எப்படி இந்த வணிக தலைவர்கள் தங்கள் காலை பொழுதை தொடங்குகிறார்கள் தெரியுமா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெரும்பாலான தலைவர்கள் தங்களது காலைப் பொழுதை செய்தித்தாள்கள் படிப்பதில் இருந்து தான் துவங்குவார்கள் என்று எளிதாகக் கூறிவிடலாம்.

 
எப்படி இந்த வணிக தலைவர்கள் தங்கள் காலை பொழுதை தொடங்குகிறார்கள் தெரியுமா..?

ஆனால் ஒவ்வொருவருடைய ரசனையும் வேறுவிதமாக இருக்கும் அல்லவா.

கோடீசுவரர் வாரன் பஃபெட் தனது காலை பொழுதில் 80 சதவீதம் வரை படிப்பதற்காக மட்டுமே செலவிடுகிறார் என்றால் நம்புவீர்களா.

எனவே வாருங்கள் நாம் இங்குச் சிறந்த வணிக தலைவர்களாக கருதப்படும் சிலர் தங்களது காலை பொழுதை தொடங்குகிறார்கள் என்று பார்ப்போம்.

மார்க் ஜுக்கர்பெர்க்

மார்க் ஜுக்கர்பெர்க்

ஃபேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் ஒரு நேரலை கலந்துரையாடலில் காலையில் தான் எழுந்தவுடன் கண்களுக்கான லென்ஸ் வைத்துக் கொண்டு முதலில் தனது மொபைலில் ஃபேஸ்புக் ப்ரோஃபைலினை சரிபார்த்துவிட்டே கழிவறைக்கு சென்று வருவதாகக் கூறினார்.

ஃபேஸ்புக்கில் தனக்கு வந்துள்ள தகவல்கள் மற்றும் வாட்ஸப்பில் வந்துள்ள தகவல்கள் படிப்பாராம். சாதாரணமாக இது ஒரு சில நிமிடங்களிலேயே முடிந்து விடும் என்று தெரிவித்துள்ளார்.

பஸ்ஃபீடு நிறுவனர் யோனா பீரீட்டி

பஸ்ஃபீடு நிறுவனர் யோனா பீரீட்டி

பஸ்ஃபீடு நிறுவனர் யோனா பீரீட்டி காலை 8:30 மணிக்கு எழுந்தவுடன் விளையாட்டு அல்லது வணிகம் தொடர்பான செய்திகளை தி நியூ யார்க் டைம்ஸ் இதழில் படிப்பேன் என்று ஒரு முறை கூறியுள்ளார்.

அதே போன்று ஃபேஸ்புக், டிவிட்டர் சமுக வலைத் தளங்களிலும் இன்றைய தலைமுறையினர் போன்று தகவல்களை பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஸ்டார்பக்ஸ் ஹோவர்ட் ஷூல்ட்ஸ்
 

ஸ்டார்பக்ஸ் ஹோவர்ட் ஷூல்ட்ஸ்

2006 ஆம் ஆண்டு டிவி தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தான் தினமும் சியாட்டில் டைம்ஸ், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், தி நியூ யார்க் டைம்ஸ் என மூன்று இதழ்களை தனசரி இதழ்களைப் படிப்பதாக கூறியுள்ளார். இதை இவர் 25 ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வருகிறார்.

ஜெப்ரி இம்மெல்ட்

ஜெப்ரி இம்மெல்ட்

ஜெப்ரி இம்மெல்ட் எலக்ட்ரிக் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான இவர் ஃபேஷன் பற்றிப் படிப்பதில் மிகவும் ஈடுபாடு உடையவர். ஃபினான்ஷியல் டைம்ஸ், தி நியூ யார்க் டைம்ஸ் இதழில் வணிக பகுதி, அமெரிக்கா டூடே பத்திரிக்கையில் விளையாட்டு, வணிகம் மற்றும் லைஃப் பிரிவுகளை மட்டும் படிப்பேன் என்று கூறியுள்ளார்.

ரிச்சர்ட் பிரான்சன்

ரிச்சர்ட் பிரான்சன்

விர்ஜின்.காம் இணையதளத்தின் தலைவர் ரிச்சர்ட் பிரான்சன் வாசிக்க அதிகாலை 5 மணிக்கே எழுந்து இணையதளத்தில் செய்திகள் படித்துக்கொண்டே தனது மின்னஞ்சல்களைப் படிக்க துவங்கிவிடுவாராம்.

அதிகாலையிலேயே எழுவது தனது நாளை மிகவும் அமைதியாகவும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளவும் உதவுவதாகத் தெரிவித்துள்ளார்.

வாரன் பஃபெட்

வாரன் பஃபெட்

கோடீசுவரர் வாரன் பஃபெட் வால் ஸ்ட்ரீட் ஜர்னல், ஃபினாஷியல் டைம்ஸ், தி நியூ யார்க் டைம்ஸ், யுஎஸ்ஏ டுடே, தி ஒமஹ வர்ல்ட் ஹெரால்ட் அமெரிக்கன் பேங்கர் எனக் காலையில் இவர் படிக்கும் இதழ்களின் எண்ணிக்கை நீண்டு கொண்டே போகிறது.

பில் கேட்ஸ்

பில் கேட்ஸ்

மைக்ரோசாப்ட் நிறுவன தலைவர் பில் கேட்ஸ் டெய்லி நியூஸ் டைஜிஸ்ட்டில் இருந்து குறிப்பிட்ட சில தலைப்புகள், மற்றும் பெக்‌ஷைட் ஹாத்வேயில் இருந்து பெறும் கதைகளுக்கான அலர்ட்கள் போன்றவற்றைப் படிப்பார் என்றும் இதற்கான அல்ர்ட்களை தனது இயக்குனர்கள் குழுவுடன் இருக்கும் போது கூடப் பார்ப்பார் என்று கூறுகின்றனர்.

அதுமட்டும் இல்லாமல் வால் ஸ்ட்ரீட் ஜர்னல், தி நியூ யார்க் டைம்ஸ் மற்றும் தி எக்கனாமிஸ்ட் போன்றவற்றைப் படிப்பாராம்.

சூப்பர் ஐடியா..!

10 வருடத்தில் ரூ.17 லட்சம் சேமிக்க சூப்பர் ஐடியா..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How this business men starts their daily?

How this business men starts their daily?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X