புகை பிடிக்கும் பழக்கம் இல்லையா? உங்களுக்கு 6 நாள் கூடுதல் விடுமுறை.. ஜப்பான் நிறுவனம் அதிரடி!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அடிக்கடி வெளியில் புகைபிடிக்கச் செல்வதால் உற்பத்தி குறைகின்றது என்று வருத்தப்பட்டதுண்டா?

 

அப்படியானால் ஜப்பான் நிறுவனத்தின் ஐடியாவை உங்கள் நிறுவனத்தில் அமல்படுத்திப்பாருங்கள். வேலை நேரத்தில் புகைபிடிக்கச் செல்லாத ஊழியர்களுக்கு ஜப்பான் நிறுவனம் ஒன்று ஆண்டுக்குக் கூடுதலாக 6 நாட்கள் விடுமுறை அளித்துள்ளது.

பியாலா இன்க்

பியாலா இன்க்

டக்கொயோபை தலைமியிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ‘பியாலா இன்க்' அன்மையில் தனது நிறுவனத்தின் ஆலோசனை பெட்டியில் ஊழியர்கள் சிலர் புகைபிடிக்க ஓய்வு எடுக்க ஊழியர்களை விடப் புகைபிடிக்காதவர்கள் அதிகளவில் வேலை செய்கின்றனர் எனவும் அவர்களுக்குக் கூடுதல் நன்மைகள் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

புகைப்பழக்கம் இல்லாத தலைவர்

புகைப்பழக்கம் இல்லாத தலைவர்

பியாலா இன்க் நிறுவனத்தின் மூத்த தலைவர் தாகோ ஆசுகாவும் புகைபிடிக்கும் பழக்கம் இல்லாதவர் என்பதால் இந்த ஊழியர்களுக்குக் கூடுதல் நன்மைகளை அளிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்.

 பரிசுக்குப் பதில் கூடுதல் விடுமுறை
 

பரிசுக்குப் பதில் கூடுதல் விடுமுறை

எனவே புகைபிடிக்கச் செல்லாமல் அதிக உற்பத்தி அளிக்கும் ஊழியர்களுக்குப் பரிசுகள் அளிப்பதைவிட விடுமுறை அளிக்கத் தாகோ ஆசுகா முடிவு செய்துள்ளார். ஏன் என்றால் 29 மாடியில் உள்ள இவரது அலுவலகத்தில் இருந்து ஒருவர் புகைபிடிக்கச் சென்று வர வேண்டும் என்றால் 15 நிமிடங்கள் வரை ஆகும்.

வெற்றி பெற்ற திட்டம்

வெற்றி பெற்ற திட்டம்

பியாலா நிறுவனத்தில் இந்தப் புதிய விதிமறையினைச் செப்டம்பர் மாதம் முதல் பின்பற்ற துவங்கியுள்ளனர். இதனால் 12 பணிபுரியும் இந்த நிறுவனத்தில் 30 பேர் இந்த நன்மைகளைப் பெறுவதுடன் 4 ஊழியர்கள் புகைப்பழக்கத்தை விட்டு விடுமுறையினைப் பெற முடிவு செய்துள்ளனர்.

 ஒலிம்பிக்

ஒலிம்பிக்

ஜப்பானில் பியாலா நிறுவனம் மட்டும் இந்தத் திட்டத்தினைக் கொண்டுவரவில்லை. ஜப்பான் அரசும் 2020-ம் ஆண்டு டோக்கியோவில் புகைப்பழக்கம் இல்லாத ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் விளையாட்டு போட்டிகளை நடத்த முடிவு செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Non smokers’ employees of this Japanese firm gets six extra days leave for compensate cigarette breaks

Non smokers’ employees of this Japanese firm gets six extra days leave for compensate cigarette breaks
Story first published: Thursday, November 2, 2017, 12:51 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X