யார்னா விமானத்துல இருக்கீங்களா..? தனிய்ய்யா இருக்கேன்... பயம்மா இருக்குது..! Air Canada சம்பவம்!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டிஃபனி அடம்ஸ் (Tiffani Adams) கனடா நாட்டைச் சேர்ந்த இளம் பெண். கடந்த ஜூன் 09, 2019 அன்று ஏர் கனடா (Air canada) விமானத்தில், கனடாவின் தலைநகரமான ரொண்டோவுக்குச் விமானம் ஏறி இருக்கிறார்.

 

சுமார் 90 நிமிட குட்டி விமான பயணம் தான். நம்மூர் ஆட்கள் பஸ் ஏறினாலே தூக்கம் தானாக வந்துவிடுவது போல, நம் டிஃபனி அடம்ஸ் (Tiffani Adams)-க்கும் கொஞ்சம் அதீத தூக்கம் வந்துவிட்டது.

எப்போது தூங்கினார் என அவளுக்கே தெரியாத அளவுக்கு ஆழ்ந்து தூங்கி இருக்கிறாள் நம் டிஃபனி அடம்ஸ் (Tiffani Adams). விமானம் டொரண்டோவுக்கு வந்து சேர்ந்து பல மணி நேரமாகிவிட்டது.

டொரண்டோ வந்துட்டோம்

டொரண்டோ வந்துட்டோம்

விமானம் தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் நிறுத்தி விட்டு விமானிகள், விமானப் பணியாளர்கள் எல்லாம் குடும்பத்தோடு இரவு உணவு சாப்பிடவும், பிள்ளைக் குட்டிகளைப் பார்க்கவும் சென்றுவிட்டார்கள். இப்போது நம் டிஃபனி அடம்ஸ் (Tiffani Adams) விமானத்தில் தனியாக நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருக்கிறாள். ஒரு மாதிரி எழுந்து என்ன ஏது எனப் பார்த்திருக்கிறாள். ஒரே இருட்டு. சரி கனவு போல என மீண்டும் தூங்குகிறாள்.

விமானத்தில் சிறை இருள் பயம்

விமானத்தில் சிறை இருள் பயம்

அடுத்த சில நிமிடங்களில் சுதாரித்துக் கொண்டு, டொரண்டோவுக்கு விமானத்தில் வந்ததும், வழியிலேயே தூங்கி இருக்கலாம் என எல்லாம் நினைவுக்கு வருகிறது. தூக்கம் முற்றிலும் போய் எழுந்து செய்வதறியாது தவிக்கிறாள். சக பயணிகள், விமானப் பணியாளர்கள், விமான நிலைய ஊழியர்கள் என யாரும் இல்லை. விமானத்தின் ஜன்னலைத் திறந்து டொரண்டோ ஏர்போர்ட்டைப் பார்த்திருக்கிறாள். டொரண்டோவிலும் இரவு இருள் அப்பி ஓரியோ பிஸ்கெட் போல் இருந்தது.

நல்ல இருட்டு
 

நல்ல இருட்டு

விமானத்துக்கு உள்ளும் வெளியிலும் இருள் அப்பி இருக்கும் சூழல் பயம் கொடுத்தாலும் கொஞ்சம் சுதாரித்துக் கொள்கிறாள் டிஃபனி அடம்ஸ் (Tiffani Adams). யோசிக்கிறாள்... உதவிக்கு அழைக்க போனை எடுத்தால் நெட்வொர்க் இல்லை. சார்ஜ் போடலாமா...? மின்சாரம் இல்லை. அப்படியே தட்டுத் தடுமாறி முட்டியை இடித்துக் கொண்டு வலியோடு ஒருவழியாக ஒரு டார்ச் லைட் மட்டும் கிடைக்கிறது. லைட்டை வைத்துக் கொண்டு விமானத்தின் கதவைத் காண்கிறாள் டிஃபனி அடம்ஸ் (Tiffani Adams).

45 அடி உயரம்

45 அடி உயரம்

ரைட்டு அவ்ளோ தான் இப்ப வீட்டுக்கு போய்டுவேனே என கதவைத் திறந்தால் விமானத்துக்கும், தரைக்கும் சுமார் 15 மீட்டர் (45 அடி) உயரம் இருக்கிறது. அவசரப்பட்டு குதித்தால் கூட ஏதாவது ரெண்டு எலும்பு உடைந்துவிடும் என காத்திருக்கிறாள். அப்போது நம் டிஃபனி அடம்ஸ் (Tiffani Adams)-ன் க்யுபெக்கில் இருக்கும் தோழி டியானா உடன் ஃபேஸ் டைமில் பேச முயற்சிக்கிறாள். பாதியிலேயே போன் டெட் ஸ்விட் ஆஃப். நடந்த பிரச்னையை புரிந்து கொண்டு டியானா உடனடியாக டொரண்டோ விமான நிலைய அதிகாரிகளிடம் விஷயத்தை சொல்லி உதவிக்கு ஆட்களை அனுப்புகிறாள். அதிகாரிகளும் நம் டிஃபனி அடம்ஸ் (Tiffani Adams) உதவிக்கு காத்திருப்பதைப் பார்த்து ஆச்சர்யப்படுகிறார்கள்.

இறைவனாக வந்தவர்

இறைவனாக வந்தவர்

"என்ன மேடம் நீங்க தூங்கிக்கிட்டு இருக்குறது கூடவா தெரியாம வெச்சி பூட்டிட்டுப் போய்ட்டாய்ங்க..? ஒரு பயலும் உங்கள எழுப்பலையா..?" என ஆச்சர்யப்படுகிறார் விமான நிலைய அதிகாரி. பதில் நோ. எழுப்பி இருந்தால் தான் இந்நேரம் என் வீட்டில் தூங்கிக் கொண்டிருப்பேனே என பதில் கொடுக்கிறார் டிஃபனி அடம்ஸ் (Tiffani Adams). பிறகு ஒரு வழியாக விமான நிலைய அலுவலகத்துக்கு வந்து, நடந்த சம்பவங்கள் அனைத்தையும் ஏர் கனடா விமான அதிகாரிகளிடம் விளக்கி புகார் கொடுக்கிறாள் டிஃபனி அடம்ஸ் (Tiffani Adams).

ஏர் கனடா புகார்

ஏர் கனடா புகார்

விமான நிறுவனமும் டெம்ப்ளெட்டாக மன்னிப்பு கேட்டுவிட்டு, இனிமேல் இது போல நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம் என டிஃபனி அடம்ஸ் (Tiffani Adams) வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார்கள். அதோடு இந்த விவகாரம் பற்றி விசாரணை நடத்துவதாகவும் சொல்லி இருக்கிறார்களாம். விமான நிறுவனம் சொல்வது இருக்கட்டும் "இனி நான் செத்தாலும் விமானத்துல தூங்க மாட்டேனே.." என மிரட்சியோடும், அலுப்போடும், பயத்தோடும் சொல்கிறார் நம் டிஃபனி அடம்ஸ் (Tiffani Adams).

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

is there anyone in the plane i am all alone in air canada

is there anyone in the plane i am all alone in air Canada
Story first published: Monday, June 24, 2019, 18:09 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X