அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாக பேஸ்புக்கின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அமெரிக்க காங்கிரஸ் கமிட்டி நடத்திய விசாரணையில் சற்று தடுமாறித் தான் போயுள்ளார் எனலாம்.
ஏனெனில் பேஸ்புக் நிறுவனத்தின் மெயில்கள் தங்களுக்கு வரும், உள்மின்னஞ்சல்களை கையகப்படுத்தியதாகவும் அல்லது சேதப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஹவுஸ் ஜூடிசரி (House Judiciary Committee's) கமிட்டியின் நம்பிக்கையற்ற குழு பேஸ் புக் நிறுவனத்தின் மின்னஞ்சல்களைப் பெறுவதாக தோன்றியுள்ளதாக தெரிவித்துள்ளது. ஏனெனில் இது மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் பேஸ்புக் நிர்வாகிகளிடமிருந்து ஏராளமான (screenshots) கடிதத் தொடர்புகளை வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது.

நிறுவனத்தினை விரிவாக்கம் செய்ய தீய வழிகள்
அமெரிக்க காங்கிரஸ் இந்த கமிட்டிக்கு தலைமை தாங்கும் ஜனநாயகவாதி டேவிட் சிசிலின் கூறுகையில், ஓராண்டு காலமாக நடத்தப்பட்ட விசாரணையில் சில ஆன்லைன் தளங்கள், தங்கள் நிறுவனத்தை விரிவாக்கம் செய்ய எவ்வாறு தங்கள் அதிகாரத்தை தீய வழிகளில் பயன்படுத்தினார்கள் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

லிஸ்டில் இவர்களும் உண்டு
இந்த சட்ட சிக்கலில் பேஸ்புக் மட்டும் அல்ல, தங்களது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக, உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களான அமேசான், கூகுள், ஃபேஸ்புக், ஆப்பிள் ஆகியவற்றின் தலைவர்கள் புதன்கிழமையன்று வாஷிங்டன் சட்ட உறுப்பினர்கள் முன்பு ஆஜராகியுள்ளனர். இந்த விசாரனையானது பெரும் நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகளை அதிகமாக்கி, தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்று கருதப்படும் நிலையில் வந்துள்ளது.

சட்ட விரோதமாக எதையும் செய்யவில்லை
இது ஒரு புறம் எனில், பேஸ்புக்கின் மார்க் ஜூக்கர்பெர்க், அமேசான் தலைவர் ஜெஃப் பெசோஸ், கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை மற்றும் ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிக் குக் ஆகியோரும் இந்த குழுவில் உள்ளனர். ஆனால் இவர்களோ தாங்கள் சட்டவிரோதமாக எதையும் செய்யவில்லை என்று வலியுறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கூகுள் மீதும் குற்றச்சாட்டு
அதுமட்டும் அல்ல, யெல்ப் போன்ற சிறு நிறுவனங்களிடம் இருந்து தரவுகள் மற்றும் உள்ளடகங்களை திருடுவதாக கூகுள் மீது சட்ட உறுப்பினர்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இதனால், பயனாளர்கள் வேறு தளங்களுக்கு செல்லாமல், தங்கள் தளத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கூகுள் நினைப்பதாக கூறப்படுகிறது.

பல குற்றச்சாட்டுகள்
அதோடு அமேசானில் விற்பனையாளர்களை நடத்தும் விதம் குற்றம் சாட்டப்பட்டது. மேலும் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் போன்ற போட்டி நிறுவனங்களை ஃபேஸ்புக் வாங்கியது, ஆப்பிள் ஆப் ஸ்டோர் விவகாரம் என இந்த நிறுவனங்கள் மீது பல குற்றச்சாட்டுகள் இந்த விசாரணையில் வைக்கப்பட்டன. ஐந்து மணி நேரம் நடந்த இந்த விசாரணையில், சில நிறுவனங்கள் பிரிக்கப்பட்டு, ஒழுங்குப்படுத்தப்பட வேண்டும் டேவிட் சிசிலின் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

இது பிரச்சனை தான்
பேஸ்பு புக் நிறுவனத்தின் தலைவர் மார்க், கடந்த 2012லியே இந்த வணிகம் மிகப்பெரியது. அவை மிகப்பெரிய அளவில் வளர்ந்தால், அவை எங்களுக்கு இடையூறை விளைவிக்கும் என்றும், இன்ஸ்டாகிராமினை வாங்குவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே தெரிவித்து இருந்ததாக ஒர் அறிக்கை கூறுகின்றது.