மலேசியா ஊழல் வழக்கில் சிக்கினார் 'ஆஸ்கர்' நாயகன்..!

ஊழல் பணத்தில் எடுத்த படத்தில் மூலமாக தான் ஆஸ்கர் அவார்டு வாங்கினாரா இந்த ஆஸ்கர் நாயகன்.?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாஷிங்டன்: மலேசியாவில் நடந்த ஒரு ஊழல் மூலம் கிடைத்த பணத்தில் ஹாலிவுட் நடிகர் லியனார்டோ டிகாப்ரியோ நடித்த தி வுல்ப் ஆஃப் வால்ஸ்டிரீட் படம் எடுக்கப்பட்டுள்ளது என்றும், இந்த ஊழல் வழக்கிற்கும் அவருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று டிகாப்ரியோ-விடம் விசாரணை செய்யப்பட உள்ளது.

மலேசியாவில் நடத்த ஊழலுக்கும் தி வுல்ப் ஆஃப் வால்ஸ்டிரீட் படத்திற்கும் என்ன சம்மந்தம். ஆனால் ஊழல் செய்யப்பட்ட தொகையை கேட்டால் நீங்க ஆடிப்போயிருவீங்க.

1 பில்லியன் டாலர் ஊழல்

1 பில்லியன் டாலர் ஊழல்

மலேசிய நாட்டின் முதலீட்டு நிதி நிறுவனமான 1MDB நிறுவனத்தில் செய்யப்பட்ட 1 பில்லியன் டாலருக்கும் அதிகமான ஊழல் செய்யப்பட்டுள்ளது என்றும், ஊழல் செய்யப்பட்ட தொகையில் பாக்ஸ் ஆபிஸ் படமான தி வுல்ப் ஆஃப் வால்ஸ்டிரீட் படம் எடுக்கப்பட்டு இருக்க வேண்டும் என்ற சந்தேகத்துடன் இப்படத்தில் நடித்த நடிகர் லியனார்டோ டிகாப்ரியோ-வை விசாரிக்க வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட பின் லியனார்டோ டிகாப்ரியோ அமெரிக்க நிதித்துறையின் உதவியை நாடியுள்ளார்.

 

1MDB நிறுவனம்

1MDB நிறுவனம்

2 வருடத்திற்கு 1MDB நிறுவனத்தில் ஒரு பல்லியின் டாலருக்கும் அதிகமான தொகை ஊழல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மீது சர்வதேச ஊழல் மற்றும் பணச் சலவை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கினால் மலேசிய அரசியலே ஆடிப்போனது. காரணம் 1MDB நிறுவனம் என்பது ஒரு அரசு நிறுவனமாகும்.

நாஜிப் ரசாக்

நாஜிப் ரசாக்

மலேசியாவின் 6வது பிரதமர் நாஜிப் ரசாக் தலைமையில் தான் 2009ஆம் ஆண்டு 1MDB என்னும் அரசு முதலீட்டு நிறுவனம் உருவாக்கப்பட்டது.

விசாரணை

விசாரணை

அமெரிக்க நிதி அமைப்பு செய்த விசாரணை மற்றும் ஆய்வில் பிரதமர் நாஜிப் ரசாக் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருக்கமானவர்கள் தான் இந்த 1 பில்லியன் டாலர் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளது. ஆனால் இந்த ஊழலில் நாஜிப் ரசாக் மற்றும் 1MDB எவ்விதமான தவறும் செய்யவில்லை எனத் தெரிவித்துள்ளது.

உலகப் முழுவதும் பண பட்டுவாடா

உலகப் முழுவதும் பண பட்டுவாடா

இந்த நிறுவனத்தில் ஊழல் செய்யப்பட்ட தொகை அமெரிக்கா மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் பரவியுள்ளதாக அமெரிக்க நிதி அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தப் பணத்தில் தான் ரெட் கிரானைட் பிச்சர்ஸ் என்னும் புரொடக்ஷன் ஹவுஸ் உருவாக்கப்பட்டது.

ரெட் கிரானைட் பிச்சர்ஸ்

ரெட் கிரானைட் பிச்சர்ஸ்

ரெட் கிரானைட் பிச்சர்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனர்களில் ஒருவர் Riza Aziz. இவர் மலேசிய பிரதமர் நாஜிப் ரசாக்-இன் வளர்ப்பு மகன் ஆகும். இங்குத் தான் அமெரிக்காவிற்கும் மலேசிய நாட்டிற்கும் ஹாலிவுட் நடிகர் லியனார்டோ டிகாப்ரியோ மீது சந்தேகம் எழுந்துள்ளது.

அனில் அம்பானி முதல்.. சன்னி லியோன் வரை..

அனில் அம்பானி முதல்.. சன்னி லியோன் வரை..

<strong>'ஜியோ' உடனான கூட்டணி 'எனக்கு' நன்மையே.. மகிழ்ச்சி பொங்கும் அனில் அம்பானி..!</strong>'ஜியோ' உடனான கூட்டணி 'எனக்கு' நன்மையே.. மகிழ்ச்சி பொங்கும் அனில் அம்பானி..!

<strong>சன்னி லியோன்-க்குள் இப்படியொரு திறமையா..? அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள்..!</strong>சன்னி லியோன்-க்குள் இப்படியொரு திறமையா..? அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள்..!


 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Is Leonardo DiCaprio involved in Malaysia 1MDB scam?

Is Leonardo DiCaprio involved in Malaysia 1MDB scam? - Tamil Goodreturns
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X