சீனாவுக்கு சரியான அடி.. கூகுள் 2,500 மேற்பட்ட சீனாவுடன் பிணைக்கப்பட்ட யூடியூப் சேனல்கள் நீக்கம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்காவின் சிறந்த கார்ப்பரேட் நிறுவனமான கூகுள் நிறுவனம், தனது சிறந்த வீடியோ தளமான யூடிபில் உள்ள தவறான வீடியோக்களை களைவதற்கான ஒரு முயற்சில் இறங்கியுள்ளது.

Google Bans Almost 2,600 Chinese Youtube Channels | Oneindia Tamil

அதன் படி, சீனாவுடன் பிணைக்கப்பட்டுள்ள 2,500க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்களை நீக்கியுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.

ஆல்பாஃபெட்டிற்கு சொந்தமான இந்த நிறுவனம், ஏப்ரல் முதல் ஜூன் மாதத்திலேயே பல சேனல்கள் அகற்றப்பட்டதாக தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையினால் பல யூடியூப் சேனல்களின் வருவாய் முடங்கலாம் என்றும் கூறப்படுகிறது. எனினும் இது குறித்தான விரிவான அறிக்கை எதுவும் வெளியாகவில்லை.

அதிரடி நடவடிக்கை
 

அதிரடி நடவடிக்கை

இந்த சேனல்கள் பொதுவாக அரசியல் சாராத உள்ளடக்கம் கொண்ட வீடியோக்களை என்று இடுகையிட்டன. ஆனால் ஒரு சிறிய துணைக் குழுக்கள் அரசியலைத் தொட்டது. இந்த நிலையில் கூகுள் நிறுவனம் காலாண்டு அறிக்கையில் தவறான தகவல் நடவடிக்கைக் குறித்து கூறியிருந்தது. இந்த நிலையில் இப்படி அதிரடியான நடவடிக்கை வந்துள்ளது எனலாம்.

பகுப்பாய்வு நிறுவனத்தால் அடையாளம்

பகுப்பாய்வு நிறுவனத்தால் அடையாளம்

எனினும் இது குறித்து எந்த சேனல்களையும் கூகுள் நிறுவனம் அடையாளம் காணவில்லை என்றும் கூறப்படுகிறது. சமூக ஊடக பகுப்பாய்வு நிறுவனமான கிராஃபிகாவால் அடையாளம் காணப்பட்ட சேனல்களாகும். எனினும் இது குறித்து அமெரிக்க சீன தூதரகம் இதற்கு எதுவும் பதிலளிக்கவில்லை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது. பெய்ஜிங் கடந்த காலத்திலேயே இதுபோன்ற குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் கவலை

அமெரிக்காவில் கவலை

ரஷ்ய அரசாங்கத்துடன் தொடர்புடைய நடிகர்கள் சமூக ஊடக சுற்றுச்சூழல் அமைப்பில் நூறாயிரக்கணக்கான தவறான செய்திகளை அனுப்பியபோது, வெளிநாட்டு நடிகர்களால் விதைக்கப்பட்ட தகவல்கள் 2016ல் ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர், அமெரிக்கா அரசியல் வாதிகள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்களுக்கு ஒரு கவலையாக வெளிப்பட்டது.

ஆப்பிள் அதிரடி நடவடிக்கை
 

ஆப்பிள் அதிரடி நடவடிக்கை

மேலும் இந்த அதிரடி நடவடிக்கையானது ஈரான் மற்றும் ரஷ்யாவுடன் தொடர்புடைய வீடியோக்களையும் கருத்தில் எடுத்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக ஆப்பிள் நிறுவனம் இது போன்ற அதிரடி நடவடிக்கையினை எடுத்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக படிப்படியாக அரசு தரப்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அமெரிக்க தொழில் நுட்ப நிறுவனங்களும் நடவடிக்கையினை எடுத்து வருகின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Google deleted more than 2,500 youtube channels over disinformation

Alphabet owned Google deleted more than 2,500 youtube channels over disinformation
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?