2020ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபரான டொனால்டு டிரம்ப்-ஐ, ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளரான ஜோ பிடன் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, ஜோ பிடனின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் எலக்டோரல் காலேஜ் வாக்கு எண்ணிக்கை நடத்துக் கொண்டிருந்த போது இதை எதிர்க்கும் வகையிலும், டிரம்ப் வெற்றிபெற்றதாக அறிவிக்க வேண்டுமென அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் டிரம்ப் ஆதரவாளர்கள் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டனர்.
இந்தக் கலவரத்தில் 6 பேர் உயரிழிந்த நிலையில் அமெரிக்க வரலாற்றில் இது கருப்பு நாளாக அறிவிக்கப்படும் அளவிற்கு அமெரிக்கத் தலைவர்களும், உலக நாடுகளின் அரசியல் தலைவர்களும் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் கலவரம் செய்ய முன்கூட்டியே பணக் கொடுத்துத் தூண்டப்பட்டு உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. அதுவும் யாருக்கும் பரிமாற்றம் ரகசியமாக இருக்க வேண்டும் என்பதற்காகக் கிரிப்டோகரன்சி வாயிலாகப் பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

22 கிரிப்டோகரன்சி கணக்கு
கிரிப்டோகரன்சி ஆய்வு ஸ்டார்ட்அப் நிறுவனமான Chainalysis வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், அமெரிக்க நாடாளுமன்றத்தில் கலவரம் துவங்கும் முன் சுமார் 22 கிரிப்டோகரன்சி கணக்கில் சுமார் 5,00,000 டாலர் மதிப்பிலான பிட்காயின் பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதில் பெரும்பாலான கணக்குகள் வலதுசாரி ஆர்வலர்களும், இண்டர்நெட் பிரபலங்கள் ஆகும் என இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

நியூயார்க் ஸ்டார்ட்அப்
மேலும் இந்தப் பரிமாற்றத்தை டிஜிட்டல் தளத்தில் பண மோசடி மற்றும் பணச் சலவையில் ஈடுபடும் ஒரு நியூயார்க் ஸ்டார்ட்அப் நிறுவனம் பிரான்ஸ் நாட்டில் இருந்து டிசம்பர் 8ஆம் தேதி பெற்ற 28.15 பிட்டியினை கொண்டு இந்தப் பரிமாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தகவல்களை முதலில் யாஹூ நியூஸ் தளம் தான் வெளியிட்டது, இதன் பின்பு Chainalysis ஆய்வு முடிவுகளையும் சேர்த்து வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இறந்த மென்பொருள் வல்லுனர்
மேலும் பிரான்ஸ் நாட்டில் இருந்து நியூயார்க் ஸ்டார்ட்அப் நிறுவனத்திற்கு யார் பிட்காயின் அனுப்பினார் என்ற தகவல்களையும் Chainalysis கண்டுப்பிடித்துள்ளது. அனுப்பிவர் இறந்த மென்பொருள் வல்லுனர் என்றும் இந்நிறுவனத்தின் ஆய்வு முடிவுகளில் தெரிவித்துள்ளது.

யூடியூப் பிரபலம்
இதில் Nick Fuentes என்பவருக்கு 13.5 பிட்காயின் அதாவது 2,50,000 டாலர் மதிப்பிலான கிரிப்டோகரன்சி பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. Nick Fuentes ஒரு யூடியூப் பிரபலம், இவரது வெறுப்பு பேச்சுக் காரணமாகக் கடந்த வருடம் யூடியூப் தளத்தில் தடை செய்யப்பட்டார்.