பாக்ஸ்கான் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஷார்ப் நிறுவனம் தோஷிபா நிறுவனத்தின் கணினி உற்பத்தி பிரிவை வாங்க முடிவு செய்துள்ளதாகவும், தனிப் பிராண்டு மட்டும் இல்லாமல் மொபைல் போன் போன்று பிற பிராண்டுகளுக்கு உற்பத்தி செய்து அளிக்கும் திட்டம் உள்ளதாகவும் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
தோஷிபா நிறுவனம் 80% தொழிற்சாலையினை 4 பில்லியன் யென் அதாவது 36 மில்லியன் டாலருக்கு ஷார்ப் நிறுவனத்திற்கு விலை போகியுள்ளது என்றும், இந்த விற்பனை 2018 அக்டோபர் 1ம் தேதி முடிவுக்கு வரும் என்றும் செவ்வாய்க்கிழமை அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

தோஷிபா
தோஷிபா நிறுவனம் லேபாட்ம் மற்றும் டாப் கணினிகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது. இரண்டு நிறுவனங்கள் இந்த டீலினால் தங்களது வருவாயில் தாக்கம் இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

அணு ஆற்றல் நிறுவனம்
தோஷிபா நிறுவனம் அணு ஆற்றல் துணை நிறுவனத்தினைத் துவங்கிய பிறகு திவால் ஆனதால் தான் இந்த விற்பனைய்க்கு அடிபணிந்துள்ளது.

ஷார்ப்
ஷார்ப் நிறுவனம் 2010-ம் ஆண்டுத் தங்கலது கணினி உற்பத்தி செயல்பாடுகளை மூடிய நிலையில் ஃபாக்ஸ்கான் உதவியுடன் மீண்டும் சந்தைக்குள் நுழைகிறது.

நட்டம்
தோஷிபா நிறுவனம் கடந்த மூன்று நிதி ஆண்டுகளாக 97 பில்லியன் டாலர் நட்டத்தினைச் சந்தித்துள்ளது, விற்பனையும் 75 சதவீதம் அரிந்துள்ளது என்று நிறுவன தரவுகள் கூறுகின்றன.

பாக்ஸ்கான்
பாக்ஸ்கான் நிறுவனத்தின் மிகப் பெரிய வாடிக்கையாளராக உள்ள ஆப்பிள் தங்களது ஆர்டர்களைக் குறைத்து வரும் நிலையில் புதிய வணிகங்கள் ஃபாக்ஸ்கான் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.