ஏழைகளுக்கு உதவ முன் வந்த உலகின் முதல் பணக்காரர்!

By Sornamani Ramamoorthy
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீடற்ற குடும்பங்களுக்கும், குறைவான வருமானம் பெறும் சமூகத்துக்கும் உதவும் வகையில் 2 பில்லியன் டாலர்களை ஒதுக்க அமேசான் நிறுவனர் ஜெப் பெஷோஸ் முடிவு செய்துள்ளார்.

 

எந்த ஒரு சிறுவனும் வீதியில் உறங்கக் கூடாது எனச் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், வறுமையில் வாடும் குடும்பங்களின் உடனடித் தேவைகள் பூர்த்திச் செய்யப்படும் என உறுதி அளித்துள்ளார். இதேபோல் தொண்டு நிறுவனங்களுக்கு ஆண்டு விருதுகளை அளிக்க முடிவு செய்துள்ளதாகக் கூறியுள்ளார்.

முன்னுக்கு வந்த பிஸோஸ்

முன்னுக்கு வந்த பிஸோஸ்

163.8 பில்லியன் டாலர் சொத்துமதிப்பைக் கொண்ட அமேசான் நிறுவனர் பெஷோஸ், உலகின் மிகப்பெரிய பணக்காரர் எனப் புளூம் பெர்க் அண்மையில் தெரிவித்தது. பங்குகளை விற்றுள்ள நிலையில் அவருடைய சொத்தின் நிகர மதிப்பு 64.7 டாலர்களாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் பில்கேட்ஸ் மற்றும் வாரன் பப்பட் ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளியுள்ளார் பெஷோஸ்.

கருத்துக் கேட்பு

கருத்துக் கேட்பு

சம்பாதித்த பணத்தை எவ்வாறு செலவு செய்யலாம் எனக் கடந்த ஆண்டுப் பொதுமக்களிடம் கருத்து கேட்டார் பிஸோஸ்.வறுமை நிலையில் உள்ள பொதுமக்களின் அவசரத் தேவையைப் பூர்த்திச் செய்யும் திட்டத்தைத் தீட்ட ஆர்வமாக இருப்பதாகக் கூறினார். சுகாதாரத் திட்டங்களைச் செய்யவும், கடன் மன்னிப்பு வழங்கவும் கோரி வேண்டுகோள் விடுக்கப்பட்டன.

நன்கொடை
 

நன்கொடை

பிஸோஸ் குடும்ப அறக்கட்டளை சார்பாகக் கல்விக்கு உதவிக்கரம் நீட்டப்பட்டு வருகிறது. பிரிண்ட்ஸ்டன் பல்கலைக்கழகம் மற்றும் பிரட் ஹட்சின்ஸன் புற்றுநோய் ஆராய்ச்சி மையத்துக்கு நன்கொடைகள் வழங்கப்பட்டுள்ளன.

ஏழைகள் மீது கரிசனம்

ஏழைகள் மீது கரிசனம்

2016 ஆம் ஆண்டுச் சியாட்டில் காலியான ஒரு ஹோட்டலை, வீடற்ற ஏழைகளின் தற்காலிக தங்குமிடமாக மாற்றிக் கொடுத்த தொண்டு நிறுவனத்துக்கு அமேசான் ஆதரவு கொடுத்தது. இதேபோல் அமேசானின் புதிய அலுவலக வளாகத்தில் 47000 சதுர அடியில், வீடற்ற ஏழைகளுக்கு நிரந்தரத் தங்குமிடம் ஒன்றை அமைத்து வருகிறது.

அஞ்சாத அமேசான்

அஞ்சாத அமேசான்

இந்த ஆண்டுத் தொடக்கத்தில் ஏழைகளுக்கு அமேசான் நிறுவனம் வழங்கி வந்த வீடு வழங்கும் திட்டத்தைச் சியாட்டில் சிட்டி கவுன்சில் ரத்து செய்தது. இருப்பினும் இதற்கு அஞ்சாத அமேசான், பொருளாதார வளர்ச்சி என்ற குறிக்கோளில் இருந்து பின்வாங்க மாட்டோம் எனத் தெரிவித்தது. ஏழைகளுக்கு வீடு கட்டித்தரும் தொண்டு நிறுவனங்களுக்குத் தொடர்ந்து முதலீடு செய்யும் அறிவித்தது.

ஜாக் மா அறக்கட்டளை

ஜாக் மா அறக்கட்டளை

அலிபாபா நிறுவனத்தின் தலைவர் ஜாக் மா, சம்பாதித்த பணத்தைக் கல்விச் சேவைக்குச் செலவிடப் போவதாகத் தெரிவித்தார். ஓய்வை அறிவித்த அவர் ஜாக் மா அறக்கட்டளையை விரைவில் தொடங்கப்போவதாகவும் அறிவித்திருந்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Jeff Bezos launches $2 billion fund for homeless

Jeff Bezos launches $2 billion fund for homeless
Story first published: Friday, September 14, 2018, 16:07 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X