பாகிஸ்தானுக்கு பலத்த அடி! நீளும் பிரச்சனைகள் பட்டியல்! எல்லாம் கொரோனாவால் வந்த வினை!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வைரஸ், செல்வச் செழிப்போடு இருக்கும் அமெரிக்காவையே பல வழிகளில் துவம்சம் செய்து கொண்டிருக்கும் போது, குட்டி குட்டி நாடுகள், அதிகம் பண பலம் இல்லாத நாடுகள் எல்லாம் தாக்கு பிடிக்க முடியுமா என்ன?

 

அப்படி அடி வாங்கும் நாடுகள் பட்டியலில் பாகிஸ்தானுக்கும் ஒரு முக்கிய இடம் இருக்கிறது.

இது குறித்து பாராளுமன்றத்திலேயே, பாகிஸ்தான் அரசியல்வாதிகள் மற்றும் அமைச்சர்கள் விவாதித்து இருக்கிறார்கள். வாருங்கள் அங்கிருந்தே தொடங்குவோம்.

வேலை இழப்பு

வேலை இழப்பு

கொரோனாவால், பாகிஸ்தானில் ஏற்பட இருக்கும் பொருளாதார விளைவுகளைப் பற்றி செனட்டர் முஸ்தாக் அஹமத் கேள்வி எழுப்பினார். அதற்கு பாகிஸ்தான் நிதி அமைச்சகம் ஒரு நீண்ட பதிலைக் கொடுத்து இருக்கிறது. அதில் முதல் பகுதியே வேலை இழப்பு தான். பாகிஸ்தானின் தொழில் துறையில் 10 லட்சம் பேர் வேலை இழக்க வாய்ப்பு இருக்கிறதாம். பாக் சேவைத் துறையில் சுமாராக 20 லட்சம் பேர் வேலை இழப்பார்களாம்.

மொத்தம் எவ்வளவு

மொத்தம் எவ்வளவு

விவசாயம், உற்பத்தி, சேவைத் துறை என எல்லாவற்றையும் சேர்த்து Pakistan Institute of Development Economics study கணக்குப் படி சுமாராக 1.80 கோடி பேர் வேலை இழக்க வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறது பாக் நிதி அமைச்சகம். இது பாகிஸ்தானுக்கு மிகப் பெரிய எண். இன்னொரு பக்கம் கொரோனா வைரஸும் தொடர்ந்து வேகமாக பாகிஸ்தானில் பரவி வருகிறது. தற்போது 90,000 பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

வறுமைக் கோடு
 

வறுமைக் கோடு

தற்போது பாகிஸ்தானின் வறுமைக் கோட்டுக்குக் கீழ் 24.3 சதவிகிதம் மக்கள் வாழ்ந்து வருகிறார்களாம். கொரோனாவால் இந்த எண்ணிக்கை 33.5 சதவிகிதமாக அதிகரிக்கும் எனச் சொல்லி இருக்கிறது பாகிஸ்தான் நிதி அமைச்சகம். 9% மக்கள் கொரோனாவால் மட்டும் வறுமை கோட்டுக்குக் கீழ் வாழப் போகிறார்கள்.

நிதி பற்றாக்குறை (Fiscal Deficit)

நிதி பற்றாக்குறை (Fiscal Deficit)

பாகிஸ்தான் அரசு, இந்த ஆண்டில், தன் நிதிப் பற்றாக்குறையை ஜிடிபியில் 7.5 சதவிகிதமாக நிர்ணயித்து இருந்தது. ஆனால் இப்போது இந்த கொரோனாவால், தன்னிச்சையாக பாகிஸ்தானின் ஜிடிபியில் நிதிப் பற்றாக்குறை 9.4 சதவிகிதத்தைத் தொடலாம் என்கிறது பாகிஸ்தான் நிதி அமைச்சகம்.

வியாபாரம்

வியாபாரம்

அமெரிக்கா, அரபு நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம்... என பல நாடுகளும் ஏற்றுமதி வியாபாரத்தை நிறுத்தி இருப்பதால், பாகிஸ்தானின் ஏற்றுமதி 25 பில்லியனில் இருந்து 22 பில்லியனாக சரியும் என்கிறது பாக் நிதி அமைச்சகம். அதே போல பாகிஸ்தானின் ரெமிட்டன்ஸ் (வெளிநாட்டு பண வரவு) 23 பில்லியன் டாலரில் இருந்து 21 பில்லியன் டாலராக சரியும் எனவும் கணித்திருக்கிறது.

வரி காலி

வரி காலி

பாகிஸ்தான் நாட்டின் வரி வருவாய் கூட இந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையான மாதங்களில் 4 - 5.5 பில்லியன் டாலர் வரை இழப்பு ஏற்படலாம் என பாகிஸ்தானின் ஃபெடரல் போர்ட் ஆஃப் ரெவன்யூ (Federal Board of Revenue) சொல்லி இருக்கிறார்கள்.

பாகிஸ்தானி ரூபாய் சரிவு

பாகிஸ்தானி ரூபாய் சரிவு

அவ்வளவு ஏன்... கடந்த பிப்ரவரி மாதத்தில் ஒரு அமெரிக்க டாலருக்கு 154 ரூபாயாக இருந்த பாகிஸ்தானி ரூபாய் மதிப்பு, மார்ச் 2020-ல் 166.70 பாகிஸ்தானி ரூபாயாக சரிந்து இருக்கிறதாம். இப்படி பாகிஸ்தானும், பாகிஸ்தான் பொருளாதாரமும், பாகிஸ்தான் மக்களும் கொரோனாவால் சுத்தி சுத்தி செம அடி வாங்கி இருக்கிறார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Pakistan finance ministry listed out pak economy problems due to COVID-19

The Pakistan finance ministry listed out many economic problems like job loss, revenue loss, Poverty line people count, etc., due to covid-19.
Story first published: Saturday, June 6, 2020, 15:23 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X