அமெரிக்காவில் அமலுக்கு வருகிறது எச்-4 விசா தடை சட்டம்... 70,000 இந்தியர்களுக்கு வந்த புது சிக்கல்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எச்1பி விசா மூலம் அமெரிக்காவில் வேலை செய்யும் ஊழியர்களின் மனைவிக்கான எச்-4 விசா தடை குறித்த சட்டம் ஈயற்றும் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது என்று டொனால்டு டிரம்ப் தலைமையான அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

அமெரிக்க அரசு கொண்டு வர இருக்கும் இந்த எச்-4 விசா தடை சட்டத்தால் ஆயிரம் கணக்கான இந்திய பெண்கள் அமெரிக்காவில் வேலை வாய்ப்பினை இழக்கும் நிலை ஏற்படும்.

எச்-4 விசா

எச்-4 விசா

எச்-1பி விசா பயன்படுத்தி அமெரிக்காவில் பணிபுரிந்து வரும் வெளிநாட்டவர்கள் அவர்களது மணைவி அல்லது அவர்களுடன் இரத்த பந்தங்களாக உள்ளவர்களை எச்-4 விசா கீழ் பணி செய்ய அனுமதிக்கும்.

எச்-1பி விசாவை அதிகளவில் இந்திய ஐடி ஊழியர்கள் பயன்படுத்துவதை போன்றே பலர் எச்-4 விசாவை பயன்படுத்தி தங்களைச் சார்ந்து உள்ளவர்களை அமெரிக்க அழைத்துச் செல்லப்பட்டு அங்கு பணிபுரிந்து வருகின்றனர்.

 

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

எச்-4 விசா வாயிலாகவும் வெளிநாட்டவர்கள் அமரிக்கா குடிபெயர்ந்து அதிகளவில் பணிபுரிந்து வருவதாகவும், இவர்களாலும் அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பு பாதுகாப்பு பறிபோவதாக அதற்கு எதிராக டிரம்ப் தலைமையிலான அரசு கடும் சட்டங்களைக் கொண்டு வர இருக்கிறது.

 இந்தியர்கள் பாதிப்பு
 

இந்தியர்கள் பாதிப்பு

அமெரிக்க அரசு எச்-1பி விசாவிற்கு எடுத்து வரும் நடவடிக்கையினால் ஏற்கனவே இந்தியர்கள் பல வகையில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் எச்-4 விசா தடையினை அடுத்துக் குறைந்து 70,000 இந்தியர்களுக்கு அமெரிக்காவில் வேலை வாய்ப்பு பறிபோக வாய்ப்புள்ளது.

ஒபாமா

ஒபாமா

எச்-4 விசா முறையானது ஒபாமா அரசால் கொண்டு வரப்பட்ட குடியேற்ற சட்டமாகும். அப்பேதில் இருந்து ஒபாமாவை டிரம்ப் கடுமையாக ஒபாமாவின் நடவடிக்கைகளை விமர்சித்து வந்த நிலையில் அவர் கொண்டு வந்த சட்டத்தினை முழுமையாக நீக்க முடிவு செய்துள்ளார்.

 தகவல்

தகவல்

எச்-4 விசா முறை நீக்க நடவைக்கான சீர்திருத்த சட்டங்கள் இறுதி நிலையை எட்ட உள்ளதாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை நீதிமன்றத்தில் தெரிவித்ததனை அடுத்து அதன் நிலை தெரியவந்துள்ளது.

எப்போது தடை அறிவிப்பு வரும்?

எப்போது தடை அறிவிப்பு வரும்?

மேலும் எச்-4 விசா தடை குறித்து இறுதி அறிவிப்பை அமெரிக்க அரசு ஜூன் மாதம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபக்கம் எச்-1பி விசா விதிமுறைகளை அமெரிக்க அரசு கடுமைபடுத்தியும் வருகிறது.

இந்தியா

இந்தியா

2017-ம் ஆண்டு இந்தியர்கள் எச்-1பி விசா பயன்படுத்தி அமெரிக்கா செல்வதும் குறைந்துள்ளது. ஆனால் பிற நாடுகளை விட இந்தியர்கள் அதிகளவில் எச்-1பி விசா பயன்படுத்தி அமெரிக்கா சென்று வருவதால் இந்தியர்களை எச்-1பி விசா பெறுவதில் இருந்து முழுமையாகக் குறைப்பது என்பது சாத்தியமே இல்லை.

இந்திய நிறுவனங்கள்

இந்திய நிறுவனங்கள்

இந்திய ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, டெக் மகேந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் 2017-ம் ஆண்டு 6,673 எச்-1பி விசாக்களைப் பெற்றுள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

H4 visa repeal in final stage; 70,000 spouses of H1B holders at risk of losing jobs

H4 visa repeal in final stage; 70,000 spouses of H1B holders at risk of losing jobs
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X