வீட்டு வாடகைக்கு பதிலாக அது... பரவும் புது கலாச்சாரம்..!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

”அழகான பெண்கள் வாடகை தராமல் வீட்டில் குடியேறலாம். ஆனால் டேர்ம்ஸ் & கண்டிஷன்ஸ் அப்ளை”. “குறும்புக்காரப் பெண்கள் என்னோடு வாடகை தராமல் அறையைப் பகிரலாம். நீங்கள் செய்யும் சேவைக்கு தகுந்தாற் போல வாடகை வசூலிக்கப்படும்”. “தனியாகத் தங்கும் பெண்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும், மிக மிகக் குறைந்த வாடகை”. இளம் வயதுப் பெண்கள், குறிப்பாக அழகானவர்களுக்கு இங்கு வீடு கிடைக்கும், வாடகையை உணவு சமைப்பது, வீட்டை சுத்தம் செய்வது, என்னோடு செக்ஸ் வைத்துக் கொள்வது போன்ற சேவைகள் மூலம் வசூலித்துக் கொள்வேன்”. இது ஏதோ சினிமாவில் வில்லன்கள் சொல்லும் வசனங்கள் இல்லை. இந்த வார்த்தைகளை உதிர்த்தவர்கள் ஏதோ கோடீஸ்வரர்களோ, பெரிய அதிகார வர்கத்தினர்களோ அல்ல. சாதாரண மக்கள்.

செக்ஸுக்கு பதிலாக வீடா?
 

செக்ஸுக்கு பதிலாக வீடா?

"அழகான பெண்கள் வாடகை தராமல் வீட்டில் குடியேறலாம். ஆனால் டேர்ம்ஸ் & கண்டிஷன்ஸ் அப்ளை". "குறும்புக்காரப் பெண்கள் என்னோடு வாடகை தராமல் அறையைப் பகிரலாம். நீங்கள் செய்யும் சேவைக்கு தகுந்தாற் போல வாடகை வசூலிக்கப்படும்". "தனியாகத் தங்கும் பெண்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும், மிக மிகக் குறைந்த வாடகை". இளம் வயதுப் பெண்கள், குறிப்பாக அழகானவர்களுக்கு இங்கு வீடு கிடைக்கும், வாடகையை உணவு சமைப்பது, வீட்டை சுத்தம் செய்வது, என்னோடு செக்ஸ் வைத்துக் கொள்வது போன்ற சேவைகள் மூலம் வசூலித்துக் கொள்வேன்". இது ஏதோ சினிமாவில் வில்லன்கள் சொல்லும் வசனங்கள் இல்லை. இந்த வார்த்தைகளை உதிர்த்தவர்கள் ஏதோ கோடீஸ்வரர்களோ, பெரிய அதிகார வர்கத்தினர்களோ அல்ல. சாதாரண மக்கள்.

இப்படி நடப்பது இங்கிலாந்தில்

இப்படி நடப்பது இங்கிலாந்தில்

இப்படிப் பெண்களிடம் நேரடியாக உடலுறவுக்குக் கேட்கும் கலாச்சாரம் இங்கிலாந்தின் மேற்குப் பகுதிகளில் வளர்ந்து வருகிறது. இதை நேரடியாக ஆதாரத் தோடு நிரூபித்திருக்கிறது பிபிசி. ரேச்சல் ஸ்டோன் எனும் பெண் நிரூபர், வீடு வாடகைக்கு கேட்கும் பெண் போல வேட மிட்டு, இங்கிலாந்தில் உள்ள பல வீட்டு ஓனர்களையும் சந்தித்து இந்த செய்தியை உறுதிப்படுத்தி வெளியிட்டிருக்கிறார்.

அழகை கன்ஃபார்ம் பண்ணனும்

அழகை கன்ஃபார்ம் பண்ணனும்

அவர் வீட்டு ஓனர்களைச் செல்போனிலோ, மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொள்ளும் போது, பெரும்பாலான வீட்டு ஓனர்கள், பெண்களின் புகைப்படத்தை அனுப்பச் சொல்கிறார்கள். அந்த புகைப்படத்தைப் பார்த்து அழகான பெண்ணாக, தங்களுக்குப் பிடித்த பெண்னாக இருந்தால் தான் வீட்டை வாடகைக்கு விடுவது பற்றி ஆலோசிக்கிறார்கள். இளம் பெண், அழகான பெண் என்று இரண்டு கட்டங்களைத் தாண்டிய உடனேயே தன் தேவைகளை நேரடியாக முன் வைக்கிறார்கள் வீட்டு ஓனர்கள்.

வாரம் இருமுறை செக்ஸ்
 

வாரம் இருமுறை செக்ஸ்

"எனக்கு வாரம் இரண்டு முறை நான் சொல்லும் நேரத்தில் என்னோடு உடல் உறவு கொண்டல் போதும் அவ்வளவு தான், நீ எனக்கு வாடகையே தர வேண்டாம். நான் உனக்கு தேவையான உணவு, உன் அலுவலகத்துக்கு உன்னை டிராப் செய்வது போன்ற உதவிகளை எல்லாம் கூட செய்கிறேன்" என்கிறார் ஒரு நடுத்தர வயது வீட்டு ஓனர்.

என் செக்ஸ் என் உரிமை

என் செக்ஸ் என் உரிமை

இன்னோருவரோ "எனக்கு செக்ஸ் டிரைவ் மிக அதிகம். நீ பல செக்ஸூவல் அட்வெஞ்சர்களை என்னோடு அனுபவிக்கலாம். எனக்கு எப்போது வேண்டுமானாலும் உடலுறவு கொள்ளத் தோன்றும், எனவே நீ உன்னையே எனக்கு கொடுத்துவிட வேண்டும். சில நேரங்கள் வெறும் ஓரல் செக்ஸ் தான், சில நேரங்களில் ஆன்லைன் செக்ஸ், சில நேரங்களில் வெறும் ஃபோர் ப்ளே தான் செய்வேன். நீ அனைத்துக்கும் தயாராக இருக்க வேண்டும்" என்கிறார்.

பல வருஷம் இப்படித் தான்

பல வருஷம் இப்படித் தான்

அதோடு கடந்த சில வருடங்களை சில பெண்களோடு அவர் இப்படிக் கழித்திருப்பதாகவும் சொல்கிறார். சிம்பிளாக எனக்கு செக்ஸ் சேவகம் செய்யும் அடிமையாகி விடு என்கிறார். கடைசி வரியாக "கேட்க மறந்துவிட்டேன், உனக்கு இருக்கும் செக்ஸுவல் அனுபவம் மற்றும் எல்லைகளைக் குறித்துச் சொல்" என்று வெறுப்பேற்றி இருக்கிறார்.

செக்ஸ் சாட்

செக்ஸ் சாட்

இந்த அறிமுகப் படலம் முடிந்த பின், நேரில் சென்று சந்திக்க வேண்டி இருக்கிறது. ஒரு 60 வயது மதிக்கத் தக்க வீட்டு ஓனரைச் சந்திக்கலாமா என்று ஒரு குறுஞ்செய்திக்கு. ஆம் என்கிற வார்த்தைகளோடு, அனைத்து சில்மிஷங்களையும் செய்கிறார்கள். உனக்கு பான் மூவீஸ் பிடிக்குமா, என்னோடு ஒரு டேட் வருகிறாயா? எனக்குத் தனியாகச் சாப்பிட்டு போர் அடிக்கிறது. நான் உன்னோடு விளையாடுகிறேன் என்று இன்னும் எழுத முடியாத வர்த்தைகளை எல்லாம் அந்த குறுஞ்செய்திகளிளேயே அனுப்பி வாடகைக்குத் தேடும் பெண்களை ஒரு விலை மாது ரேஞ்சுக்கு நடத்துகிறார்கள்.

சில்மிஷங்களில் தான் தொடக்கமே

சில்மிஷங்களில் தான் தொடக்கமே

நேரில் சந்திக்கும் போது முதல் பாலிலேயே எல்லை மீறல் தான். கண்ட இடங்களில் தொடுவது, நேரடியாக ப்ரெஞ்ச் கிஸ் கொடுப்பது என்று பெண்களை முழுமையாக சூரையாடுகிறார்கள். விஷயத்துக்கு வருவோம் என்று பேச்சைத் தொடங்கும் பெண்ணோடு தான் பேச வெட்கப்படுவதாக நெளிகிறார் அந்த 60 வயது தாத்தா. "எனக்கு உங்களோடு உறவு கொள்ள விருப்பம் இல்லை என்றால் என்ன செய்வது" என்று பெண் கேட்க, ஒரு ரெண்டு வாரம் ஆர போடு பாத்துக்கலாம் என்று அசால்டாக டீல் செய்கிறார் தாத்தா.

எனக்கு பிடிக்கலன்னா?

எனக்கு பிடிக்கலன்னா?

அதற்குப் பிறகும் எனக்கு விருப்பம் இல்லை என்றால்...? அட நாம மனசத் தொறந்து பேசுனாத் தான ஏதாவது நடக்குமென்கிறார். ஆக எப்படியோ நீங்கள் என்னோடு உறவு கொண்டே தீருவீர்களா என்று பெண் கேட்க... ஆம், என்று அசால்ட்டாக சிரிக்கிறார் அந்த 60 வயதுக் காரர்.

இவள் ஒரு சாட்சி

இவள் ஒரு சாட்சி

இதே ரீதியில் நேரடியாக பாதிக்கப்பட்ட பெயர் வெளியிட விரும்பாத 22 வயதுப் பெண் இந்த பிரச்னை குறித்து பேசுகிறார். இனி பாதிக்கப்பட்ட பெண்ணின் மொழியில் இருந்து

"எனக்கு 19 வயது இருக்கும் போது என் குடும்பம் உடைந்து பலரும் பல திசைகளில் பயணிக்கத் தொடங்கிவிட்டோம். அப்போது எனக்கு ஆதரவாக இருந்தது என் நண்பர்கள் தான். சில கட்ட பிரச்னைகளுக்குப் பின், வாரம் இருமுறை உடலுறவு வைத்துக் கொள்ள சம்மதித்து ஒரு இடத்தில் வசித்து வருகிறேன். அவர்கள் எனக்கு பல விதமான போதை மருந்துகளைக் கொடுப்பார்கள், கண்ட கண்ட இடங்களுக்கு அழைத்துச் செல்வார்கள். வீட்டு ஓனர் என்னோடு உடலுறவு கொள்வது போக அவரின் நண்பர்கள் கொடுக்கும் செக்ஸ் டார்ச்சர் பிரச்னை வேறு விதமானது.

இப்படியே ஒரு வெறுப்பான வாழ்கையைத் தான் நான் கடந்த சில ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறேன். இதை நினைக்கும் போதெல்லம் எனக்கு வெட்கமாக, இருக்கிறது. என்னை தினமும் இந்த விஷயங்கள் உடல் அளவிலும், மன அளவிலும் பாதிக்கின்றன.

இளம் பெண்களே இலக்கு

இளம் பெண்களே இலக்கு

இந்த பிரச்னையில் சிக்குபவர்களில் பெரும்பாலானவர்கள் என்னை போன்ற இளம் பெண்கள் தான். சரியான வேலை எதுவும் இல்லாதவர்கள், அதிகம் உழைத்தும் நல்ல சம்பளம் கிடைக்காத இளம் பெண்கள், அதிகம் படிக்காதவர்கள் தான் இவர்களின் டார்கெட்" என்று குரல் உடைந்து தன் பதிவை முடிக்கிறார்.

கண்ணீர்ச் சொல்

கண்ணீர்ச் சொல்

ஒரு துளி கண்ணீர் அவர் வலியின் சாட்சியாக வெளியேறுகிறது. இன்னும் இந்த பாலாய் போன உயிரைப் பராமரிக்க எதையெல்லா இழக்க வேண்டும் என வெறுமையான வார்த்தைகளை அவர் உதிர்க்கவில்லை. அவர் கைவிரலின் கருப்புக் கலர் நெயில் பாலிஷ் பலிச் எனச் சொன்னது.

சட்டமே ஏதாவது செய்வாயா

சட்டமே ஏதாவது செய்வாயா

"Offering accomodation in return for sex is illegal and those who do so can face up to seven years in prison" என்கிற இங்கிலாந்து நாட்டுச் சட்டம், பத்திரமாகப் புத்தகங்களில் இருக்கிறது. நடவடிக்கை எடுக்குமா இங்கிலாந்து அரசு. பெண்களைக் காப்போம். #Letssavegirls

பிபிசியின் இந்த வீடியோவை முழுமையாகக் காண:

பிபிசியின் இந்த வீடியோவை முழுமையாகக் காண:

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: rent house pleasure
English summary

physical pleasure for rent free house

IN west side of England, sex for rent free home culture is arising in alarming way. BBC revealed it with enough proof.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more