ஈரான் கொடுத்த மெகா ஆஃபர்.. ஓரங்கட்டிய அமெரிக்காவுக்கே இது செம ட்விஸ்ட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஈரானின் அணு ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியதிலிருந்தே, ஈரானுக்கு பிரச்சனைகள் தான். ஒரு புறம் அமெரிக்காவுடன் மல்லுகட்டிக் கொண்டு நின்றாலும், மறுபுறம் ஈரானின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையிலும் அமெரிக்கா ஈடுபட்டு வந்தது.

 

இதற்கிடையில் தான் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப், ஈரானுக்கு முக்கிய வருமான வாய்ப்பாக இருந்த எண்ணெய் ஏற்றுமதியிலேயே கைவைத்தார்.

ஈரான் மீது பொருளாதார தடையை விதித்ததோடு, ஈரானிடம் இருந்து எண்ணெய் யாரும் வாங்க கூடாது. அப்படி வாங்கினால் அந்த நாட்டின் மீதும் பொருளாதார தடை விதிக்கப்படும் என்று பயமுறுத்தி வந்தார். இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை தவிர்த்தன.

7Eleven இந்திய வர்த்தகத்தைக் கைப்பற்றினார் முகேஷ் அம்பானி.. 2 நாளில் புதிய கடை..!

முக்கிய வருவாய் ஆதாரம்

முக்கிய வருவாய் ஆதாரம்

இந்த நிலையில் தான் ஈரானின் முக்கிய முக்கிய வருவாய் ஆதாரமாக இருந்த, எண்ணெய் வியாபாரமானது சரிய தொடங்கியது. ஏற்கனவே கடுமையான பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டு வந்த ஈரான், எண்ணெய் விற்பனை சரிவினால் பெரும் ஆட்டம் காண தொடங்கியது. அதுமட்டும் அல்லாமல் தொடர்ந்து அமெரிக்கா, ஈரான் மீது அழுத்தத்தை அதிகரித்துக் கொண்டே சென்றது.

ஈரான் மீது பொருளாதார தடை

ஈரான் மீது பொருளாதார தடை

ஈரான் ஒரு புறம் கிளர்ச்சியாளர்களுக்கு மறைமுகமாக நிதியுதவி செய்வதாகவும், அதிலும் ஈரானில் உள்ள முக்கிய எண்ணெய் நிறுவனங்கள் மூலம் உதவியதாகவும் அமெரிக்கா கருதியது. இந்த நிலையில் அணு ஒப்பந்தமும் ரத்தாகவே, ஈரான் மீது பொருளாதார தடையை விதித்தது அமெரிக்கா. அதோடு பிரச்சனை முடிந்ததா என்றால் இல்லை. இரு நாடுகளுக்கு இடையே போர் மூலும் அபாயம் இருந்தது.

ட்ரோன் தாக்குதல்
 

ட்ரோன் தாக்குதல்

முதல் முறை பொருளாதார தடைக்கே ஆட்டம் காணத் தொடங்கிய ஈரானுக்கு, இரண்டாவது முறையாக கடுமையான பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்த நிலையில், ஈரானிய தலைவர் மற்றும் அதிகாரிகள் அமெரிக்காவில் நிதி பரிவர்த்தனை செய்யவும் தடை விதிக்கப்பட்டது. இதற்கிடையில் இந்த பிரச்சனையை மேலும் மெருகேற்றும் விதமாக ஈரான் வான் எல்லையில் பறந்து கொண்டிருந்த அமெரிக்க உளவு விமானத்தை ஈரான், சுட்டு வீழ்த்தியது.

மக்கள் பாதிப்பு

மக்கள் பாதிப்பு

ஒரு புறம் அமெரிக்காவும் ஈரானும், நீயா நானா என அடித்துக் கொண்டிருக்க, ஈரானிய மக்களே அடிப்படை ஆதாரங்களுக்கே கஷ்டப்படும் நிலை இருந்து வந்ததாக அப்போது செய்திகள் வெளியானது. இப்படி பல பிரச்சனைகளுக்கு மத்தியிலும் ஈரான் பொருளாதாரத்தினை மேம்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அந்த காலகட்டத்தில் தான் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனும் வென்றார். அதன் பிறகு சமாதான பேச்சு வார்த்தைக்கு வாய்ப்புகள் இருந்தாலும், இன்று வரையில் சுமூக நிலையை எட்டவில்லை.

முதலீடுகள் வரவேற்பு

முதலீடுகள் வரவேற்பு

எனினும் ஈரான் தற்போது பொருளாதாரத்தினை மேம்படுத்தும் நடவடிக்கையில் கவனத்தை செலுத்த தொடங்கியுள்ளது. தங்களது நாட்டில் முதலீடு செய்யும் மூலதன முதலீட்டாளார்களுக்கு அல்லது பொருட்களை கொடுக்கும் முதலீட்டாளர்களுக்கு, ஈடாக எண்ணெய் மற்றும் கேஸ் மாற்றாக கொடுப்பதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் தங்கள் நாட்டில் முதலீடுகளை ஈரான் ஊக்குவித்தும் வருகின்றது. மேலும் இது போன்ற முதலீடுகளை வரவேற்பதாகவும் அந்த நாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தேவை அதிகரிப்பு

தேவை அதிகரிப்பு

தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், சர்வதேச நாடுகளில் எரிபொருட்களின் தேவையானது மீண்டு வந்து கொண்டுள்ளது. இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக, பல நாடுகளிலும் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மின்சார உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழில்துறைகளில் எரிபொருட்களின் தேவையை அதிகரித்துள்ளது.

ஈரானின் யுக்தி கைகொடுக்குமா?

ஈரானின் யுக்தி கைகொடுக்குமா?

இது எண்ணெய் விலைக்கு சாதகமாக அமையலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது. சர்வதேச நாடுகளின் தற்போதைய இந்த போக்கினை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, முதலீட்டாளர்களையும் ஈர்க்க பல சலுகைகளையும் அறிவித்து வருகின்றது. ஈரானின் இந்த சலுகை யுக்தி கை கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Iran offers to sell oil in Exchange for investment and goods

Iran offers to sell oil in Exchange for investment and goods
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X