ஐரோப்பிய சந்தையில் புதிய நம்பிக்கை பிறந்தது.. கிரீஸ் நாட்டிற்கு 10.3 பில்லியன் யூரோ கடன் ஒப்புதல்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரஸ்ஸல்ஸ்: திவாலாகும் நிலையில் இருந்த கிரீஸ் நாட்டிற்குப் பல கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பின் 19 ஐரோப்பிய நிதியமைச்சர்கள் ஒப்புதல் அளிக்கப்பட்டுச் சர்வதேச நிதி அமைப்புகள் பிணை எடுப்பு நிதியை (Bailout Funds) அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது.

 

பல்வேறு இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீண்டு வந்துள்ள கிரீஸ் நாட்டிற்கு இந்தப் பிணை எடுப்பு நிதி மிகப்பெரிய அளவில் உதவும்.

கிரீஸ் அரசு ஐரோப்பிய தலைவர்களிடம் கொடுத்துள்ள வளர்ச்சி திட்டங்களின் அடிப்படையில், இந்நாட்டிற்கு 10.3 பில்லியன் யூரோ அளவிலான பிணை எடுப்பு நிதி அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

(உங்கள் மின்னஞ்சலைத் தேடி வரும் வர்த்தக உலகம்..!)

அலெக்சிஸ் சிப்ரஸ்

அலெக்சிஸ் சிப்ரஸ்

அதிகக் கடன் வைத்துள்ள காரணமாக ஐரோப்பிய நாடுகளில் இருந்து கிரீஸ் நாட்டை வெளியேற்றப் பிற ஐரோப்பிய நாடுகள் முடிவெடுத்த நிலையில், மக்கள் மத்தியில் வளர்ச்சிக்கான நம்பிக்கையை அளித்து மீண்டும் பொதுத்தேர்தலில் கிரீஸ் நாட்டின் பிரதமராகப் பதவியேற்றினார் அலெக்சிஸ் சிப்ரஸ்.

வளர்ச்சி திட்டங்கள்

வளர்ச்சி திட்டங்கள்

கடன் நெருக்கடியில் சிக்கித்தவித்து வரும் கிரீஸ் நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் முக்கிய வளர்ச்சி திட்டங்களை முன்வைத்து ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பில் கிரீஸ் வளர்ச்சிக்கான நிதியுதவி கோரியது.

19 ஐரோப்பிய நிதியமைச்சர்கள்
 

19 ஐரோப்பிய நிதியமைச்சர்கள்

கிரீஸ் நாட்டின் வளர்ச்சி திட்டங்களை ஆய்வு செய்த ஐரோப்பிய தலைவர்கள் மற்றும் நிதியமைச்சர்கள் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், சர்வதேச நிதி அமைப்புகள் இந்நாட்டிற்கு 10.3 பில்லியன் யூரோ நிதியுதவியை அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது.

இதில் முதல் கட்டமாக 7.5 பில்லியன் யூரோ தொகை அடுத்த மாத மத்தியில் அளிக்கவும் சர்வதேச நிதி அமைப்புகள் உறுதியளித்துள்ளது.

11 மணிநேர போராட்டம்

11 மணிநேர போராட்டம்

கிரீஸ் நாட்டிற்கான 10.3 பில்லியன் யூரோ பிணை தொகைக்கு ஒப்புதல் அளிக்கச் சுமார் 11 மணிநேர தொடர்ந்து ஆலோசனை மற்றும் விவாதம் செய்யப்பட்டது. இக்கடன் ஒப்புதல் மூலம் கிரீஸ் நாட்டுத் தனது புதிய வளர்ச்சி பாதையை அமைக்கவும், கடன் அளவைக் குறைக்கும் பணிகளைக் கூடிய வரிவைவில் துவங்கும் என்று ஐரோப்பிய கூட்டமைப்பின் கமிஷ்னர் Pierre Moscovici கூறினார்.

ஐரோப்பிய பொருளாதாரம்

ஐரோப்பிய பொருளாதாரம்

கிரீஸ் நாட்டிற்குக் கடன் ஒப்புதல் கிடைக்கப்பட்ட நிலையில், ஒட்டுமொத்த ஐரோப்பிய பொருளாதாரமும் பாதுகாப்பாக நிலையை நோக்கிய பயணிக்கத் துவங்கும் என ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைவர் டொனால்டு டஸ்க் தெரிவித்தார்.

மொத்த கடன்

மொத்த கடன்

தற்போதைய நிலையில் கிரீஸ் நாட்டின் மொத்த கடன் அளவு 333 பில்லியன் யூரோவாக உள்ளது.

கிரீஸ் நாட்டைக் குறித்து முக்கிய செய்திகளை தெரிந்துக்கொள்ள இதை கிளிக்கவும்..

நியூஸ்லெட்டர்

நியூஸ்லெட்டர்

உங்கள் மின்னஞ்சலைத் தேடி வரும் வர்த்தக உலகம்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Greece gets new funds approved by eurozone creditors

Greece has won an essential batch of bailout funds from international creditors following agreement among the 19 eurozone finance ministers and can start looking forward to debt relief in the future.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X