பிகினி உடையில் வந்தால் இலவசம்!..! நல்லா பண்றாங்கய்யா பிசினஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஷ்யாவைச் சேர்ந்த பெட்ரோல் பங்கில் பிகினி உடையில் வருவபவர்களுக்கு இலவச எரிபொருள் என்று ஒரு பெட்ரோல் பங்கு அறிவித்துள்ளது.

 

பொதுவாக ஆஃபர், தள்ளுபடி என்றால் அதிகளவில் பெண்கள் தான் குவிவார்கள். ஆனால் இங்கு கதையே வேறு.

நம்மூரில் எல்லாம் ஆடித் தள்ளுபடி என்றால் 50% தள்ளுபடி கொடுப்பார்கள். இல்லையெனில் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம், ஒன்று வாங்கினால் இரண்டு இலவசம். ஆனால் இப்படி ஒரு தாறுமாறான அறிவிப்பை நீங்கள் பார்த்திருக்க முடியாது. ஏன் உங்கள் வாழ் நாளில் கேள்விப்பட்டிருக்கவும் முடியாது.

பிகினி உடையில் வருபவர்களுக்கு இலவச பெட்ரோல்

பிகினி உடையில் வருபவர்களுக்கு இலவச பெட்ரோல்

இந்த கொடுமை ரஷ்யாவில் உள்ள பெட்ரோல் பங்கில் தான் நடந்துள்ளது. பிகினி அணிந்த வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல் இலவசம் என்றும் அறிவிக்கப்பட்டது. இங்கு பெண்கள் அதிகளவில் பிகினி உடையில் வருவார்கள். அவர்களை பார்க்க ஆண்கள் அதிகளவில் வருவார்கள். இதனால் பெட்ரோல் டீசல் அதிகளவில் விற்பனையாகும். இதனால் அவர்களின் பெட்ரோல் பங்கும் பிரபலமாகும் என்ற தப்புக் கணக்கை போட்டு விட்டது அந்த பங்க் நிறுவனம்,.

ஆண்கள் அதிகம் முற்றுகை

ஆண்கள் அதிகம் முற்றுகை

ஆனால் பங்க் உரிமையாளர்கள் எதிர்பார்தது ஒன்று, நடந்தது ஒன்று. ஏன் என்று கேட்கிறீர்களா? நம்மூரில் சலுகை என்றால் அதிகளவில் பெண்கள் தான் அதிகம் செல்வார்கள். அப்படித்தான் அந்த பங்க் உரிமையாளர்களும் நினைத்திருக்கிறார்கள். ஆனால் இப்படி ஒரு அறிவிப்பால், பெண்களை விட அதிகளவில் ஆண்கள் எல்லாம் பிகினி உடையில் வந்தததால், பங்க் உரிமையாளர்கள் என்ன செய்வதென்று தவித்து வருகிறார்களாம்.

பெரும் பரபரப்பு
 

பெரும் பரபரப்பு

பல சுவாரஷயமான சம்பவங்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த உலகை சுற்றிலும் எத்தனையோ சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்து கொண்டுதான் உள்ளது. அவற்றில் சில மக்களின் கவனத்தை ஈர்த்து வைரளாகி வருகிறது. இந்நிலையில், பிகினி போட்டு வருபவர்களுக்கு பெட்ரோல் இலவசம் என ரஷ்யாவில் பெட்ரோல் பங்க் கூறியிருக்கும் அறிவிப்பானது பெரும் பரபரப்புக்கு உள்ளாகி வருகிறது. ஆண்கள் அனைவரும் கண்கவர் பிகினி உடைகளில் வருவதும் ஒரு டிரெண்டாகி வருகிறது.

வித்தியாசமான சலுகை

வித்தியாசமான சலுகை

ரஷ்யா நாட்டின் சமாரா பகுதியில் உள்ள ஓல்வி என்ற கேஸ் ஸ்டேஷன் நிறுவனம், தங்கள் நிறுவனத்தின் விளம்பரத்திற்காக ஒரு வித்தியாசமாக அறிவிப்பை கொடுத்தது. அதன்படி பிகினியில் வந்து பெட்ரோல் நிரப்புபவர்களுக்கு பெட்ரோல் இலவசம் என்ற அறிவிப்பை வெளியிட்டது. இந்த நிலையில் அதிகளவில் ஆண்கள் வந்து பங்க் உரிமையாளர்கள் எண்ணத்தில் மண்ணை போடுவார்கள் என்றும் நினைத்திருக்க மாட்டர்கள்.

வித்தியாசமான  மார்கெட்டிங்

வித்தியாசமான மார்கெட்டிங்

பொதுவாக அண்டைய நாடுகளில் இதுபோன்ற வித்தியாசமான அறிவிப்புகள் சகஜம் தான் என்றாலும், வியாபாரத்த பெருக்க மக்கள் எப்படி எல்லாம் யோசிக்கிறார்கள். தங்களது பிராண்டை டெவலப் செய்ய இப்படி கூடவா மார்கெட்டிங் செய்வார்கள். எனினும் ஒரு வகையில் இதுவும் வித்தியாசமான வெற்றிகரமான மார்கெட்டிங் தான். ஒத்த அறிவிப்பால், காசே இல்லாமல் உலகம் பூரவும் பிரபலமாகி விட்டார்கள் அல்லவா.

உங்க மைன்ட் வாய்ஸ் இங்கயும் கேட்குது பாஸ்.. என்ன நம்ம ஊர்லயும் இப்படி ஒரு சலுகை வருமான்னு தான்னா...

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: russia petrol
English summary

Russia petrol pump give free petrol for whom wearing bikinis

Russia petrol pump give free petrol for whom wearing bikinis. That petrol Bunk expected more girls, but so many males are came there with bikini and picked free petrol.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X