கொரோனாவ விடுங்க பாஸ்.. ஓப்போ, ஜியோமி, அலிபாபா நிறுவனங்கள் எடுத்த அதிரடி முடிவ பாருங்க.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெய்ஜிங்: உலகம் முழுக்க கொரோனா வைரஸின் தாக்கம் இருக்கிறதோ இல்லையோ அதன் பயம் எல்லாரையும் தொற்றிக் கொண்டுள்ளது.

சுமார் இதுவரை 7.174 பேரினை பலி கொண்டுள்ள இந்த வைரஸினால், 1,82,742 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே இந்தியாவினை பொறுத்த வரையில் மூன்று பேர் கொரோனா வைரஸினால் பலியாகியுள்ளனர். கிட்டதட்ட 130-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸினால் தாக்கம் அடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கம் இப்படி ஒரு புறம் இப்படி சென்று கொண்டிருக்கிறது எனில், கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட சீனா தொழில்நுட்ப நிறுவனங்களான அலிபாபா, ஜியோமி, ஒப்போ உள்ளிட்ட நிறுவனங்கள் பேஸ் மாஸ்க் உள்ளிட்ட பல மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வாரி வழங்கியுள்ளனராம்.

ஒப்போவின் அதிரடி நடவடிக்கை
 

ஒப்போவின் அதிரடி நடவடிக்கை

சீனாவின் முன்னணி ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான ஒப்போ நிறுவனம் சீனாவினை தவிர மற்ற ஐந்து நாடுகளுக்கு இதுவரை 3,00,000 பேஸ் மாஸ்குகளை நன்கொடையாக வாரி வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இது இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. இது FFP3 மற்றும் N95 முகமூடிகளை நன்கொடையாக அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

ஜியோமி நன்கொடை

ஜியோமி நன்கொடை

இந்த மாதத் தொடக்கத்தில் ஜியோமி ஸ்மார்ட்போன் நிறுவனம், இத்தாலியின் சிவில் பாதுகாப்புக்கு FFP3 சர்ஜிகல் மாஸ்கினை அனுப்பியுள்ளதாகவும் கூறியுள்ளது. சீனாவுக்கு வெளியே பாதிக்கப்பட்ட நாடுகளில் தற்போது இத்தாலி முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜாக்மா அறிவித்த ஜாக்பாட்

ஜாக்மா அறிவித்த ஜாக்பாட்

இதே அலிபாபா நிறுவனர் ஜாக்மா தனது ட்விட்டர் பக்கத்தில் 1 மில்லியன் பேஸ்புக் முகமூடிகள் மற்றும் 5,00,000 கொரோனா வைரஸ் குறித்த மருத்துவ கருவிகள் அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் தடுப்பூசியின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு உதவுவதற்காக 100 மில்லியன் யுவானினை நன்கொடை அனுப்புவதாக கடந்த ஜனவரி மாதமே ஜாக்மா அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தொற்று நோயின் மையம்
 

தொற்று நோயின் மையம்

ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க், நெதர்லாந்து மற்றும் அயர்லாந்து உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் நாடு தழுவிய பூட்டுதல்களை தற்போது தழுவியுள்ளன. குறிப்பாக இத்தாலியில் மட்டும் பரவி வரும் கொரோனாவால் 24,747 பேர் தாக்கம் அடைந்துள்ளதாக அந்த நாடு அறிவித்துள்ளது. இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் மார்ச் 1 முதல் இது மிக வேகமாக பரவி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஐரோப்பா தற்போது இந்த கொடிய தொற்று நோயின் மையாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

உலகம் முழுக்க பரவல்

உலகம் முழுக்க பரவல்

உலகத்தில் பெரும்பாலான நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸ் தற்போது சுமார் 118 நாடுகளில் பரவியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் தற்போது வேகமெடுத்து பரவி வருகிறது. இதன் காரணமாக இந்தியாவிலும் பல நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து பணி புரிய அனுமதித்து வருகின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Oppo, xiaomi, alibaba firms donated masks and other medical equipments

Chinese tech firms OPPO, Xiaomi and alibaba chairman jack ma donated masks and some other medical equipments to the countries of severely affected by the coronavirus.
Story first published: Tuesday, March 17, 2020, 14:28 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X