கத்தாருக்கு போயிடலாமா.. அந்த விஷயத்துக்கு இனி அனுமதி பெற வேண்டாமாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தோஹா: கடந்த 2018-ம் ஆண்டு ரஷ்யாவில் நடந்து முடிந்தது கால்பந்து உலகக் கோப்பை. அடுத்த 2022-ல் கத்தார் நாட்டில் நடக்க இருக்கிறது.

 

இந்த செய்தியை நாம் அறிவோம். ஆனால் இந்த கால்பந்து போட்டிக்காக, கத்தார் அரசு பல மாற்றங்களைக் கொண்டு வந்து கொண்டிருப்பது தெரியுமா..?

அதில் ஒரு முக்கிய மாற்றத்தைத் தான் சமீபத்தில் அறிவித்து இருக்கிறது கத்தார் அரசு.

பக்கத்து வீட்டுக்காரருக்கு பலமா அடி விழுந்திருக்கே..! ஓ மை காட்..!

கத்தார் வழக்கம்

கத்தார் வழக்கம்

வெளிநாட்டவர்கள் அதிகம் வேலை பார்க்கும் மத்தியக் கிழக்கு நாடுகளில் கத்தாரும் ஒன்று. சுமாராக 2 கோடி வெளிநாட்டவர்கள், கத்தார் நாட்டில் வேலை பார்த்து வருகிறார்கள். இந்த பணியாளர்கள், நாட்டை விட்டுச் செல்லும் போதும், நாட்டுக்குள் வரும் போதும், தாங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தில் அனுமதி பெற வேண்டும். இந்த முறையை கஃபாலா (Kafala) என்கிறார்கள்.

வெளியே செல்ல விசா

வெளியே செல்ல விசா

அதோடு கத்தார் நாட்டில் இருந்து வெளியே செல்லும் வெளிநாட்டு பணியாளர்களுக்கு விசா எடுக்க வேண்டி இருந்தது. இந்த கடுமையான தொழிலாளர் சட்ட திட்டங்களை எல்லாம் மாற்றுவோம் என கத்தார் அரசாங்கம் கடந்த ஆண்டில் சொல்லி இருந்தார்கள். அவர்கள் சொன்னதைச் செய்யத் தொடங்கி இருக்கிறார்கள்.

வெளியே செல்லும் விசா ரத்து
 

வெளியே செல்லும் விசா ரத்து

வெளிநாட்டில் இருந்து, கத்தார் நாட்டுக்கு வந்து வேலை பார்ப்பவர்கள் (சிவில் சர்வெண்ட்கள், எண்ணெய் மற்றும் கேஸ் துறையில் பணியாற்றுபவர்கள், கத்தார் அரசாங்கத்தில் வேலை பார்ப்பவர்கள் மற்றும் கத்தார் ஏர்வேஸில் பணியாற்றுபவர்கள் உட்பட) இனி கத்தார் நாட்டை விட்டு வெளியே செல்லும் போது விசா எடுக்க வேண்டாமாம்.

அனுமதி வேண்டாம்

அனுமதி வேண்டாம்

அதோடு கடந்த வியாழக்கிழமை (ஜனவரி 16, 2020) இன்னொரு அதிரடி மாற்றத்தையும் கொண்டு வந்து இருக்கிறது கத்தார் அரசு. இனி கத்தாரில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள், தாங்கள் வேலை பார்க்கும் நிறுவனங்களின் அனுமதி இல்லாமலேயே நாட்டுக்குள் வரவோ அல்லது வெளியே செல்லவோ முடியுமாம்.

உறுதி

உறுதி

இந்த செய்தியை கத்தார் அரசின் தொழிலாளர் அமைச்சகத்தின் செயலர் முகம்மது அல் ஒபைத்லி (Mohamed al-Obaidly) AFP பத்திரிக்கையிடம் சொல்லி இருக்கிறார். இது போல தொழிலாளர்கள் தொடர்பான பல மாற்றங்களை மேற்கொண்டு கொண்டு வர இருக்கிறார்களாம்.

72 மணி நேரம்

72 மணி நேரம்

இந்த புதிய விதிப்படி, கத்தார் நாட்டில் வேலை பார்க்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள், கத்தார் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு 72 மணி நேரத்துக்கு முன்பு, தான் வேலை பார்க்கும் நிறுவனத்திடம், தான் வெளியேற இருப்பதை தெரியப்படுத்தினால் போதுமாம். எனவே இனி கத்தார் நாட்டுக்குள் செல்வதற்கும், வெளியேறுவதற்கும் கெடுபிடிகள் இருக்காது.

இவர்களுக்கு பொருந்தாது

இவர்களுக்கு பொருந்தாது

ஒரு நிறுவனத்தின் டாப் 5 சதவிகித ஊழியர்களுக்கும் மட்டும் இந்த விதிகள் பொருந்தாதாம். எனவே ஒரு நிறுவனத்தின் முக்கிய பதவிகளில் இருப்பவர்கள், தாங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தின் அனுமதி பெற்ற பின் தான் கத்தார் நாட்டை விட்டு வெளியேற முடியுமாம்.

கொண்டாட்டம்

கொண்டாட்டம்

அதோடு, கத்தாரில் குறைந்தபட்ச கூலியை 200 அமெரிக்க டாலராக விரைவில் நிர்ணயிக்க இருக்கிறார்களாம். இந்த புதிய விதிமுறையை, கத்தாரில் வேலை பார்க்கும் பல நாட்டு தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் வரவேற்றுக் கொண்டு இருக்கிறார்களாம். பேசாம பொட்டி படுக்கையோடு கத்தாருக்கு போயிடுவோமா..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Qatar scrap down the exit permit for labors

The Qatar government scrap down the exit permit and exit visa method for labors.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X