உலக புகழ் பெற்ற Rolls-Royce-க்கே இந்த நிலையா? வரலாறு காணாத வீழ்ச்சியில் கம்பெனி!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Rolls-royce இந்த பெயரைக் கேட்டாலே தேகம் எல்லா சில்லிடம். இந்த கம்பெனி தயாரிக்கும் இன்ஜின்களுக்கு உலகமே அடிமை எனலாம். அந்த அளவுக்கு இவர்களின் தரம் பேசும்.

 

ரோல்ஸ் ராய்ஸ் (Rolls-royce) என்று சொன்ன உடனேயே பலருக்கு இந்த பிராண்டின் பிரம்மாண்ட சொகுசு கார்கள் ஒவ்வொன்றாக நினைவுக்கு வரலாம்.

ஆனால் இப்போது, ரோல்ஸ் ராய்ஸ் (Rolls-royce) கம்பெனியியே ரோல்ஸ் ராய்ஸ் கார்களைத் தயாரிப்பது இல்லை. பல வருடங்களுக்கு முன்பே உலகின் முன்னணி சொகுசு கார் கம்பெனியான பி எம் டபிள்யூ (BMW), ரோல் ராய்ஸ் மோட்டார் கார்களை வாங்கிவிட்டது.

பல லட்சம் கோடி முறைகோடாக பரிமாற்றம்.. லிஸ்டில் பல இந்திய வங்கிகள்.. அதிர வைக்கும் பின்னணி..!

இப்போதைய ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) வியாபாரம்

இப்போதைய ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) வியாபாரம்

இப்போது ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) கம்பெனி சிவில் ஏரோஸ்பேஸ், பாதுகாப்புத் துறை, மின்சார ரயில்கள் போன்ற துறைகளில் வியாபாரம் செய்து கொண்டு இருக்கிறது. இப்போதும் இன்ஜின்களில், இவர்கள் முன்னணியில் தான் இருக்கிறார்கள். சரி புகழ் பாடியது போதும். விஷயத்துக்கு வருவோம். தற்போது ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) கம்பெனியின் பங்கு விலை சுமாராக 157 பவுண்ட் ஸ்டெர்லிங்கைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

வரலாறு காணாத சரிவு

வரலாறு காணாத சரிவு

கடந்த 03 ஆகஸ்ட் 2018 அன்று 1,094 பவுண்ட் ஸ்டெர்லிங்குக்கு வர்த்தகமான ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) பங்கு விலை இன்று வெறும் 157 பவுண்ட் ஸ்டெர்லிங்கைத் தொட்டு வர்த்தகமாகிறது என்றால் கம்பெனியின் நிலை என்ன ஆகி இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

2004-ம் ஆண்டு விலை
 

2004-ம் ஆண்டு விலை

கடந்த இரண்டு வருடங்களில் ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) கம்பெனி பங்கின் விலை சுமாராக 85 சதவிகிதம் சரிந்து இருக்கிறது. இந்த விலை சரிவு, கிட்டத்தட்ட 2004-ம் ஆண்டு காலத்தில், ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) பங்குகள் வர்த்தகமான விலைக்குச் சென்று இருக்கிறது.

எவ்வளவு பெரிய சரிவு

எவ்வளவு பெரிய சரிவு

மோசமான நிதி நிலை காரணமாக இந்த சரிவு ஏற்பட்டு இருக்கிறதாம். அதோடு 2.5 பில்லியன் பவுண்ட் ஸ்டெர்லிங்க் பணத்தை உரிமைப் பங்குகள் (Rights Issue) வழியாக திரட்ட இருப்பதாக கம்பெனி தரப்பில் இருந்தே சொல்லி இருக்கிறார்கள். இதுவும் பங்கு விலை சரிவுக்கு மிக முக்கிய காரணமாகச் சொல்கிறது ராய்டர்ஸ்.

கொரோனாவால் செம அடி

கொரோனாவால் செம அடி

கொரோனா வைரஸ் பிரச்சனை வந்த பின், விமானங்கள் செயல்பாடு கணிசமாக குறைந்துவிட்டது. விமானங்களில் இருக்கும் இன்ஜின்கள், எத்தனை மணி நேரம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறதோ அந்த அளவுக்கு தான் ரோல்ஸ் ராய்ஸ் (Rolls royce) கம்பெனிக்கு வருமானம் கிடைக்குமாம். விமானங்களின் செயல்பாடு படு மோசமாக பாதித்து இருப்பதால் ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) கம்பெனிக்கு வர வேண்டிய வருமானமும் கணிசமாக அடி வாங்கி இருக்கிறதாம்.

5.4 பில்லியன் பவுண்ட் ஸ்டெர்லிங்

5.4 பில்லியன் பவுண்ட் ஸ்டெர்லிங்

2020-ம் ஆண்டின் முதல் அரையாண்டில், ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) கம்பெனி வரலாறு காணாத அளவுக்கு 5.4 பில்லியன் பவுண்ட் ஸ்டெர்லிங் நஷ்டம் கண்டு இருப்பதாகச் சொல்கிறது டெக்கன் ஹெரால்ட் பத்திரிகை செய்திகள். இந்த செய்திகளும் ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) கம்பெனியின் பங்கு விலை சரியக் காரணமாக இருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rolls-Royce shares hit 2004 low 2020 1st half shown a record loss of £5.4 Bn

The mighty Rolls-Royce company shares hit 2004 low and trading at £157 per share. In 2020 1st half Rolls-Royce company shown a record loss of £5.4 Bn.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X