செல்போன் கழிவுகளை வைத்து 2020 Olympic பதக்கங்களைத் தயாரித்த ஜப்பான்! ரூ. 20 கோடி மிச்சம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டோக்கியோ, ஜப்பான்: வரும் 2020 சம்மர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை டொயோட்டா நிறுவனத்தின் தலைமையகமான ஜப்பான் தான் நடத்தப் போகிறது. அடுத்த வருடம் ஜூலை 24-ம் தேதி போட்டிகள் தொடங்கப்பட இருக்கின்றன.

 

2020 Olympic நிர்வாகக் கமிட்டி சமீபத்தில் தான் ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு கொடுக்கும் பதக்கங்களை வெளியிட்டது.

இந்த 2020 Olympic பதக்கங்கள், எலெக்ட்ரானிக்ஸ் கழிவுகளில் இருந்து மறுசுழற்சி முறையில் தயாரிக்கப்பட்டவை என்பது தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.

உலோகங்கள்

உலோகங்கள்

2020 Olympic ஒலிம்பிக் பதக்கங்களைச் செய்ய சுமார் 32 கிலோ தங்கம், 3,500 கிலோ வெள்ளி மற்றும் 2,200 கிலோ வெண்கலம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறதாம். இந்த மறு சுழற்சிக்காக சுமார் 78,500 கிலோ கிராம் எலெக்ட்ரானிக் பொருட்களைச் சேகரித்திருக்கிறார்களாம். இந்த 78,500 டன் எலெக்ட்ரானிக்ஸ் கழிவுகளில் 6.21 மில்லியன் (62.1 லட்சம்) மொபைல் போன்களும் அடக்கம் என்பது கவனிக்க வேண்டி இருக்கிறது.

இதற்கு முன்

இதற்கு முன்

2020 Olympic போட்டிகளுக்கு முன், எந்த ஒலிம்பிக்கிலும் இப்படி மறு சுழற்சி முறையில் பதக்கங்களைத் தயாரித்ததே இல்லையா..? எனக் கேட்டால் தயாரித்திருக்கிறார்கள். 2016 Olympic போட்டியை நடத்திய பிரேசில் நாடே தன் பதக்கங்களை மறு சுழற்சி முறையில் தயாரித்திருக்கிறது. ஆனால் தயாரித்த மொத்த தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களில் வெறும் 30 சதவிகித பதக்கங்களைத் தான் மறு சுழற்சி முறையில் தயாரித்தார்கள். அதற்கு மேல் அவர்களால் முடியவில்லை.

100% மறு சுழற்சி
 

100% மறு சுழற்சி

ஆனால் ஜப்பான் 2020 Olympic போட்டியில் வெற்றி பெறும் அனைத்து விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கணைகளுக்கும் கொடுக்க வேண்டிய அனைத்து பதக்கங்களையும் மறு சுழற்சி முறையிலேயே தயாரித்திருக்கிறது. ஆக 100 சதவிகித பதக்கங்கள் மறு சுழற்சி முறையில் கிடைத்த உலோகங்களை மட்டுமே பயன்படுத்தி தயாரித்து இருக்கிறார்களாம். இந்த மறு சுழற்சி முறை குறித்து 2020 Olympic கமிட்டியின் வலைதளத்தில் விரிவாகச் சொல்லி இருக்கிறார்களாம்.

2017 முதல் 2019 வரை

2017 முதல் 2019 வரை

இந்த மறுசுழற்சி திட்டத்தை சுமார் ஏப்ரல் 2017-ல் தொடங்கி கடந்த மார்ச் 2019-ல் தான் முடித்தார்களாம். சுமார் 50 லட்சம் தேவையற்ற எலெக்ட்ரானிக் பொருட்களில் இருந்து சுமார் 48,000 டன் எலெக்ட்ரானிக் கழிவுகள் கிடைத்ததால். அதில் சுமார் 3 மில்லியன் டாலர் (சுமார் 20 கோடி ரூபாய்) மதிப்புள்ள உலோகங்களை ஜப்பான் பிரித்தெடுத்து 2020 Olympic போட்டிகளுக்கான பதக்கங்களைச் செய்திருக்கிறார்களாம்.

வாழ்த்துக்கள் ஜப்பான்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

japan made 2020 Olympic medals from electronic waste

japan made 2020 Olympic medals from mobile phone waste
Story first published: Thursday, July 25, 2019, 12:57 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X