அடுத்தடுத்து இணையத்தில் கசியும் தகவல்கள்.. பேஸ்புக் பயனர்களின் தகவல்களும் வெளியானதா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய இளைஞர்களின் கையில் என்ன இருக்கிறதோ இல்லையோ நிச்சயம் ஸ்மார்ட்போன் உள்ளது. அந்த ஸ்மார்ட்போனிலும் பேஸ்புக் என்பது இல்லாமல் இருக்காது.

 

இப்படி பட்டிதொட்டியெல்லாம் பரவிக் கிடக்கும் பேஸ்புக் பயனர்களின் தகவல்கள், இணையத்தில் கசிந்துள்ளதாக தகவல்கள் வெளியகியுள்ளன.

அதுவும் 500 மில்லியன் பயனர்களின் தகவல்கள் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

என்னென்ன தகவல்கள்

என்னென்ன தகவல்கள்

இப்படி வெளியானதாக கூறப்படும் பயனர்களின் தகவல்களில் மின்னஞ்சல் முகவரி, பெயர், பிறந்ததேதி, இருப்பிடம், பேஸ்புக் ஐடி, மொபைல் எண் உள்ளிட்ட 106 நாடுகளை சேர்ந்த பலரின் தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிகிறது. இந்த தகவல்கள் ஹோக்கர்களின் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிக்கலில் பேஸ்புக்

சிக்கலில் பேஸ்புக்

ஏற்கனவே பேஸ்புக் பயனர்களின் தகவல்கள் பற்றிய சிக்கல் இருந்து வரும் நிலையில், தற்போது இப்படியொரு செய்தியும் வந்துள்ளது. எனினும் சில நிபுணர்கள் இந்த தகவல் கசிவு என்பது பழையது. கடந்த 2019ல் சரி செய்யப்பட்ட சிக்கலில் இருந்து வந்தது என்றும் கூறுகின்றனர். எனினும் உண்மை என்னவென்று, எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை.

மொபிகுவிக் தரவும் லீக்
 

மொபிகுவிக் தரவும் லீக்

கடந்த வாரத்தில் தான் முன்னணி ஃபைனான்ஷியல் நிறுவனமான மொபிகுவிக் நிறுவனத்தின் பயனர்களின் தகவல்கள், பெயர், பான் எண், ஆதார எண், மற்ற கேஓய்சி விவரங்கள் டார்க் வெப் இணையத்தில் கசிந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிவு தரவு லீக்காக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஏனெனில் தற்போது 10 கோடிக்கும் அதிகமான மொபிகுவிக் வாடிக்கையாளர்களின் தரவுகள் டார்க் வெப்பில் விற்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிபுணர்களின் கருத்து?

நிபுணர்களின் கருத்து?

இந்த தரவுகள் லீக் விஷயத்தினை மொபிகுவிக் நிறுவனம் மறுத்தாலும், பிரெஞ்சு பாதுகாப்பு ஆராச்சியாளார் ராபர்ட் பாப்டிஸ் அல்லது எலியட் ஆண்டர்சன் உட்பட சில ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதில் மெயில் ஐடிக்கள், மொபைல் எண்கள், பெயர்கள், முகவரிகள், பாஸ்வேர்டு, ஜிபிஎஸ் லோகேஷன்ஸ் உள்ளிட்ட பல தனிப்பட்ட தகவல்களும் 8 terabytes அளவு திருடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பயனர்கள் எச்சரிக்கை

பயனர்கள் எச்சரிக்கை

ஆக இதுபோன்ற தகவல்கள் உண்மையா என்று தெளிவாக தெரியாவிட்டாலும், சமூக வலைதளங்களில் சுயவிவரங்களை பகிரும்போது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. அதோடு வங்கி சம்பந்தமான விவரங்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். அடிக்கடி வங்கிகளில் அப்டேட் செய்து கொள்வது மிக நல்லது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Facebook data on more than 500 million accounts found online, FB said it is old

Facebook latest updates.. Facebook data on more than 500 million accounts found online, FB said it is old
Story first published: Sunday, April 4, 2021, 20:06 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X