கொரோனா: ஜெர்மனி பொருளாதாரம் 10% மாயமாகும்.. அப்ப இந்தியா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எங்குத் திரும்பினாலும் கொரோனா தான், சாமானியர்கள் முதல் பெரும் பணக்காரர்கள் வரையில் அனைவரையும் பயமுறுத்தி வருகிறது என்றால் மிகையில்லை.

 

தற்போது வல்லரசு நாடுகளையும் கொரோனா பாதித்துள்ளது என்பது தான் மிகவும் வருத்தமான விஷயம்.

வெள்ளிக்கிழமை காலை நிலவரத்தின் படி, உலகிலேயே அமெரிக்காவில் தான் அதிகமாகக் கொரோனா பாதிக்கப்பட்ட (Positive cases) மக்கள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. அதேபோல் ஜெர்மனி தான் அதிகளவிலான பொருளாதாரச் சரிவைச் சந்திக்கும் எனவும் கூறப்படுகிறது.

ஜெர்மனி

ஜெர்மனி

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் முக்கியமான ஒரு நாடு ஜெர்மனி, உலகில் பிற நாடுகளைப் போலவே ஜெர்மனியிலும் கொரோனாவின் பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கிறது. இதன் எதிரொலியாக ஜெர்மனியின் மொத்த தொழிற்துறையும் தற்போது முடங்கியுள்ளது மட்டும் அல்லாமல் பங்குச்சந்தையும் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது.

பொருளாதாரம்

பொருளாதாரம்

இதன் எதிரொலியாக நடப்பு நிதியாண்டில் ஜூன் மாதம் வரையில் ஜெர்மனி நாட்டில் லாக்டவுன் தொடர்ந்தால் கண்டிப்பாக அந்நாட்டின் பொருளாதாரம் 10 சதவீதம் வரையில் பாதிக்கும் என ஜெர்மன் பொருளாதார அமைப்பு கணித்துள்ளது.

தொழிற்துறை

தொழிற்துறை

தற்போதைய நிலையில் ஜெர்மன் நாட்டின் தொழிற்துறை சுமார் 18 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. இந்தத் தருணத்தில் தொழிற்துறையின் பாதிப்பு கண்டிப்பாக இந்த வருடத்தின் இறுதி வரையில் தொடரும் என எதிர்பார்ப்பதாகவும் ஜெர்மன் பொருளாதார அமைப்புக் கூறுகிறது.

1.1 டிரில்லியன் யூரோ
 

1.1 டிரில்லியன் யூரோ

ஜெர்மன் நாட்டின் பொருளாதாரத்தைக் கடுமையான பாதித்துள்ள கொரோனாவை எதிர்கொள்ளவும், மக்கள் மத்தியில் பரவுவதைச் சமாளிக்கவும் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சுமார் 1.1 டிரில்லியன் யூரோ தொகையைச் செலவு செய்ய உள்ளதாகத் திட்டமிட்டு அதற்கான ஒப்புதலையும் பெற்றுள்ளது.

இதேபோல் அமெரிக்காவும் சுமார் 2 டிரில்லியன் டாலர் அளவிலான தொகையைச் செலவு செய்ய முடிவு செய்து ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியா

இந்தியா

தொழிற்துறையிலும், வர்த்தகத்தில் சிறந்து விளங்கும் வல்லரசு நாடுகளுக்கு இணையான ஒரு வளத்தைக் கொண்டுள்ள ஜெர்மனியிலேயே 10 சதவீத பொருளாதார வளர்ச்சி சரிவு என்றால், ஏற்கனவே பொருளாதார வளர்ச்சியில் 8 வருடப் பின்தங்கியிருக்கும் இந்தியாவில் எப்படியிருக்கும்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3வது கட்டத்தைத் தாண்டிவிட்டால் அதில் இருந்து மீண்டு வருவது நம்நாட்டிற்கு மிகவும் கடினம். இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 1 அல்லது 2 சதவீதத்திற்கும் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

German economy may shrink by 10% in 2020 due to coronavirus

The German economy could shrink by 10% this year due to coronavirus in a worst case scenario whereby the lockdown continues until the end of June, the German Economic Institute (IW) predicted on Thursday.
Story first published: Friday, March 27, 2020, 19:20 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X