3,000 ஊழியர்கள் பணிநீக்கம்.. ஜெர்மன் நிறுவனம் அதிரடி முடிவு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜெர்மன் நாட்டின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான Thyssenkrupp புதன்கிழமை கொரோனா வைரஸால் ஏற்பட்ட வர்த்தகப் பாதிப்புகளைச் சமாளிக்கும் விதமான crisis package திட்டத்தின் ஒரு பகுதியாக 3000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

 

இந்தியாவில் பல பெரும் நிறுவனங்கள் கொரோனா வைரஸால் வர்த்தகப் பாதிப்பு, உற்பத்தி பாதிப்பு என எவ்வளவு பிரச்சனைகளைச் சந்தித்தாலும் யாரும் பணிநீக்கம் அறிவிக்கவில்லை, ஆனால் இந்த ஜெர்மன் நிறுவனம் மனசாட்சி இல்லாமல் 3000 பேரை பணிநீக்கம் செய்வதாக இச்சூழ்நிலையில் அறிவித்துள்ளது.

சீனா கடையைத் 'திறந்தது'.. உலகம் வீட்டில் 'முடங்கியது'..!

நீண்ட காலத் திட்டம்

நீண்ட காலத் திட்டம்

எலிவேட்டர் முதல் நீர்மூழ்கிக் கப்பல் வரையில் பல்வேறு பொருட்களைத் தயாரிக்கும் பெரு நிறுவனமான Thyssenkrupp 3000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய ஜெர்மன் நாட்டின் பெறும் ஊழியர்கள் அமைப்பான IG Metall உடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் படி அடுத்த 3 வருடத்தில் 2000 ஊழியர்களையும், மீதமுள்ள 1000 ஊழியர்களை 2026ஆம் ஆண்டுக்குள் பணிநீக்கம் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது.

ஸ்டீல் தயாரிப்பு

ஸ்டீல் தயாரிப்பு

கொரோனா வைரஸ் சர்வதேச பொருளாதாரத்தை மிகப்பெரிய அளவில் பாதித்துள்ளது நாம் எல்லோருக்கும் தெரியும். இந்தச் சூழ்நிலையில் பெரும் கட்டுமான திட்டங்கள் எதுவும் இயங்காது. இதனால் ஸ்டீல் தேவை பெரிய அளவில் குறையும். இதைக் காரணம் காட்டி தான் Thyssenkrupp குழுமம் தனது ஸ்டீல் வர்த்தகப் பிரிவில் இருந்து அதிகளவிலான ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

இந்தப் பணிநீக்கம் ஸ்டீல் உற்பத்தித் துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கணிசமாகக் குறைக்கும் என்பது Thyssenkrupp குழுமத்தின் கணிப்பு.

80 சதவீத சம்பளம்
 

80 சதவீத சம்பளம்

மேலும் தற்போது Thyssenkrupp ஜெர்மன் நாட்டின் பெறும் ஊழியர்கள் அமைப்பான IG Metall உடன் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் படி ஸ்டீல் பிரிவில் இருக்கும் ஊழியர்களின் வேலை நேரம் குறைக்கப்பட்டு அவர்களுக்கான சம்பளத்தில் 80 சதவீதம் குறைக்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது நடந்துள்ள புதிய ஒப்பந்தத்தின் மூலம் Thyssenkrupp-இன் மொத்த வர்த்தகத்தில் இருந்து சுமார் 6000 ஊழியர்கள் (பழைய பணிநீக்க முடிவுகளையும் சேர்த்து) பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாகத் தெரிகிறது.

டாடா ஸ்டீல்

டாடா ஸ்டீல்

கடந்த சில வருடங்களாகவே ஐரோப்பிய நாடுகளின் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் Thyssenkrupp-இன் ஸ்டீல் உற்பத்தி ஆலையை இந்தியாவில் டாடா ஸ்டீல் உடன் இணைத்தது. இதன் பின்பு பிரிட்டன் பிரிவு, கொரோனா பாதிப்பு எனப் பல்வேறு காரணங்களுக்காகத் தற்போது 3000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக முடிவு செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

German conglomerate Thyssenkrupp to scrap 3,000 steel jobs: coronavirus crisis

German industrial conglomerate Thyssenkrupp on Wednesday announced it was scrapping 3,000 jobs in its troubled steel unit as part of a coronavirus "crisis package". The elevator-to-submarines group said it had reached a deal with Germany's powerful IG Metall union to cut 2,000 jobs over the next three years and another 1,000 by 2026.
Story first published: Thursday, March 26, 2020, 7:14 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X