உலகப் பணக்காரர்கள் பட்டியலில் திடீர் மாற்றம்.. பெசோஸ் அதிர்ச்சி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகப் பணக்காரர்கள் பட்டியில் இந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. ஆம் பல ஆண்டுகளாக முதல் இடத்திலேயே இருந்த மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைவர் பில் கேட்ஸ்-ஐ முதல் முறையாகப் பின்னுக்குத் தள்ளி கடந்த 3 வருடங்களாக முதல் இடத்தில் இருந்து வரும் அமேசான் நிறுவனத்தின் நிறுவனரும் தலைவருமான ஜெப் பிசோஸ்-ஐ 2வது இடத்திற்குச் சென்றுள்ளார்.

 

முதல் இடத்தைப் பிடித்தது யார் தெரியுமா..?

முதல் இடம்

முதல் இடம்

கடந்த ஒரு வருடத்தில் சொத்து மதிப்பில் மாபெரும் வளர்ச்சி கண்ட ஆடம்பர பொருட்கள் விற்பனை செய்யும் LVMH நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான பெர்னார்டு அர்னால்ட், ஜெப் பெசோஸ் பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தைப் பிடித்தார்.

கடந்த 10 வருடத்தில் கேட்ஸ், பெசோஸ் இல்லாமல் ஒருவர் முதல் இடத்தைப் பிடித்துள்ளார் என்றால் அது பெர்னார்டு அர்னால்ட் தான்.

ஒரு வருட வளர்ச்சி

ஒரு வருட வளர்ச்சி

2019ஆம் ஆண்டில் மட்டும் பல்வேறு நிறுவனங்களைக் கைப்பற்றியதாலும், வர்த்தக வளர்ச்சியாலும் பெர்னார்டு அர்னால்ட் சொத்து மதிப்பு கிட்டதட்ட 34.3 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்து 109.6 பில்லியன் டாலராகத் திங்கட்கிழமை உயர்ந்தது.

அப்போது பெசோஸ் அவர்களின் மொத்த சொத்து மதிப்பு 109.5 பில்லியன் டாலராக இருந்த காரணத்தால் முதல் இடத்தில் திடீர் மாற்றம் ஏற்பட்டது.

மீண்டும் பெசோஸ்
 

மீண்டும் பெசோஸ்

ஆனால் பெர்னார்டு அர்னால்ட்-இன் சந்தோஷம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை, அமேசான் முதலீட்டாளர்கள் ஜெப் பெசோஸ்-ஐ கைவிடாமல் அடுத்தச் சில மணிநேரத்தில் அவரது சொத்து மதிப்பை 109.8 பில்லியன் டாலர் வரையில் உயர்த்தினர்.

அப்போது பெர்னார்டு அர்னால்ட்-இன் சொத்து மதிப்புக் கணிசமாகக் குறைந்து 109.3 பில்லியன் டாலராகக் குறைந்தது. இதனால் ஜெப் பெசோஸ் மீண்டும் முதல் இடத்தைப் பிடித்தார்.

கள்ளகாதல்

கள்ளகாதல்

அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸ்-இன் கள்ளக்காதல் விஷயம் தெரியவந்த நிலையில் அவரது மனைவி மெக்கென்சி பீசோஸ் விவாகரத்துச் செய்து கொண்டார்.

அமேசான் நிறுவனத்தின் பங்குகளை இருவரும் வைத்திருந்த நிலையில், விவாகரத்துக்குப் பின் ஜெப் பெசோஸ், மெக்கென்சி பீசோஸ்-க்கு தனது சொத்து மதிப்பு கால் பங்கைக் கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

இதன் மூலம் மெக்கென்சி பீசோஸ் சுமார் 34.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்பைப் பெற்று உலகின் 27வது பணக்காரராகத் தற்போது உயர்ந்துள்ளார்.

பில் கேட்ஸ்

பில் கேட்ஸ்

தற்போது முதல் 2 இடத்தை ஜெப் பெசோஸ் மற்றும் பெர்னார்டு அர்னால்ட் ஆகியோர் போட்டிப்போடும் நிலையில் 3வது இடத்தில் பில் கேட்ஸ் 107.9 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ஜாலியாக ஜூஸ் குடித்துக்கொண்டு என்ஜாய் செய்து வருகிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Jeff Bezos momentarily beaten as richest man in world by Bernard Arnault

Amazon CEO Jeff Bezos was dethroned from his perch atop the world’s richest people’s list, as luxury goods CEO Bernard Arnault saw his net worth skyrocket. Mr Arnault became the first man in years whose last name is not Gates or Bezos to be able to call himself the world’s richest.
Story first published: Thursday, December 19, 2019, 9:48 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X