ஹெச்1பி விசா கிடைக்குமா..? கிடைக்காதா..? பைடன் அரசின் பதில் இதுதான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் கோடிக்கணக்கான ஐடி மற்றும் டெக் ஊழியர்களின் அமெரிக்கக் கனவைத் தீர்க்கும் ஹெச்1பி விசா மீதான தடையை நீக்க பைடன் அரசின் நிலைப்பாடு என்ன என்பது தான் தற்போதைய முக்கியக் கேள்வியாக உள்ளது.

 

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் தோல்வியைத் தொடர்ந்து பைடன் ஆட்சியில் ஹெச்1பி விசா தடை உடனடியாக நீக்கப்படும் எனக் கூறப்பட்ட நிலையில் பைடன் அரசு இதைப்பற்றி எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 டிரம்ப் அரசின் தடை

டிரம்ப் அரசின் தடை

2020ல் டிரம்ப் அரசு கொரோனா தொற்றுக் காரணமாகப் பல கோடி அமெரிக்கர்கள் வேலைவாய்ப்புகளை இழந்து தவித்துக்கொண்டு இருக்கும் போது வெளிநாட்டவர்களுக்குச் செல்லும் வேலைவாய்ப்பைத் தடுக்க வேண்டும் என்ற இலக்குடன் ஹெச்1பி விசா வழங்குவதைத் தற்காலிகமாகத் தடை செய்தார்.

 டெக் நிறுவனங்களுக்குப் பிரச்சனை

டெக் நிறுவனங்களுக்குப் பிரச்சனை

இதனால் வெளிநாடு செல்ல காத்திருக்கும் பல கோடி இந்திய ஐடி ஊழியர்கள் அமெரிக்கா செல்ல முடியாமல் போனது மட்டும் அல்லாமல் அமெரிக்காவில் வர்த்தகம் செய்யும் இந்திய நிறுவனங்கள் அமெரிக்கர்களைப் பணியில் அமர்த்த வேண்டிய நிலை உருவானது. இது இந்திய நிறுவனங்களுக்கு மட்டும் அல்லாமல் அமெரிக்காவில் இருக்கும் பிற டெக் மற்றும் சேவை நிறுவனங்களுக்கும் சுமையாக மாறியது.

 ஹெச்1பி விசா தடை
 

ஹெச்1பி விசா தடை

டிரம்ப் அரசு ஜனவரி மாதம் இந்த ஹெச்1பி விசா வழங்குவது மீதான தடையை மார்ச் 31 வரையில் நீட்டித்த நிலையில், உலக நாடுகளில் இருக்கும் கோடிக்கணக்கான மக்களின் அமெரிக்கக் கனவு கேள்விக்குறியானது. இந்தத் தடை உத்தரவால் அமெரிக்காவில் இருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டது.

 பைடன் அரசு அதிரடி

பைடன் அரசு அதிரடி

இதைத் தொடர்ந்து அமெரிக்காவில் புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள பைடன் அரசு முதல் நாளில் இருந்தே டிரம்ப் அரசு விதித்து வந்த பல்வேறு கட்டுப்பாடுகள் உத்தரவுகளை ரத்துச் செய்து அமெரிக்கர்கள் மட்டும் அல்லாமல் அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டு மக்கள் மனதிலும் இடம் பிடித்தார்.

 முக்கிய அறிவிப்புகள்

முக்கிய அறிவிப்புகள்

குறிப்பாகப் பதிவியேற்றிய சில மணிநேரத்தில் எல்லை சுவர் கட்டுவதற்கான நிதியுதவியைத் தடை செய்தது, அரபு நாடுகள் மீது விதிக்கப்பட்ட அனுமதி கட்டுப்பாடுககளை ரத்து செய்தது உலக நாடுகளால் பாராட்டப்பட்டது.

 இந்தியர்களுக்குச் சாதகமானது

இந்தியர்களுக்குச் சாதகமானது

இதேவேளையில் டிரம்ப் அரசு விதித்த ஹெச்4 விசா கட்டுப்பாடுகள் நீக்கம், பழைய லாட்டரி முறையை மீண்டும் அமலாக்கம் செய்தது, கிரீன் கார்டு விண்ணப்பம் செய்த ஹெச்1பி விசா உரிமையாளர்கள் மீது விதிக்கப்பட்ட பயணத் தடை நீக்கியது, சம்பளத்தின் அடிப்படையில் ஹெச்1பி விசா வழங்கும் முறையை ரத்து செய்தது இந்தியர்களுக்கும், இந்திய நிறுவனங்களும் மிகவும் சாதகமாக அமைந்தது.

 நடவடிக்கை எடுக்காத பைடன் அரசு

நடவடிக்கை எடுக்காத பைடன் அரசு

ஆனால் இதுவரையில் ஹெச்1பி விசா வழங்குவதில் டிரம்ப் அரசு விதித்துள்ள தடை பற்றி எவ்விதமான நடவடிக்கையையும் பைடன் அரசு எடுக்காதது வருத்தத்தை அளிக்கிறது. இதுகுறித்து அமெரிக்காவின் ஹோம்லேண்ட் செக்யூரிட்டி துறையின் செயலாளர் Alejandro Mayorkas-விடம் கேள்வி எழுப்பியதற்கு முக்கியமான பதிலைத் தெரிவித்துள்ளார்.

 ஹோம்லேண்ட் செக்யூரிட்டி செயலாளர்

ஹோம்லேண்ட் செக்யூரிட்டி செயலாளர்

அமெரிக்கா பொருளாதாரம், வர்த்தகம், மக்கள் நலன் மேம்படுத்துவதில் அதிகளவிலான பணிகள் உள்ளது, ஆதலால் முக்கியமான பணிகளை முதல் தேர்வு செய்து அதற்கான முடிவுகளையும் நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். ஹெச்1பி விசா மீதான தடை அறிவிப்பின் நிலைப்பாடு குறித்து எவ்விதமான முடிவையும் தற்போது எடுக்கப்படவில்லை என Alejandro Mayorkas கூறினார்.

 ஹெச்1பி விசா வழங்கும் பணிகள்

ஹெச்1பி விசா வழங்கும் பணிகள்

இதேவேளையில் அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்றச் சேவை பிரிவு புதிய நிதியாண்டுக்கான ஹெச்1பி விசா வழங்குவதற்கான பணிகளை அக்டோபர் 1, 2021 முதல் துவங்கி விண்ணப்பங்களைப் பெறத் துவங்கியுள்ளது.

 65,000 ஹெச்1பி விசா

65,000 ஹெச்1பி விசா

மேலும் பிப்ரவரி மாத முடிவில் அமெரிக்க அரசு ஒவ்வொரு வருடமும் அளிக்கும் 65,000 ஹெச்1பி விசா மற்றும் அமெரிக்கக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்ற 20,000 மாணவர்களுக்கான ஹெச்1பி விசா வழங்குவதற்குப் போதுமான விண்ணப்பங்களைப் பெற்றுள்ளதாக அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்றச் சேவை பிரிவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 மார்ச் 31க்குப் பின் என்ன நடக்கும்

மார்ச் 31க்குப் பின் என்ன நடக்கும்

இதன் மூலம் மார்ச் 31க்குப் பின் அமெரிக்க அரசு ஹெச்1பி விசா வழங்கும் பணிகளை வழக்கம் போல் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்தத் தடை மீதான பைடன் அரசு தனது முடிவை அறிவிக்க வேண்டியது கட்டாயம். தடை காலம் முடிந்த பின்பு இயல்பான விதிமுறைகள் நடைமுறைக்கு வருவதும் சாத்தியம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Joe Biden govt undecided on Trump H-1B visa ban ends on March 31: Indians worried

Joe Biden govt undecided on Trump H-1B visa ban ends on March 31: Indians worried
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X