அதள பாதாளத்துல ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல்... வேற எங்க நம் சிங் மங் சங் சீனால தான்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹோட்டல்கள தரையில பாத்திருப்பீங்க, ஆகாயத்துல மெதக்குற மாதிரி பாத்திருப்பீங்க, ஏன் கடலுக்கு கீழ கூட பாத்திருப்பீங்க... சுரங்கத்துல பாத்திருக்கீங்களா... சீரமைக்க வேண்டிய சுரங்கத்துல ஒரு 5 ஸ்டார் ஹோட்டல பாக்குறீங்களா பாருங்க... பாருங்க... InterContinental Shanghai Wonderland இது தான் அந்த ஹோட்டலோட பெயர்.

 

இடம்

இடம்

சீன அரசாங்கம் கைவிட்ட, அதாவது தோண்டி வைத்துவிட்டு போன ஒரு சுரங்கத்தில் தான் இந்த InterContinental Shanghai Wonderland, என்கிற ஹோட்டல் கட்டப்பட்டு இருக்கிறது. இந்த ஹோட்டல் தான் உலகின் முதல் பாதாள ஹோட்டல் என்கிற பெருமையையும் தட்டிச் செல்கிறது. ஷாங்காய் விமான நிலையத்தில் இருந்து 20 கிலோமீட்டருக்கு அருகிலேயே இந்த பாதாள ஹோட்டல் இருக்கிறது. இந்த ஹோட்டலில் உயரமான தளம் தான் பூமியின் மட்டம்.

பிரமாண்டம்

பிரமாண்டம்

இந்த ஹோட்டலில் மொத்தமாக 18 தளங்கள். அதில் 16 தளங்கள் பூமிக்கு அடியிலும் இரண்டு மேல் தளங்கள் பூமிக்கு மேற்பகுதியிலும் கட்டப்பட்டு இருக்கின்றன. கடைசி மேல் தளம் பச்சை பசேலென மரங்களால் மூடப்பட்டு இருக்கிறது. இந்த 16 தளங்களில் இரண்டு தளங்களில் சுமார் 33 அடிக்கு மீன் கண்காட்சிகளும் வைக்கப்பட்டு இருக்கின்றன. மொத்த அறைகள் 336.

 வேற என்ன வசதிகள்
 

வேற என்ன வசதிகள்

336 அறைகளின் வழியாகவும் செயற்கையாக உருவாக்கப்பட்ட அருவியைக் கண்டு களிக்கும் விதமாக வடிவமைத்திருக்கிறார்கள். அதோடு வழக்கமான உணவகங்கள், நீச்சல் குளம், விளையாட்டு மைதானங்கள் எல்லாம் இருக்கின்றன. வழக்கத்துக்கு மாறாக இந்த ஹோட்டலில் பங்ஜி ஜம்பிங் மற்றும் மலை ஏற்றம் ஆகிய விளையாட்டுக்களும் இருக்கின்றன.

கட்டுமானம்

கட்டுமானம்

இந்த பாதாள ஹோட்டலை சுமார் 5000-க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் மற்றும் பணீயாளர்களைக் கொண்டு 10 ஆண்டுகளாக நிர்மாணித்திருக்கிறார்கள். புர்ஜ் கலிஃபா கட்டடத்தை நிர்மாணித்த அட்கின்ஸ் என்கிற நிறுவனம் தான் இந்த பாதாள ஹோட்டலையும் நிர்மாணித்திருக்கிறார்கள்.

பேடண்ட்கள்

பேடண்ட்கள்

இந்த கட்டுமானத்தின் முக்கிய பொறியாளர் சென் சியாசியாங் (Chen Xiaxiang) 39 டிசன்கள் மற்றும் தொழில்நுட்பங்களுக்கு பேடண்ட்களை வாங்கி இருக்கிறார்களாம். அதோடு பல்வேறு புதிய, இதுவரை உலகில் முயன்று பார்க்காத பல தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி இந்த ஹோட்டலை கட்டி இருக்கிறார்களாம். சுருக்கமாக புவி ஈர்ப்பு விசையை எதிர்த்து நிற்பது தான் இந்த ஹோட்டலின் சவாலான விஷயம்

சர்வம் நானே

சர்வம் நானே

இந்த ஹோட்டலுக்குத் தேவையான மின்சாரம், தண்ணீர் என்று பல வசதிகளையும் இந்த ஹோட்டலிலேயே தயாரிக்கப்பட்டு அல்லது இருப்பதை சுத்தீகரித்து பயன்படுத்தும் ரீதியில் இதை வடிவமைத்திருக்கிறார்கள்.

ஒரு அறைக்கு

ஒரு அறைக்கு

இதுவரை இந்த ஹோட்டலில் ஒரு நாள் தங்க என்ன செலவாகு என்பதை இதுவரை வெளியாகவில்லை. ஆனால் சில சீன வலைதளங்களில் "ஒரு நாளுக்கு இந்த ஹோட்டலில் தங்க 4000 சீன யூவான்களில் இருந்து கட்டணம் வசூலிக்கிறார்கள்" என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்திய மதிப்பில் 41,000 ரூபாய். எங்க நாட்டுல பல பேர் இந்த காச மாச சம்பளமா கூட பாக்குறதில்லையே...? வாழ்க சீனம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: china shanghai hotel
English summary

InterContinental Shanghai Wonderland world first under ground hotel in china

InterContinental Shanghai Wonderland world first under ground hotel in china
Story first published: Saturday, November 17, 2018, 18:16 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X