது வீட்டையும், தலைமை அலுவலகத்தையும் சான் பிரான்சிஸ்கோ பகுதியிலிருந்து டெக்சாஸ் பகுதிக்கு மாற்றம் செய்யத் திட்டமிட்டு வருகிறார். இந்த வீட்டின் விற்பனையும் இதற்காகவே பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: elon musk tesla spacex
English summary

Elon Musk selling last home: 47-acre 6 bedroom home listed for $37.5 million in zillow

Elon Musk selling last home: 47-acre 6 bedroom home listed for $37.5 million in zillow
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X