Jack ma நீங்க சொல்ற வாரம் 6 நாள் 6 முறை 9 நிமிடம் உடல் உறவு சரியா? நெட்டிசன்களின் பளார் கேள்விகள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

"என் உடன் பிறப்புகளே, என் நிறுவனத்தில் பணியாற்றும் அன்பு ஊழியர்களே... வாரம் ஆறு நாட்களில், ஆறு முறை உடலுறவு வைத்துக்கொள்ளுங்கள், இன்னும் வாழ்கை சிறப்பாக இருக்கும், சிறப்பாகச் செயல்படலாம்" என அறிவுரை சொல்லி இருக்கிறார்.

 

சொன்னது உலகின் மிகப் பெரிய இ காமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றான அலிபாபாவின் நிறுவனர் ஜாக் மா (Jack Ma).

சமீபகாலமாக நம் தொழிலபதிபர் ஜாக் மா (Jack Ma)வ-க்கு நாக்கில் சனி இருக்கிறது போல. எதைச் சொன்னாலும் கொஞ்சம் அழுத்தமாகச் சொல்லி, paLissena சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்.

மும்பை டூ லண்டன்.. இனி சொய்ங்னு போய்ரலாம்.. அதுவும் ஒரு மணி நேரத்தில்!

996 சர்ச்சை

996 சர்ச்சை

இப்படித்தான் சமீபத்தில் நாள் ஒன்றுக்கு, ஊழியர்கள் 12 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என ஒரு சர்ச்சைக்குரிய ஸ்டேட்மெண்ட் கொடுத்தார். அதுவும் சீனா போன்ற கடினமான தொழிலாளர் நலச் சட்டங்கள் இருக்கின்ற நாட்டில் தொழில் செய்து கொண்டே, இப்படி நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என ஸ்டேட்மெண்ட் விட்டதை சீன அரசு கொஞ்சம் முறைத்துப் பார்த்தது.

பயமுறுத்தல்

பயமுறுத்தல்

நல்லா வாழணும்ன்னு ஆசை இருக்கா..? அப்ப தினமும் 12 மணி நேரம் உழைங்க இல்லன்ன உங்க இலக்கு, நீங்க நினைக்கிற வாழ்கை கிடைக்காது... என மிரட்டல் தொனியிலேயே சொன்னார். அதை பெருமையாக 996 எனவும் சொல்லி டிரெண்டாக்கினார். காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வாரம் 6 நாட்கள் வேலை பார்ப்பது தான் இந்த 996-ன் பொருள்.

உடல் உறவை வைத்துக் கொள்
 

உடல் உறவை வைத்துக் கொள்

இப்போது மீண்டும் சர்ச்சைக்குரிய ரீதியில் உடல் உறவைக் கொச்சைப்படுத்தும் ரீதியில் ஒரு ஸ்டேட்மெண்ட் விட்டிருக்கிறார். வாரம் ஆறு நாட்கள், ஆறு முறை ஒன்பது நிமிடத்துக்கு உடலுறவு வைத்துக் கொள்ளுங்கள் எனச் சொல்லி இருக்கிறார். இதையும் பெருமையாக 669 எனச் சொல்லி இருக்கிறார்.

விளக்கம்

விளக்கம்

அதாவது வாரம் ஏழு நாட்களில், ஆறு நாட்கள் உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டுமாம். அதுவும் தினமும் ஒரு முறை மட்டும் உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டுமாம். அந்த ஒரு முறை வைத்துக் கொள்ளும் உடல் உறவும் ஒன்பது நிமிடngkaL வரை மட்டுமே உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டுமாம். இப்படிச் செய்து வந்தால்... இன்னும் வாழ்கையில் சிறப்பாகச் செயல்படலாம் எனச் சொல்லி மக்களின் ஏகோபித்த வெறுப்பைச் சம்பாதித்திருக்கிறார்.

கொந்தளிப்பு

கொந்தளிப்பு

சீனா மட்டுமல்ல, இன்றைய தேதிக்கு ஜாக் மா (Jack ma)-க்கு என ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது. ஜாக் மா (Jack ma)-வின் சொற்களை வேதம் போல பின்பற்றும் பிசினஸ் வெறி கொண்ட இளைஞர்கள் எண்ணிக்கை அலிபாபா நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி போல அசுர வேகம் எடுத்திருக்கிறது. ஆனால் இப்போது ஜாக் மா (Jack Ma) ரசிகர்களே இந்த உடலுறவு விஷயத்துக்கு முகம் சுளித்திருக்கிறார்கள், என்பது தான் கவனிக்க வேண்டிய விஷயம். நெட்டிசன்களின் கருத்துக்கள் இதோ..!

என்ன ரோபோக்களா

தம்பி ஜாக் மா (Jack ma) சில மாதங்களுக்கு முன்னாடி தான் தினமும் 12 மணி நேரம் வேலை பாக்கணும், 996 கடை பிடிங்கன்னு சொன்னீங்க. இப்ப வந்து வாரம் ஆறு நாள், ஆறு முறை 9 நிமிடம் உறவு வெச்சிக்கச் சொல்றீங்க. நாங்க எல்லாம் மனிஷங்கங்குறது தெரியுதா..? நீங்க கமாண்ட் கொடுக்கிற இயந்திரம் இல்லங்குறத புரிஞ்சிக்குங்கப்பு என வருத்தப்பட்டிருக்கிறார் ஒரு பெண்.

லாஜிக் கேள்வி

"ஜாக் மா (Jack Ma) சார், நான் உங்களோட தீவிர ரசிகை தான். ஆனா நீங்க சொல்ற லாஜிக் படி, உங்க ஆஃபிஸ்ல 12 மணி நேரம் என்னைய என் மேனேஜர், உயர் அதிகாரிங்க எல்லாம் கதற கதற அடிச்சி வேலை வாங்குனதுக்கு அப்புறம், நான் எப்படிங்க என்னோட பார்ட்னரோட சந்தோஷமா இருக்க முடியும்..? உறவு வெச்சுக்க முடியும். தினமும் வேலைக்கு போரது, உறவு வெச்சிக்குறது மட்டும் தான் ஒரு மனித பிறப்போட வாழ்கையா..? வீட்டை நிர்வகிக்கிறது, வாங்குற சம்பளத்த வருமானத்தை நிர்வகிக்கிறது, எதிர்கால முன்னேற்றத்ஹ்துக்காக படிக்கிறது, தனக்கு பிடிச்ச விஷயங்களைச் செய்யுறது, குழந்தைகளோடு பேசுறது, கணவன் - மனைவியோட அன்பாகப் பேசுறது, நண்பர்களோடு பழகுறது எல்லாம் உங்கள் பட்டியல்ல கிடையாதா..? " என கேள்வி எழுப்பி இருக்கிறார்.

வெறும் காமம் தானா

வெறும் காமம் தானா

இதை எல்லாம் விட "உடல் உறவு என்பதும் ஒரு வகையான அன்பு செலுத்தல், அன்பு காணித்தல், அன்பைப் பெறுதல் என்பதை ஜாக் மா (Jack Ma) மறந்துவிட்டார் அல்லது அதை ஏற்க மறுக்கிறார். உடல் ரீதியிலாக மட்டும் கணவன் மனைவிக்கு இடையில் உடல் உறவை வைத்துக் கொண்டால் தான் 9 நிமிடத்தில் ஜாக் மா (Jack Ma) சொல்வது போல் நடக்கும். வெறும் 9 நிமிடங்களில் கணவன் மனைவிக்கு இடையில் புணர்தல் முடிந்து விடும் என்றால் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் என்ன வித்தியாசம்" என நெட்டிசன்கள் கிழித்துத் தொங்கவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஜாக்கிரதை ஜாக் மா

ஜாக்கிரதை ஜாக் மா

நீங்கள் உலகத்தால் போற்றப்படும் சிறந்த பிசினஸ் மேன்களில் ஒருவராக இருக்கிறீர்கள்,

இன்றைய உலக இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறீர்கள்,

உங்கள் வார்த்தைக்கு ஒரு பெரிய பலம் உண்டு...

என்பதை உணர்ந்து பேசுங்கள் ஜாக் மா (Jack Ma). உலகம் உங்களை கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறது. உங்களை கவனிக்கும் அனைத்தும் ஆறறிவு படைத்த மனிதர்கள். இயந்திரங்கள் அல்ல என்பதை தயவு செய்து உணர்ந்து பேசுங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

jack ma insensitive statement about relationship and healthy life

jack mas insensitive statement about relationship and healthy life
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X