என்னங்க மோடி 158 லட்சம் கோடி இருந்தும்.. மண்ணைக் கவ்விட்டமே..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக நாடுகளின் பிராண்டு மதிப்பு குறித்த 'தேசிய பிராண்டுகள் 2018' ஆய்வறிக்கையினைப் பிராண்ட் ஃபினான்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

 

அதன் படி இந்தியாவின் பிராண்டு மதிப்பு 2018-ம் ஆண்டு உயர்ந்து இருந்தாலும் டாப் 10 நாடுகள் பட்டியலில் 8வது இடத்தில் இருந்து 9வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

இந்தியா

இந்தியா

2016-ம் ஆண்டு இந்தியாவின் பிராண்டு மதிப்பு 2,046 பில்லியன் டாலராக இருந்து வந்த நிலையில் 2018-ம் ஆண்டு 5 சதவீதம் உயர்ந்து 2,159 பில்லியன் டாலர்களாக உள்ளது. இந்தியாவின் பிராண்ட் மதிப்பு ‘ஏஏ' ஆகத் தான் உள்ளது. ஆனால் இந்தியாவைப் பின்னுக்குத் தள்ளி இத்தாலி 8வது இடத்தினைப் பிடித்துள்ளது.

அமெரிக்கா

அமெரிக்கா

தேசிய பிராண்டுகள் மதிப்புப் பட்டியலில் அமெரிக்காவின் பிராண்டு மதிப்பு 23 சதவீதம் உயர்ந்து 25,899 பில்லியன் டாலர்களாக உள்ளது. இதுவே 2016-ம் ஆண்டு 21,055 பில்லியன் டாலராக இருந்தது.

சீனா
 

சீனா

சீனாவின் பிராண்டு மதிப்பு 25 சதவீதம் உயர்ந்து 12,779 பில்லியன் டாலர் மதிப்புடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதுவே 2016-ம் ஆண்டு 10,209 பில்லியன் டாலர்களாக இருந்தது.

சிறந்து செயல்படும் தேசிய பிராண்டுகள்

சிறந்து செயல்படும் தேசிய பிராண்டுகள்

உலகின் டாப் 10 சிறந்து செயல்படும் தேசிய பிராண்டுகள் பட்டியலில் இந்தியா இடம்பெறவில்லை. சைப்ரஸ், காங்கோ ஜனநாயக குடியரசு உள்ளிட்ட நாடுகள் இந்த டாப் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன.

பிராண்ட் ராங்கிங்

பிராண்ட் ராங்கிங்

இந்தப் பிராண்ட் ராங்கிங் ஒரு நாடு எப்படிச் செயல்படுகிறது என்பது மட்டும் இல்லாமல் பிற நாடுகள் எப்படிப் போட்டி போடுகின்றன என்பதையும் கணக்கில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. சர்வதே சந்தையில் வெளிநாட்டு முதலீடுகளை அதிகளவில் ஈர்க்கும் நாடுகள், அதிகளவில் ஏற்றுமதிகளைச் செய்யும் நாடுகள், சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் நாடுகள் மற்றும் வேலைக்காக அதிகளவில் வெளிநாட்டவர்கள் செல்லும் நாடுகளைப் பொருத்து இந்த அறிக்கை தயாரிக்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India Slipped One Position And Secured 9th Rank Out of Top 10 Valuable National Brands

India Slipped One Position And Secured 9th Rank Out of Top 10 Valuable National Brands
Story first published: Monday, October 22, 2018, 12:21 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X