பாகிஸ்தானுக்கு மீண்டும் செக்! வாய் திறக்காத இந்தியா!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஏற்கனவே பாகிஸ்தானின் பொருளாதாரம் இந்திய பொருளாதாரத்தை விட அதிக சிக்கல்கள் நிறைந்து கிடக்கிறது.

 

இத்தனை சிக்கல்கள் நிறைந்து இருக்கும் போது, பாகிஸ்தானுக்கு கிடைக்க வேண்டிய நிதி உதவி, கடன் உதவிகள் கூட பறி போக வாய்ப்பு இருக்கிறது என்றால் என்ன சொல்வீர்கள்.

அப்படி ஒரு தர்மசங்கடமான சூழலில் பாகிஸ்தானும் மாட்டிக் கொண்டு இருக்கிறது.

கொஞ்சம் வரலாறு

கொஞ்சம் வரலாறு

FATF என்கிற அமைப்பு கடந்த 1989 முதல் இயங்கி வரும் ஒரு பன்னாட்டு அரசு அமைப்பு (Inter Govt Body). உலக அளவில் பணச் சலவையைத் தடுப்பது, தீவிரவாதிகளுக்கான நிதி போக்குவரத்துகளை தடுப்பது என சர்வதேச நிதி இயக்கத்துக்கு பிரச்னையாக இருக்கும் அனைத்தையும் சமாளிக்கும் ஒரு அமைப்பு. FATF அமைப்பின் வேலையே, மேலே சொன்ன தவறுகள் நடக்காத வண்ணம் சட்டம் & செயல் திட்டங்களை வகுப்பது, தர நிர்ணயம் செய்வது போன்றவைகள் தான்.

ப்ளாக் லிஸ்ட் & க்ரே லிஸ்ட்

ப்ளாக் லிஸ்ட் & க்ரே லிஸ்ட்

சரி, ப்ளாக் லிஸ்ட் செய்தால் அல்லது க்ரே லிஸ்டில் வைக்கப்பட்டால்... என்ன மாதிரியான பின் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும்? ஒரு நாட்டை FATF அமைப்பு பிளாக் லிஸ்ட் செய்தால், அந்த நாட்டுக்கு சர்வதேச அமைப்புகள் கடன் கொடுப்பது தொடங்கி மற்ற நாடுகள் முதலீடு செய்வது வரை எல்லாமே பெரிய அளவில் பாதிக்கப்படும்.

பொருளாதாரம்
 

பொருளாதாரம்

சொல்லப் போனால் அந்த நாடு மற்ற நாடுகளுடன் அன்றாடம் மேற்கொள்ளும் ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் மற்றும் வர்த்தகங்கள் கூட பெரிய அளவில் பாதிக்கப்படலாம் எனச் சொல்கிறார்கள். அன்றாட ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகங்களே பாதிக்கப்படும் போது, ம்ற்ற நாட்டுக்காரர்கள் நம்பி FATF ப்ளாக் லிஸ்ட் செய்து இருக்கும் நாட்டில் முதலீடு செய்வார்களா என்ன..? எனவே ப்ளாக் லிஸ்ட் அல்லது க்ரே லிஸ்ட் செய்யப்பட்டால் ஒட்டு மொத்த பொருளாதாரமும் கொஞ்சம் அழுத்தத்துக்கு உள்ளாகும்.

எச்சரிக்கை

எச்சரிக்கை

கடந்த அக்டோபர் 2019-ல், பாகிஸ்தானும் இந்த FATF அமைப்பின் விதிகளை முறையாக பின்பற்றாததால் ப்ளாக் லிஸ்டிலேயே வைக்கப்பட்டார்கள். FATF அமைப்பு, பாகிஸ்தான், லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகம்மத் போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி செய்வதாகச் சொல்லி, பாகிஸ்தானை மிகக் கடுமையாக எச்சரித்தது.

பாகிஸ்தானுக்கு என்ன

பாகிஸ்தானுக்கு என்ன

கடந்த அக்டோபர் 2019 காலத்தில், FATF அமைப்பு, உலக நாடுகள் தங்கள் நிதித் துறையில் 27 விதிமுறைகளை பின்பற்றச் சொன்னது. ஆனால் 27 விதிகளில், பாகிஸ்தான் 05 விதிமுறைகளைத் தான் சரியாக கடை பிடித்து இருப்பதாகச் சொன்னார்கள் FATF அமைப்பினர்கள். இப்படி FATF அமைப்பின் அனைத்து விதிமுறைகளையும், வரும் பிப்ரவரி 2020-க்குள் முழுமையாக நடைமுறைப் படுத்தவில்லை என்றால் பாகிஸ்தான் ப்ளாக் லிஸ்ட் செய்யப்படும் எனவும் எச்சரித்தார்கள்.

இப்போது

இப்போது

இன்று, பிப்ரவரி 18, 2020, FATF அமைப்பின் துணை அமைப்பான FATF's International Co-operation Review Group (ICRG)என்கிற அமைப்பின் கூட்டம் இன்று பாரிஸில் நடந்ததது. இந்த கூட்டத்தில், பாகிஸ்தான் தீவிரவாதத்துக்கான நிதி போக்குவரத்துக்களை சரியாக கண்காணிக்கவில்லை எனச் சொல்லி, பாகிஸ்தானை க்ரே லிஸ்டிலேயே வைக்க பரிந்துரைத்து இருக்கிறார்கள்.

பாக்-க்கு செக்

பாக்-க்கு செக்

இந்த பரிந்துரை, கிட்டத்தட்ட பாகிஸ்தானுக்கு ஒரு செக் வைத்தாற் போலத் தான் இருக்கிறது. வரும் பிப்ரவரி 21, 2020, வெள்ளிக்கிழமை அன்று, இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் சொல்லி இருக்கிறார்கள். இதுவரை இந்தியா இந்த விஷயத்தில் வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் நடவடிக்கை

பாகிஸ்தான் நடவடிக்கை

சமீபத்தில் தான், பாகிஸ்தானின் சிறப்பு தீவிரவாத நீதிமன்றத்தில், 2008 மும்பை தாக்குதலுக்கு மூல காரணமாக இருந்த ஹஃபீஸ் சய்யத்-க்கு, இரண்டு தீவிரவாத தாக்குதல்களுக்கு பண உதவி செய்ததாகச் சொல்லி, 11 ஆண்டுகள் தண்டனை விதித்தது. இது முற்றிலும் FATF அமைப்பை திருப்திப்படுத்தவே இந்த நடவடிக்கைகளை எடுத்து இருப்பதாகவும் சொல்லப்படுகின்றன.

பாகிஸ்தான் பொருளாதாரம்

பாகிஸ்தான் பொருளாதாரம்

சர்வதேச பன்னாட்டு நிதியத்தின் (IMF - Internation Monetary Fund) கணிப்பின் படி பாகிஸ்தானின் பொருளாதாரம் 2019-ம் ஆண்டில் 3.3 சதவிகிதமாகவும், 2020-ம் ஆண்டில் 2.6 சதவிகிதமாகவும் வளரலாம் எனச் சொல்லி இருக்கிறார்கள். கடந்த 2018-ம் ஆண்டில் பாகிஸ்தானின் பணவீக்கம் 3.9 சதவிகிதமாக இருந்தது, இப்போது 2019-ல் 7.3 சதவிகிதத்தைத் தொட்டிருக்கிறது. வரும் 2020-ம் ஆண்டில் பாகிஸ்தானின் பணவீக்கம் 13 சதவிகிதத்தைத் தொடலாம் எனக் கணித்திருக்கிறது ஐ எம் எஃப்.

அவசியம்

அவசியம்

இத்தனை இக்கட்டான சூழலில் பாகிஸ்தான், தன்னை FATF அமைப்பின் க்ரே லிஸ்டில் இருந்து விடுவித்துக் கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது. அப்போது தானே அவர்களால் பொருளாதாரத்தை வளர்ச்சிக்கு கொண்டு போக முடியும்..? இன்னும் சில நாட்கள் தான், FATF அமைப்பு என்ன முடிவு எடுக்கும் என்பதையும் பார்த்துவிடலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Pakistan is still in FATFs Grey list final decision on Feb 21

Today FATF sub group International Co-operation Review Group (ICRG) recommended to keep pakistan in the grey list for its failure to check terror funding.
Story first published: Tuesday, February 18, 2020, 21:35 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X