கூகுள், மைக்ரோசாஃப்டில் கூட இப்படி செய்கிறார்களா? H-1B விசா ஊழியர்கள் சம்பள பிரச்சனை!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்காவுக்கு போய் செட்டில் ஆகப் போறேன்... என எத்தனை பேர் சொல்லிக் கேட்டு இருப்போம். ஏன் அமெரிக்காவுக்குப் போகிறார்கள் எனக் கேட்டால், நல்ல சொகுசான வாழ்கை, கை நிறைய சம்பளம் என அடுக்குவார்கள்.

 

ஆனால் இப்போது அங்கு நிலைமை முன்பு போல இல்லை. குறிப்பாக H-1B விசா வாங்கி அமெரிக்காவுக்குச் சென்று வேலை பார்ப்பவர்களின் நிலை கொஞ்சம் மோசமாகவும், நியாயமற்றதாகவுமே இருக்கிறது.

அதைத் தான் பிசினஸ் ஸ்டாண்டர்ட் பத்திரிகை விளக்கி இருக்கிறது.

என்ன பிரச்சனை

என்ன பிரச்சனை

H-1B விசா ஒரு குடியேற்ற விசா அல்ல. வெறுமனே இந்த விசாவை வாங்கிக் கொண்டு அமெரிக்காவில் சிறப்புத் திறன் தேவைப்படும் வேலைகளை 3 வருடம் பார்த்துவிட்டு ஊருக்கு வந்துவிட வேண்டியது தான். இந்த விசாவின் கீழ் இந்தியர்கள் தான் அதிகம் அமெரிக்காவில் வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த விசாவின் கீழ் வேலைக்கு எடுக்கப்படுபவர்களுக்கு, சராசரி சம்பளத்தை விட குறைவான சம்பளம் தான் கொடுக்கிறார்களாம்.

சராசரி சம்பளம்

சராசரி சம்பளம்

உதாரணத்துக்கு அமெரிக்காவில் ஆசிரியர்களுக்கு சராசரியாக 100 ரூபாய் சம்பளம் கொடுக்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். ஆனால் H-1B விசாவின் கீழ் ஒருவர் ஆசிரியரானால் 100 ரூபாய்க்குக் கீழ் 75 ரூபாயோ, 80 ரூபாயோ தான் சம்பளமாகக் கொடுக்கிறார்கள். இந்த முக்கிய பிரச்சனையை இப்போது தான் கவனத்தில் கொண்டு வரத் தொடங்கி இருக்கிறார்கள்.

யார் சொன்னார்
 

யார் சொன்னார்

இதெல்லாம் வெறுமனே வாட்ஸப் ஃபார்வேர்ட்களாக இருக்கும், அதெல்லாம் கிடையாது என மறுக்கிறீர்களா.? கொஞ்சம் பொருங்கள். Economic Policy Institute என்கிற அமைப்பு சார்பாக "H-1B visas and prevailing wage levels" என்கிற தலைப்பில் டேனியல் கோஸ்டா (Daniel Costa) மற்றும் ரன் ஹிரா (Ron Hira) என்பவர்கள் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் இதைப் பற்றி விரிவாகச் சொல்லி இருக்கிறார்களாம்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

H-1B விசாவில் அமெரிக்காவில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் 60 சதவிகிதத்தினருக்கு, அவர்கள் பார்க்கும் வேலைக்கு, அமெரிக்காவில் வழங்கப்படும் சராசரி சம்பளத்தை விட குறைவான சம்பளம் தான் வழங்கிக் கொண்டு இருப்பதாகச் சொல்கிறார்கள். இப்படி குறைவாக சம்பளம் கொடுக்க H-1B விசா விதிகள் அனுமதிக்கிறதாம். அதை அமெரிக்காவின் தொழிலாளர் துறை (Labor Department) மாற்றலாமாம், ஆனால் விதியை மாற்றாமல் இருக்கிறார்கள் என குறிப்பிடுகிறது அறிக்கை.

கூடுதல் செய்தி

கூடுதல் செய்தி

இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கிய விஷயம் என்ன என்றால், மேலே சொன்ன டாப் 30 கம்பெனிகளில் கணிசமான கம்பெனிகள், நேரடியாக H-1B விசா ஊழியர்களை வேலைக்கு எடுப்பதில்லை. மாறாக, அவுட் சோர்ஸிங் மாடலைப் பயன்படுத்தி, வேறு கம்பெனிகளுக்கு தங்கள் கம்பெனி சார்பாக H-1B விசா ஊழியர்களை அனுப்பி வைத்து விடுகிறார்களாம். சரி மீண்டும் சம்பள பிரச்சனைக்கு வருவோம்.

இருக்காது

இருக்காது

சார் நீங்கள் சொல்வதெல்லாம் குட்டி குட்டி கம்பெனிகளில் வேண்டுமானால் நடக்கலாம், கூகுள், ஆப்பிள், மைக்ரோசாஃப்ட் போன்ற நல்ல கம்பெனிகளுக்கு எல்லாம் போனால் இந்த மாதிரியான சம்பளப் பிரச்சனைகள் எல்லாம் வராது. H-1B விசாதாரர்கள் கை நிறைய சம்பாதிக்கலாம் எனச் சொல்கிறீர்களா..? அது தான் இல்லை.

அமெரிக்காவில் H-1B விசா

அமெரிக்காவில் H-1B விசா

2019-ம் ஆண்டில், அமெரிக்காவில் சுமாராக 53,000 கம்பெனிகள் H-1B விசா திட்டத்தைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அதில் டாப் 30 கம்பெனிகள் மட்டும் சுமாராக 3,89,000 விசாக்களில் 25 சதவிகித விசாக்களைப் வாங்கி இருக்கிறார்களாம். இந்த டாப் 30 கம்பெனிகளில், அமேசான், ஆப்பிள், கூகுள், மைக்ரோசாஃப்ட்... போன்ற கம்பெனிகள் வரும்.

சம்பள லெவல்

சம்பள லெவல்

லெவல் 1,

லெவல் 2,

லெவல் 3,

லெவல் 4

என மொத்தம் நான்கு சம்பள லெவல்கள் இருக்கின்றன. இதில் லெவல் 1 & லெவல் 2 இரண்டுமே, ஒரு குறிப்பிட்ட வேலைக்கு அமெரிக்காவில் வழங்கப்படும் சராசரி சம்பளத்தை விட குறைவான சம்பளத்தை குறிக்கும். லெவல் 3 சராசரி சம்பளத்தைக் குறிக்கும். லெவல் 4 சராசரி சம்பளத்தை விட அதிகம் வாங்குகிறார்கள் என்பதைக் குறிக்கும் என்கிறார்கள் அறிக்கையை தயார் செய்த ஆராய்ச்சியாளர்கள்.

பெரிய கம்பெனிகள்

பெரிய கம்பெனிகள்

இப்போது கம்பெனி உதாரணத்துக்குப் போவோம். நமக்கு எல்லாம் பிடித்தமான பில் கேட்ஸின் மைக்ரோசாஃப்ட் கம்பெனியில் H-1B விசாதாரர்களில் 77 % ஊழியர்கள் லெவல் 1 & லெவல் 2 சம்பளம் தான் வாங்கிக் கொண்டு இருக்கிறார்களாம்.

அவ்வளவு ஏன் கூகுளில் கூட 54 % H-1B விசாதாரர்களுக்கு லெவல் 1 & 2 சம்பளம் தான் என்றால் பிரச்சனை புரியும்.

யோசியுங்கள்

யோசியுங்கள்

அமெரிக்காவுக்குச் சென்றால், எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்கிற நல்ல வார்த்தையைக் கூட இப்போது சொல்ல முடியவில்லை. அந்த அளவுக்கு சம்பள வேறுபாட்டை அப்பட்டமாகப் பார்க்க முடிகிறது. இதை இனியாவது அமெரிக்க கனவு காணும் நம் நண்பர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதோடு ட்ரம்ப் வேறு அமெரிக்க வேலைகள் அமெரிக்களுக்கே என முழக்கம் போட்டுக் கொண்டு இருக்கிறார் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Even Google Microsoft paid less than median salary to many H-1B visa employees

Even the worlds best companies like Microsoft and Google is paid less than the median salary to many H-1B visa employees in 2019.
Story first published: Wednesday, May 6, 2020, 17:28 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X