ஒரு முறைக்கே தாங்கல.. இரண்டாவது முறை கொரோனாவா.. விளைவு சரியும் கச்சா எண்ணெய் விலை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நியூயார்க்: இரண்டாவது முறையாக கொரோனாவின் தாக்கம் வந்துவிடுமோ என்ற பதற்றத்திலே பங்கு சந்தைகளும், சரி, கச்சா எண்ணெய் விலையும் மீண்டும் சரிய ஆரம்பித்துள்ளது.

 

கொரோனா வைரஸின் தாக்கம் ஒரு முறை வந்த பிறகே கச்சா எண்ணேய் விலையானது மைனஸில் சென்று பின்னர் திரும்பியது. வரலாற்றில் மீண்டும் இப்படி ஒரு நிகழ்வு இருக்குமா? அப்படி நடக்கவும் கூடாது என்பதே எண்ணெய் உற்பத்தி நாடுகளின் எண்ணமாக உள்ளது.

ஆனால் போகிறபோக்கினை பார்த்தால் மீண்டும் அப்படி ஒரு சூழ்நிலை வந்துவிடுமோ என்ற பயம் நிலவி வருகிறது.

விலை சரிந்தது

விலை சரிந்தது

ஏனெனில் சீனாவில் கடந்த சில வாரங்களாக கொரோனாவின் தாக்கம், இல்லாமல் இருந்த நிலையில் கடந்த சில தினங்களாக புதிய கொரோனா வழக்குகள் பதிவாகி வருகின்றன. இதனால் இரண்டாவது முறையாக கொரோனாவின் தாக்கம் தொடங்கியுள்ளதோ என்ற எண்ணம் நிலவி வருகிறது. முதல் முறையாக கொரோனா வந்த பிறகே, கச்சா எண்ணெய் விலையானது அதள பாதாளம் நோக்கி சென்றது.

உற்பத்தி அதிகம்

உற்பத்தி அதிகம்

அதே நேரம் தேவையும் வெகுவாக குறைந்தது. சீனாவில் கொரோனா இல்லாவிட்டாலும், மற்ற உலக நாடுகளிள் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதோடு எண்ணெய் உற்பத்தி நாடுகளிலும் உற்பத்தி மலை போல குவிந்தது. இன்னும் தெளிவாக சொல்லப்போனால் எண்ணெய் வைக்கக்கூட இடமில்லாமல் போகலாம் என்றெல்லாம் கூறப்பட்டது.

மீண்டும் உற்பத்தி குறைக்கப்படலாம்
 

மீண்டும் உற்பத்தி குறைக்கப்படலாம்

இதற்கிடையில் எண்ணெய் தேவையும் குறைந்துள்ள நிலையில், எண்ணெய் விலையானது தொடந்து குறைந்து வருகின்றது. இன்னும் சொல்லப்போனால் ஓபெக் நாடுகள் எண்ணெய் உற்பத்தியினை குறைத்துள்ள நிலையில் கூட, அதிக சப்ளை இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக எண்ணெய் உற்பத்தி மீண்டும் குறைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

உபயோகம் சரிவு

உபயோகம் சரிவு

ஆக அதிகளவிலான சப்ளை மற்றும் விலை சரிவு இவை எண்ணெய் ஜாம்பவான் ஆன சவுதிக்கே மேலும் கவலையளிக்கும் விதமாக அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இங்கு கொரோனா இரண்டாவது முறையாக தொடரலாம் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரையில் கச்சா எண்ணெய் விலையானது வைரஸினால் 55 சதவீதம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

தேவை தொடர்ந்து குறைந்து வருகிறது

தேவை தொடர்ந்து குறைந்து வருகிறது

கடந்த இரண்டு வாரங்களாக சற்று ஏற்றம் காணத் தொடங்கினாலும், தேவையானது போக்குவரத்து தடையால் தொடர்ந்து குறைந்து வருவது சற்று கவலையளிக்கும் விதமாக அமைத்துள்ளது. மேலும் கொரோனாவின் தாக்கம் சற்று எளிதாக்கப்பட்ட நிலையில், தற்போது கொரோனாவின் தாக்கம் அதிவேகமாக அதிகரித்து வருவதாக ஜெர்மனி திங்களன்று தெரிவித்துள்ளது.

உற்பத்தி குறைப்பு கைகொடுக்கவில்லை

உற்பத்தி குறைப்பு கைகொடுக்கவில்லை

இதே சீனாவிலும் லாக்டவுன் முற்றிலும் நீக்கப்பட்டுள்ள நிலையில் புதிய கொரோனா வழக்குகள் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளதாக அறிவித்து வருகிறது. இதே போல தென் கொரியாவும் இரண்டாவது அலை குறித்து எச்சரித்து வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே எண்ணெய் உற்பத்தி நாடுகள் மே 1ல் இருந்து ஒரு நாளைக்கு 10 மில்லியன் பேரல்கள் உற்பத்தியினை குறைத்து வருகின்றன. ஆனால் இதுவும் கைகொடுத்ததாக தெரியவில்லை.

இன்று விலை நிலவரம்

இன்று விலை நிலவரம்

இந்த நிலையில் ஜூன் 1ல் இருந்து 1 மில்லியன் பேரல்கள் உற்பத்தியினை அந்த நாட்டு அமைச்சகம் கூறிய நிலையில், விலையானது கடந்த திங்கட்கிழமையன்றே சற்று அதிகரித்தது. எனினும் இன்று டபள்யூடிஐ கச்சா எண்ணெய் விலை 0.47% குறைந்து 25.68 டாலராக குறைந்துள்ளது. இதே பிரென்ட் கச்சா எண்ணெய் விலையானது 1.53% வீழ்ச்சி கண்டு 29.52 டாலராக வர்த்தகமாகி வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Oil prices again start to fall on fears of second coronavirus wave

Crude oil prices fell today as investors’ worries about a second wave of coronavirus pandemic.
Story first published: Wednesday, May 13, 2020, 13:00 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X