ஐக்கிய அரபு நாடுகள் அதிரடி அறிவிப்பு.. இந்தியர்களுக்கு ஜாக்பாட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அன்னிய முதலீட்டுக்கும், அதிகளவிலான திறமைகளை ஈர்க்கவும் உலக நாடுகள் மத்தியில் ஐக்கிய அரபு நாடுகள் முதன்மையாகத் திகழ வேண்டும் என்பதற்காக இந்நாட்டு அரசு புதிய சட்ட மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.

இந்த மாற்றங்கள் ஐக்கிய அரபு நாடுகளுக்குச் செல்ல விரும்புவோருக்கு மிகப்பெரிய ஜாக்பாட் ஆக அமைந்துள்ளது.

முக்கியக் கூட்டம்

முக்கியக் கூட்டம்

ஐக்கிய அரபு நாட்டின் துணை ஜனாதிபதி மற்றும் பிரதமராக இருக்கும் ஷேக் முகமது பின் ரிஷ்த் அல் மாக்டம் தலைமையில் நடந்த முக்கியமான கூட்டத்தில், உலக முதலீட்டாளர்களுக்கும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், உலகின் சிறந்த திறன்களை ஈர்ப்பதிலும் ஐக்கிய அரபு நாடுகள் உலக நாடுகளை விடவும் முதன்மையாகத் திகழ வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது.

 முதற்கட்ட பணி

முதற்கட்ட பணி

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் முதற்கட்ட பணியாக ஐக்கிய அரசு நாடுகளுக்கு வரும் முதலீட்டாளர்களுக்கும், ப்ரோபெஷ்னஸ் மற்றும் அவர்களது குடும்பம் மற்றும் 'A' கிரேட் மாணவர்களுக்குச் சுமார் 10 வருட விசா வழங்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளது இந்நாட்டு அரசு.

 

டிவீட்

இதுகுறித்த அறிவிப்பை ஷேக் முகமது தனது டிவிட்டர் கணக்கில் தெரிவித்தார்.

இதுமட்டும் அல்லாமல் இதுகுறித்த ஆய்வுகள் மாற்றங்கள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டு அமலாக்கம் செய்யவும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

 புதிய விசா முறை

புதிய விசா முறை

இப்புதிய விசா முறையின் மூலம் புதிய முதலீட்டாளர்களை ஈர்ப்பது மட்டும் அல்லாமல், உலக நாடுகள் மத்தியில் வர்த்தகப் போட்டி தன்மையில் ஐக்கிய அரபு நாடுகளில் முன்னோடியாக இருக்கும்.

முதலீட்டாளர்கள்

முதலீட்டாளர்கள்

அதேபோல் ஐக்கிய அரபு நாட்டு நிறுவனத்தில் 100 சதவீத உரிமை கொள்ள அன்னிய முதலீட்டாளர்களுக்கு உரிமை அளிக்கப்படவும் இந்த முக்கியக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பல புதிய வர்த்தகம் இந்நாட்டில் துவங்கப்படும்.

இதன் மூலம் ஐக்கிய அரபு நாடுகள் இன் கச்சா எண்ணெய்யை மட்டும் நம்பியிருக்கத் தேவையில்லை.

 

10 வருட விசா

10 வருட விசா

முதலீட்டாளர்கள் மூலம் புதிய வர்த்தகம் உருவாக்கும் நிலையில், பல துறை சார்ந்த ஊழியர்களை ஈர்க்க வேண்டியதும் கட்டாயமாகும். இந்தச் சூழ்நிலைக்கு ஏதுவாக முதலீட்டாளர்களுக்கு அளிக்கப்படுவது போலவே மருத்துவம், அறிவியல், ஆராய்ச்சி, தொழில்நுட்ப பிரிவுகள், ஆராய்ச்சியாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள் ஆகியோருக்கு 10 வருட விசா அளிக்கப்படுகிறது.

மேலும் மாணவர்களுக்கு 5 வருட ரெசிடென்சி விசாவும், திறமையான மாணவர்களுக்கு 10 வருட விசாவும் வழங்கப்பட உள்ளது.

 

அமெரிக்கா, பிரிட்டன்

அமெரிக்கா, பிரிட்டன்

தற்போது ஐடி ஊழியர்களுக்கும் அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளில் கடுமையான விசா கட்டுப்பாடுகள் விதித்து வரும் நிலையில் ஐக்கிய அரபு நாடுகளின் அறிவிப்பு இந்தியர்கள் மத்தியில் புதிய மாற்றத்தைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தகை சூழ்நிலையில் UAE நாட்டின் 10 வருட விசா அறிவிப்பை ஜாக்பாட் என்று சொல்லாமல் எப்படிச் சொல்வது.

 

வங்கி கணக்கில் 7.5 கோடி

வங்கி கணக்கில் 7.5 கோடி

<strong>இறந்த பிச்சைக்கார பாட்டி பையில் ரூ.2 லட்சம் பணம் & வங்கி கணக்கில் 7.5 கோடி..!</strong>இறந்த பிச்சைக்கார பாட்டி பையில் ரூ.2 லட்சம் பணம் & வங்கி கணக்கில் 7.5 கோடி..!

 

 

ஆச்சார்யா பாலகிருஷ்ணா

ஆச்சார்யா பாலகிருஷ்ணா

<strong>எல்லாவற்றுக்கும் மோடி தான் காரணம்.. பதஞ்சலி ஆச்சார்யா பாலகிருஷ்ணா அதிரடி!</strong>எல்லாவற்றுக்கும் மோடி தான் காரணம்.. பதஞ்சலி ஆச்சார்யா பாலகிருஷ்ணா அதிரடி!

 

 

ரூ. 1,999-க்..." data-gal-src="http:///img/600x100/2018/05/herocycles-1526884764-1526965022.jpg">
ஹீரோ சைக்கிள்

ஹீரோ சைக்கிள்

<strong>ரூ. 1,999-க்கு குறைந்த விலை சைக்கிள்.. ஹீரோ அதிரடி..!</strong>ரூ. 1,999-க்கு குறைந்த விலை சைக்கிள்.. ஹீரோ அதிரடி..!

மோடி அரசு

மோடி அரசு

<strong>ஜிஎஸ்டி தோல்வி.. மோடி அரசு இப்போதாவது பாடம் கற்றுக்கொள்ளுமா..?</strong>ஜிஎஸ்டி தோல்வி.. மோடி அரசு இப்போதாவது பாடம் கற்றுக்கொள்ளுமா..?

 

 

 6வது பணக்கார நாடு

6வது பணக்கார நாடு

உலகிலேயே 6வது பணக்கார நாடாக வளர்ந்தது இந்தியா..!!உலகிலேயே 6வது பணக்கார நாடாக வளர்ந்தது இந்தியா..!!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Jackpot for Indians: 10 year residence visa in UAE

Jackpot for Indians: 10 year residence visa in UAE
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X