மலேசியா விசா கட்டணங்களில் திடீர் உயர்வு.. இந்தியர்களுக்கான 15 நாள் சுற்றுலா விசாவில் அதிரடி சலுகை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மலேசிய இந்தியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இந்தியர்களுக்கான சுற்றுலா விசா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இப்புதிய அறிவிப்பின் படி 1 ஆண்டுக்கான இந்திய விசா கட்டணம் 457 ரிங்கிட் 56 காசுகள் எனக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது..

ஏப்ரல் 1 முதல் இந்தப் புதிய விசா கட்டணம் அமலுக்கு வந்த நிலையில் ஓராண்டு காலத்திற்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்தியர்கள் மலேசியாவிற்குப் பயணம் செய்யலாம்.

பல கட்டணங்கள்

பல கட்டணங்கள்

இதற்கு முன் ஒரு மாத விசா கட்டணம், 3 மாத விசாகட்டணம் மற்றும் 6 மாத விசா கட்டணம் எனப் பலபிரிவுகளில் விசா கட்டணங்கள் இருந்தது. தற்போது ஒரே கட்டணமாக 457 ரிங்கிட் 56 காசுகள் வசூலிக்கப்படும் என மலேசிய அரசு தெரிவித்துள்ளது.

1 ஆண்டு விசா

1 ஆண்டு விசா

அனைவருக்கும் எவ்விதமான தடையுமின்றி ஓராண்டுக்கான விசாவாக வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இதுவரையில் இந்தியா செல்லும் மலேசிய சுற்றுப் பயணிகளுக்கான விசா கட்டணம் 190 ரிங்கிட்டாகத்தான் இருந்தது.

மாணவர்கள்

மாணவர்கள்

ஏப்ரல் 1 முதல் அது 457 ரிங்கிட் 56 காசுகளாக அதிகரிக்கப் பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது. இந்தியாவில் படிக்கும் மலேசிய மாணவர்களுக்கான விசா கட்டணம் 359 ரிங்கிட் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விசா அவர்களின் படிப்பு முடியும் வரை அல்லது 5 ஆண்டுகள் வரைக்குமான பலமுறை பயணத்திற்கான விசா கட்டணமாகும்.

 

இந்தியர்களுக்கு அதிரடி ஆஃபர்

இந்தியர்களுக்கு அதிரடி ஆஃபர்

புதிய விண்ணப்பப் பரிசீலனைக் கட்டணத்தைத் தவிர மலேசியாவுக்கான 15 நாள் விசா கட்டணம் இந்தியப் பயணிகளுக்கு மிகவும் குறைந்த கட்டணத்தில் அளிக்கப்படும் என் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப், இந்திய பயணத்தின் போது அறிவித்தார். இதுப்புதிய அறிவிப்பு மலேசிய சுற்றுலாத் துறைக்கு மிகப்பெரிய அளவிலான உந்துதலை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

31 மில்லியன் சுற்றுலாப் பயணிகள்

31 மில்லியன் சுற்றுலாப் பயணிகள்

2017-18 நிதியாண்டில் மட்டும் மலேசியா 31 மில்லியன் சுற்றுலா பயணிகளை ஈர்க்க திட்டமிட்டுள்ளது. அந்த முயற்சிக்கு இந்திய பயணிகளுக்கான இந்தச் சிறப்புத் திட்டம் மிகப்பெரிய அளவில் உதவும் என்று அந்நாட்டுச் சுற்றுலாத் துறை தலைமை இயக்குனர் டத்தோஶ்ரீ மிர்ஷா முகமட் தாய்ப் தெரிவித்துள்ளார்.

குறைந்த கட்டணம்

குறைந்த கட்டணம்

இந்திய சுற்றுலா பயணிகள் மலேசியா வருவதற்கு 15 நாள் விசா விண்ணப்பப் பரிசீலனைக் கட்டணமாக 20 அமெரிக்க டாலர் அல்லது 88.50 ரிங்கிட் மட்டுமே இனி செலுத்தவேண்டியிருக்கும்.

இந்தியா தான் டார்கெட்

இந்தியா தான் டார்கெட்

இந்தப் புதிய விசா திட்டத்தின்வழி இந்தியாவிலிருந்து 10 லட்சம் சுற்றுலா பயணிகளை மலேசியாவிற்கு ஈர்க்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ரிங்கட் மதிப்பு

ரிங்கட் மதிப்பு

மலேசிய ரிங்கட் நாணயத்திற்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தெரிந்துக்கொள்ள இதை கிளிக் செய்யவும்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Malaysian govt waives off visa fees for Indian tourists

Malaysian govt waives off visa fees for Indian tourists - Tamil Goodreturns
Story first published: Sunday, April 2, 2017, 14:05 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X