எண்ணெய் ஜம்பாவான்களுக்கு ஜாக்பாட் தான்.. இந்தியாவுக்கு தான் பிரச்சனை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கச்சா எண்ணெய் விலையானது சர்வதேச சந்தையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று மூன்று வருட உச்சமான 85 டாலர்களுக்கும் மேலாக வர்த்தகமாகியது.

 

இது வரவிருக்கும் வாரத்திலும் இன்னும் ஏற்றத்தினை காணலாம் என்ற நிலையே இருந்து வருகிறது.

வார இறுதியில் கண்ட பலத்த சரிவு.. இந்த வாரமும் தங்கம் விலை குறையலாம்.. நிபுணர்கள் பளிச் கணிப்பு..!

இது சப்ளை பற்றாக்குறை மற்றும் தேவை அதிகரிப்பின் காரணமாக, இந்த விலை அதிகரிப்பு இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

உற்பத்தி குறைப்பு

உற்பத்தி குறைப்பு

கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து கொரோனாவின் தாக்கத்தின் மத்தியில், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் தேவையானது சற்று மிதமாக இருந்து வந்தது. இதனால் விலையானது பாதாளம் நோக்கி சென்றது. இதற்கிடையில் எண்ணெய் விலையை கட்டுக்குள் வைக்க, எண்ணெய் உற்பத்தி நாடுகள் உற்பத்தியை குறைத்தன.

தேவை அதிகரிப்பு

தேவை அதிகரிப்பு

எனினும் தற்போது பல நாடுகளிலும் கொரோனா தாக்கம் குறைந்து வரும் நிலையில், மீண்டும் எரிபொருளுக்கான தேவையானது அதிகரித்து வருகின்றது. இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக நிலக்கரி பற்றாக்குறையால், சீனா, இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் தேவையானது மேற்கொண்டு அதிகரித்துள்ளது. இது மேற்கொண்டு விலை அதிகரிப்புக்கு காரணமாக அமையலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.

எண்ணெய் விலை அதிகரிக்கலாம்
 

எண்ணெய் விலை அதிகரிக்கலாம்

இதற்கிடையில் இது இன்னும் எரிபொருள்களின் விலையை ஊக்குவிக்கலாம் என்ற கருத்தும் நிலவி வருகின்றது. இதனால் வரவிருக்கும் மாதங்களில் கச்சா எண்ணெய் விலை இன்னும் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.

சர்வதேச அளவில் கொரோனாவின் தாக்கத்தினை கருத்தில் கொண்டு, பல நாடுகளிலும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட நிலையில், தற்போது பல நாடுகளிலும் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இது மேற்கொண்டு தேவையை அதிகரிக்கலாம்.

வளர்ச்சி பாதையில் பொருளாதாரம்

வளர்ச்சி பாதையில் பொருளாதாரம்

தற்போது மீண்டும் பொருளாதாரம் வளர்ச்சி காணத் தொடங்கியுள்ளது. தொழில்துறைகள் மீண்டும் வளர்ச்சிக்கான தொடங்கியுள்ளன. இந்த நிலையில்தான் மின்வெட்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இது மேற்கொண்டு எரிபொருள் தேவையை ஊக்குவிக்கலாம் என்ற கருத்து நிலவி வருகிறது. இந்த நிலையில் தான் கச்சா எண்ணெய் விலையானது தொடர்ந்து உச்சம் தொட்ட வருகின்றது.

WTI கச்சா எண்ணெய் விலை

WTI கச்சா எண்ணெய் விலை

வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெய் விலை கடந்த அமர்வில், அதிகபட்சமாக பேரலுக்கு 82.66 டாலர்களாக வர்த்தகமாகி, முடிவில் 82.53 டாலர்களாகவும் முடிவுற்றுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் -40 டாலர்களுக்கும் அருகில் வர்த்தகமாகிய நிலையில், இது தற்போது மும்மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது.

பிரென்ட் கச்சா எண்ணெய் விலை

பிரென்ட் கச்சா எண்ணெய் விலை

பிரென்ட் கச்சா எண்ணெயின் விலையானது கடந்த வெள்ளிக்கிழமையன்று அமர்வில், பேரலுக்கு 84.84 டாலர்களாக முடிவுற்றுள்ளது. இது அதிகபட்சமாக 85.10 டாலர்கள் வரையில் சென்றது. இந்த விலை ஏற்றமானது வரவிருக்கும் வாரங்களிலும் மேற்கொண்டு அதிகரிக்கலாம் என்ற நிலையே நிலவி வருகின்றது

தேவை அதிகரிக்கலாம்

தேவை அதிகரிக்கலாம்

தற்போது கொரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ளது. இது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் தேவை அதிகரிக்க வழிவகுத்துள்ளது. இது மேலும் எண்ணெய் விலை ஏற்றம் காண காரணமாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பல நாடுகளில் நிலவி வரும் மின்வெட்டுக்கு மத்தியில், இது கேஸ், நிலக்கரி, டீசல் விலையை ஊக்குவிக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

இது இன்னும் விலையை ஊக்குவிக்கும்

இது இன்னும் விலையை ஊக்குவிக்கும்

நவம்பர் 8 முதல் கொண்டு அமெரிக்காவில் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்ட, அண்டை நாட்டினரை அமெரிக்காவில் அனுமதிக்கப்படலாம் என்று கூறப்படும் நிலையில், இது மேற்கொண்டு கச்சா எண்ணெய் விலையை ஊக்குவிக்கலாம் என்ற நிலையும் நிலவி வருகின்றது.

எண்ணெய் உற்பத்தி நாடுகள்

எண்ணெய் உற்பத்தி நாடுகள்

கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகள் (OPEC) அடுத்து வரவிருக்கும் நவம்பர் முதல் உற்பத்தியினை அதிகரிக்கலாம். இதன் மூலம் சப்ளையும் அதிகரிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளன. எனினும் இது அப்போது விலை குறைய காரணமாக அமையலாம் என்றாலும், தற்போதைக்கு விலை குறையாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவுக்கு பாதிப்பு

இந்தியாவுக்கு பாதிப்பு

இந்த விலை அதிகரிப்பானது ஒருபுறம் எண்ணெய் உற்பத்தி நாடுகள் அதற்கு சாதகமான விஷயமாக பார்க்கப்பட்டாலும், மறுபுறம் இந்தியா போன்ற இறக்குமதி செய்யும் மிகப்பெரிய நாடுகளுக்கு பெரும் பாதிப்பாக அமையும் எனலாம். ஏனெனில் அதிக விலை கொடுத்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நிலைக்கு, இறக்குமதி நாடுகள் தள்ளப்படலாம். இது இறக்குமதி நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். குறிப்பாக இந்தியா போன்ற மிகப் பெரிய இறக்குமதி நாடுகள் அதிக அளவிலான எண்ணெயை இறக்குமதி செய்து வருகின்றன. இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் மிகப்பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

இறக்குமதி நாடுகளில் தாக்கம்

இறக்குமதி நாடுகளில் தாக்கம்

ஏற்கனவே இந்தியாவில் உச்சத்தில் உள்ள பெட்ரோல் டீசல் விலை, சில இடங்களில் 110 ரூபாயினை தொட்டுள்ளது. இது வரவிருக்கும் வாரங்களில் இன்னும் விலை அதிகரிக்கலாம் என்ற நிலையில், இந்தியா போன்ற நாடுகள் பெருமளவில் எண்ணெய் இறக்குமதியை செய்து வரும் நிலையில், இது இந்தியாவில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Oil prices rise to 3 year high amid supply crunch; it’s a jackpot for OPEC countries

Oil prices rise to 3 year high amid supply crunch; it’s a jackpot for OPEC countries
Story first published: Sunday, October 17, 2021, 14:11 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X