ட்ரம்பின் விசா நிறுத்த முடிவு அமெரிக்க கம்பெனிகளையே பாதிக்குமாம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமீபத்தில் தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஹெச் 1 பி உட்பட, பல்வேறு வேலை சார்ந்த விசாக்களை வழங்க, இந்த ஆண்டு இறுதி வரை தடையை நீட்டித்து இருக்கிறார்.

 

இந்த விசா தடையால், அமெரிக்க கபெனிகள் அதிகம் அடி வாங்கும் என செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

எப்படி அடி வாங்கும். எந்த மாதிரியான கம்பெனிகள் பிரச்சனையைச் சந்திக்கும்? வாருங்கள் ஒவ்வொன்றாக விரிவாகப் பார்ப்போம்.

ஐடி துறை தான்

ஐடி துறை தான்

உலகின் ஐடி ஹப் போல செயல்பட்டுக் கொண்டிருக்கும் அமெரிக்காவில், ஐடி கம்பெனிகள் தான் இந்த வேலை சார்ந்த விசாக்களை அதிகம் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். எனவே ஐடி மற்றும் ஐடி சார்ந்த அமெரிக்க கம்பெனிகள் தான் அதிகம் அடி வாங்கும் எனச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

எந்த கம்பெனிகள்

எந்த கம்பெனிகள்

உலகின் மிகப் பெரிய கம்பெனிகளாக கருதப்படும், கூகுள், அமேசான், ஆப்பிள், ஃபேஸ்புக், ஐபிஎம் போன்ற கம்பெனிகள் அதிகம் வேலை சார் விசாக்களை, கடந்த 2019-ம் ஆண்டு பயன்படுத்தி இருப்பதாக அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை அமைப்பே சொல்லி இருக்கிறது. எனவே இந்த டாப் கம்பெனிகள் தான் ட்ரம்பின் விசா ரத்தால் அதிகம் பாதிக்கப்பட இருக்கிறார்கள்.

எப்படி பாதிக்கும்
 

எப்படி பாதிக்கும்

ட்ரம்பின் இந்த விசா ரத்து முடிவு, அமெரிக்க பொருளாதாரத்தை பாதிக்கும். அதோடு பல்வேறு வேலை வாய்ப்புகளையும் இது அழிக்கும் என்கிறார் குடியேற்ற ஆராய்ச்சி இயக்குநர் அலெக்ஸ் நவ்ரஸ்டக் (Alex Nowrasteh). அமெரிக்கா, மேற்கொண்டு வரும் அறிவியல் ஆராய்ச்சிகள் எல்லாம் கூட குறையும் எனச் சொல்கிறார் அலெக்ஸ்.

கம்பெனிகள் யோசிக்கும்

கம்பெனிகள் யோசிக்கும்

இதை எல்லாம் விட, இனி கம்பெனிகள், அமெரிக்காவில் தங்கள் அலுவலகம் அல்லது ஆலைகளை கட்ட மிகவும் யோசிப்பார்கள் என்கிறார் அலெக்ஸ். கடந்த 2017-ம் ஆண்டு, அமெரிக்க காங்கிரஸ், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வரிச் சலுகைகளை எல்லாம் கொடுத்து கம்பெனிகளை ஈர்க்க முயற்சித்தது. இப்போது கம்பெனிகள் விருப்பப்பட்ட படி, அவர்களுக்கு தேவையான ஆட்களை எடுக்க முடியாது என்றால் கம்பெனிகள் வரமாட்டார்கள் தானே என்கிறார் அலெக்ஸ்.

மென்பொருள் துறை

மென்பொருள் துறை

அமெரிக்க பொருளாதாரம் மீண்டும் பழைய நிலைக்கு வர, வெளிநாடுகளில் இருந்து வரும் திறமையானவர்கள் தேவை என்கிறது பி எஸ் ஏ என்கிற மென்பொருள் அலையன்ஸ் அமைப்பு. அமெரிக்க மென்பொருள் துறையை நம்பி சுமார் 1.44 கோடி பேர் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 1.6 ட்ரில்லியன் டாலர் ஜிடிபி மென்பொருளில் இருந்து தான் வந்து கொண்டிருக்கிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

POTUS H-1B suspension may hurt US companies

The President of the united states had suspended many work related visa including H1B. This Move may hurt the US companies.
Story first published: Friday, June 26, 2020, 12:43 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X