ஒரு பழைய ஷூ 18,00,000 டாலராாாாாா.. அடேய் அநியாயம் பண்ணாதீங்கடா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி ராப் கலைஞரும், டிவி பிரபலம் கிம் கர்தாசியனின் கணவருமான கன்யே வெஸ்ட் 2008 கிராமி விருது வழங்கும் விழாவில் பாடிய போது பயன்படுத்தப்பட்ட ஒரு Nike Air Yeezy 1 ஸ்னீக்கர் ஷூ பிரபல ஏல நிறுவனமான சோத்பை நிறுவனம் சமீபத்தில் ஏலம் விட்டது.

 

இந்த ஸ்னீக்கர் ஷூ-வை கன்யே வெஸ்ட் மற்றும் மார்க் ஸ்மித் ஆகியோர் இணைந்து நைக் நிறுவனத்திற்காக உருவாக்கி முதல் சாம்பிள் ஷூ என்பதாலும், கன்யே வெஸ்ட் போன்ற பிரபலம் பயன்படுத்திய காரணத்தாலும் இதற்கு டிமாண்ட் அதிகமாக இருந்தது.

 அமெரிக்கா மற்றும் ஐரோப்பா

அமெரிக்கா மற்றும் ஐரோப்பா

பொதுவாகவே மேற்கத்திய நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளிலும் ஸ்னீக்கர் ஷூ-க்களுக்குத் தனி மரியாதை உண்டு. இப்பகுதி மக்கள் இதை ஒரு ஷூ-வாக மட்டும் பார்க்காமல் ஒரு ஆடம்பரம், விலைமதிப்புத்தக்க பொருட்களாகவே கருதுகின்றனர்.

 ஸ்னீக்கர் ஷூ டிமாண்ட்

ஸ்னீக்கர் ஷூ டிமாண்ட்

இதுமட்டும் அல்லாமல் பல பிரபலங்கள் ஸ்னீக்கர் ஷூ -க்களுக்காகப் பிரத்தியேக கலெக்ஷன் வைத்துள்ளனர். ஒவ்வொரு ஷூ-ம் பல ஆயிரம் டாலர் கொடுத்து வாங்குவது மட்டும் அல்லாமல் அதைச் சந்தையின் டிமாண்ட் எப்போது குறையாமல் இருக்கும் காரணத்தால் லிமிடெட் எடிசன் ஷூ-க்களுக்கு அதிக விலை கொடுத்து வாங்கவும் தயாராக உள்ளனர்.

 சோத்பை நிறுவனம்
 

சோத்பை நிறுவனம்

இப்படிப்பட்ட ஷூ தான் சோத்பை நிறுவனத்தால் விற்பனை செய்யப்பட்ட Nike Air Yeezy 1 ஸ்னீக்கர் ஷூ. இதுவும் கன்யே வெஸ்ட் போன்ற பிரபலம் அணிந்த ஷூ என்பதால் இதன் விலை தாறுமாறாக உயர்ந்தது.

 18 லட்சம் டாலர்

18 லட்சம் டாலர்

இந்நிலையில் 12 சைஸ் கொண்ட கருப்பு நிற லெதர்-ல் செய்யப்பட்ட Nike Air Yeezy 1 ஸ்னீக்கர் ஷூ RARES என்னும் முதலீட்டு தளத்தால் அதீத தொகை கோரப்பட்ட நிலையில், இந்த ஷூ-வை சுமார் 1.8 மில்லியன் டாலர் அதாவது 18 லட்சம் டாலருக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளதாகச் சோத்பை நிறுவனம் தெரிவித்துள்ளது.

 1985 ஏர் ஜோர்டன் ஷூ

1985 ஏர் ஜோர்டன் ஷூ

இதற்கு முன்பு 1985ஆம் ஆண்டு ஏர் ஜோர்டன் ஷூ மே 2020ல் சோத்பை நிறுவனத்தால் 5,60,000 டாலருக்கு விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது. இதற்குப் பின் தற்போது Nike Air Yeezy 1 ஸ்னீக்கர் ஷூ அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

பணக்காரர்களுக்கு வரி விதிக்கும் அமெரிக்காவின் திட்டம்.. இந்தியாவும் யோசிக்கலாம்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: shoe kim kardashian
English summary

Kanye West ‘Grammy Worn’ Nike Air Yeezy 1 prototype sneakers sold for $1.8M by Sotheby

Sotheby latest update.. Kanye West ‘Grammy Worn’ Nike Air Yeezy 1 prototype sneakers sold for $1.8M by Sotheby
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X