இனி சீனா உலகின் தொழிற்சாலையாக இருக்க முடியாது.. ஐபோன் உற்பத்தியாளர் கருத்து..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இனி சீனா உலகின் தொழில் சாலையாக இருக்க முடியாது. ஏனெனில் சீனாவில் கொரோனா தாக்கத்தின் காலத்தில், அதன் விநியோக சங்கிலியானது முற்றிலும் பாதிக்கப்பட்டது.

China இனி World’s Factory-யாக இருக்க முடியாது- IPhone Makers | Oneindia Tamil

ஆப்பிள் நிறுவனத்தின் ஒரு டஜன் சப்ளையர்களும் மற்றும் பிற தொழில்நுட்ப நிறுவனங்களும், சீனா சந்தைக்கும் அமெரிக்கா சந்தைக்குமான விநியோக சங்கிலியினை பிரிக்க திட்டமிட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா சீனாவுக்கு இடையே நடந்து வரும் வர்த்தக போரினால், சீனா உலகின் தொழில்சாலையாக இருக்கும் நேரம் முடிந்து விட்டது என நிபுணர்கள் மத்தியில் கூறப்படுகிறது.

சீனாவுக்கு வெளியே வலு சேர்த்து வருகிறோம்
 

சீனாவுக்கு வெளியே வலு சேர்த்து வருகிறோம்

Hon Hai Precision Industry Co. நிறுவனத்தின் தலைவர் யங் லியு, நிறுவனம் தற்போது படிப்படியாக சீனாவுக்கு வெளியே அதிக திறனை சேர்த்து வருவதாக தெரிவித்துள்ளார். இதன் முக்கிய வேலையே ஐபோன்களுக்கான பாகங்கள், டெல் டெஸ்குடாப்புகள் மற்றும் நிண்டெண்டோ சுவிட்சுகள் வரையிலான கேட்ஜெட்டுக்களுக்கான உற்பத்தியின் முக்கியத் தளமாகும்.

சீனாவுக்கு வெளியே உற்பத்தி அதிகரிப்பு

சீனாவுக்கு வெளியே உற்பத்தி அதிகரிப்பு

இது சீனாவுக்கு வெளியே உள்ள உற்பத்தி தளமானது 30% ஆக அதிகரித்துள்ளது. இது முன்பு 25% ஆக இருந்தது. அமெரிக்கா செல்லும் சீனா தயாரிப்புகளின் மீதான கட்டணங்களை அதிகரிப்பதைத் தவிர்ப்பதற்காக, தென் கிழக்கு ஆசியா மற்றும் பிற பிராந்தியங்களுக்கு அதிக உற்பத்தியினை நகர்த்துவதால், அந்த விகிதம் குறையலாம் என்றும் கூறப்படுகிறது.

முடிவுக்கு வரும்

முடிவுக்கு வரும்

இது இந்தியா, தென் கிழக்கு ஆசியா அல்லது அமெரிக்கா என்றால் பரவாயில்லை, ஒவ்வொன்றிலும் ஒரு உற்பத்தி சூழல் இருக்கும் என்று லியூ கூறியுள்ளார். எனினும் பாக்ஸ்கானின் உற்பத்தியில் சீனா முக்கிய பங்கு வகிக்கும். அதே வேளையில் உலகின் தொழில் சாலை என்பது முடிவுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.

அமெரிக்கா - சீனா பதற்றம்
 

அமெரிக்கா - சீனா பதற்றம்

அமெரிக்காவிற்கும் சீனாவுக்கும் இடையிலான அதிகரித்து வரும் பதற்ற நிலையானது, சீனாவிலுள்ள நிறுவனங்கள் வெளியேற வழி வகுக்கின்றன. கடந்த ஆண்டு ஐபோனின் மதிப்புமிக்க தயாரிப்பு தேவைப்பட்டால், சீனாவிற்கு வெளியே தயாரிக்கப்படலாம் என்றும் கூறியிருந்தார் லியூ. இரு நாடுகளும் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சு வார்த்தைகளில் உள்ளன. எனினும் நீண்ட காலத்திற்கு பிறகு சீனாவின் மின்னணு விநியோக சங்கிலி மோசமாக மாறும் என்ற எதிர்பார்ப்பை உறுதிப்படுத்தியுள்ளது லியூவின் கருத்து.

 லாபம் குறைவு

லாபம் குறைவு

இதற்கிடையில் அதன் முதல் காலாண்டில் இந்த நிறுவனம் எதிர்பார்த்ததை விட லாபம் குறைந்துள்ளதாகவும், இதே இரண்டாவது காலாண்டிலும் சற்று வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. தற்போது கொரோனா தொற்று நோயின் காரணமாக ஐபோன் மற்றும் டெஸ்குடாப்புகளின் விற்பனையானது சற்று அதிகரித்துள்ளது. இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் ஆப்பிளின் விற்பனையில் சுமார், Hon Hai Precision நிறுவனம் பாதியளவு இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இனியும் அடி வாங்கலாம்

இனியும் அடி வாங்கலாம்

எனினும் ஐபோனின் புதிய வரத்துக்களுக்கு தாமதம் ஏற்படுவதால், மூன்றாவது காலாண்டிலும் விற்பனை சற்று அடி வாங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் Hon Hai Precision நிறுவனமும் பின்னடைவை சந்திக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Iphone maker says china’s days as world factory are over

US china issue.. Iphone maker says china’s days as world factory are over
Story first published: Thursday, August 13, 2020, 19:32 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X