ஐரோப்பிய நாடுகளுக்கு பேரிடி.. விளாடிமிர் புடினின் பலே பதிலடி.. துணிச்சல் தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உக்ரைன் - ரஷ்யா இடையேயான பிரச்சனைகளுக்கு மத்தியில் பல்வேறு நாடுகளும், ரஷ்யாவினை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்த பல்வேறு தடைகளை விதித்து வருகின்றன.

 

குறிப்பாக ரஷ்யாவின் முக்கிய வணிகமாக இருந்து வரும் கச்சா எண்ணெய் வணிகம் மற்றும் இயற்கை எரிவாயு வணிகத்திலேயே கைவைத்துள்ளன.

3 மாதத்தில் 11.5 பில்லியன் டாலர் கடன்.. இந்தியாவின் மொத்த கடன் எவ்வளவு தெரியுமா..?!

இந்த வணிகங்களை முடக்கினால் ரஷ்யா பொருளாதார ரீதியாக பின்னடைவை சந்திக்கும். இதனால் பொருளாதாரத்தில் பெரும் சரிவினை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் திட்டமிட்டு அமெரிக்கா ரஷ்யாவின் எண்ணெய் வணிகத்தினை தடை செய்தது.

அமெரிக்காவின் திட்டம்

அமெரிக்காவின் திட்டம்

எனினும் ரஷ்யாவின் மொத்த சப்ளையில் அமெரிக்காவிற்கு அனுப்புவது மிக குறைந்த அளவு தான். இதன் காரணமாக அமெரிக்கா மற்ற நாடுகளையும் ரஷ்யாவுக்கு எதிராக திரட்டி வருகின்றது. ஐரோப்பிய நாடுகளையும் அமெரிக்கா ஒத்துழைப்பு கொடுக்க அழுத்தம் கொடுத்து வருகின்றது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இன்றும் பெரியளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இறக்குமதியில், ரஷ்யாவினையே பெரிதும் சார்ந்துள்ளது.

படிப்படியாக குறைப்போம்

படிப்படியாக குறைப்போம்

குறிப்பாக இயற்கை எரிவாயு தேவையில் 40%மும், கச்சா எண்ணெய் தேவையில் 30%மும் ரஷ்யாவினையே பெரிதும் நம்பியுள்ளன. ஆக ரஷ்யாவில் இருந்து தடை செய்தால் , இதனால் ஐரோப்பிய நாடுகளே பெரும் தாக்கத்தினை எதிர்கொள்ளலாம் என்ற கருத்தும் நிலவி வருகின்றது. இதற்கிடையில் தான் அமெரிக்கா அழுத்தம் கொடுத்தாலும், ஐரோப்பிய ஒன்றியம் படிப்படியாக ரஷ்யாவிடம் இருந்து குறைத்து கொள்வதாக அறிவித்திருந்தன.

 பல்வேறு யுக்திகள்
 

பல்வேறு யுக்திகள்

இதற்கிடையில் தனது துவண்டு போயுள்ள வணிகத்தினை தூக்கி நிறுத்த, பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது ரஷ்யா. குறிப்பாக குறைந்த விலையில் எண்ணெய் வணிகம் என்ற யுக்தியினையும் கையில் எடுத்துள்ளது. இதற்கிடையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ரஷ்யாவிடம் எண்ணெய் மற்றும் கேஸ் வாங்கும் அண்டை நாடுகள் ரூபிளில் கட்டணத்தினை செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ரூபிளில் கட்டணம்

ரூபிளில் கட்டணம்

கடந்த வாரத்தில் ரஷ்யாவுடன் நட்புறவு இல்லாத நாடுகள் எரிபொருள் சப்ளைக்கு, ரஷ்யாவின் ரூபிளையே கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்த மாற்றம் விரைவில் நடைமுறைக்கு வரும் என்றும் கூறியிருந்தார். மேலும் ஏற்கனவே செய்து கொண்டுள்ள ஒப்பந்தங்களிலும் மாற்றம் கொண்டு வரப்படும் என்று கூறியிருந்தார்.

நட்புறவு இல்லாத நாடுகள்

நட்புறவு இல்லாத நாடுகள்

ரஷ்யாவின் நட்பற்ற நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள், பிரிட்டன், ஜப்பான், கன்டா, நார்வே, சிங்கப்பூர், தென் கொரியா, சுவிட்சர்லாந்து மற்றும் உக்ரைன் உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்றுள்ளன. ஆக இந்த நாடுகள் மேற்கோண்டு ரஷ்யாவுக்கு ரூபிளில் கட்டணம் செலுத்தும் நிலைக்கு தள்ளபட்டுள்ளன.

ஐரோப்பிய நாடுகளுக்கு பேரிடி

ஐரோப்பிய நாடுகளுக்கு பேரிடி

உக்ரைன் - ரஷ்யா பிரச்சனைகளுக்கு மத்தியில், ரஷ்யாவினை பொருளாதார ரீதியாக தனிமைபடுத்த அண்டை நாடுகள் திட்டமிட்டு வந்தன. ஆனால் அதற்கெல்லாம் நாங்கள் அசர மாட்டோம் எனும் விதமாக, இனி எரிபொருள் சப்ளைக்கு ரூபிளில் கட்டணம் செலுத்த வேண்டும். இதற்காக ரஷ்ய வங்கிகளில் கணக்கு தொடங்க வேண்டும். அப்படி செலுத்தாவிடில் சப்ளை நிறுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படும் எனவும் புடின் தெரிவித்துள்ளார். இதற்கான ஆணையிலும் புடின் கையெழுத்திட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

புடினின் பலே வியூகம்

புடினின் பலே வியூகம்

தங்களை தனிமைப்படுத்த நினைத்த நாடுகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக புடினின் இந்த அறிவிப்பு, ஐரோப்பிய நாடுகளுக்கு பேரதிர்ச்சியாய் வந்துள்ளது. இதற்கு பல நாடுகளும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள நிலையில், இது மிரட்டல் விடுப்பதற்கு சமம் என ஜெர்மனி கூறியுள்ளது.

 விலை அதிகரிக்கலாம்

விலை அதிகரிக்கலாம்

இதில் இன்னும் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், ரஷ்யாவிடம் எண்ணெய் மற்றும் கேஸ் வாங்குவதை தவிர்த்து, மற்ற நாடுகளை வாங்க விரும்பும் பட்சத்தில் அது மேற்கோண்டு எரிபொருள் விலையை ஊக்குவிக்கும். மொத்தத்தில் அமெரிக்காவின் பேச்சை கேட்டு ஐரோப்பிய நாடுகள் தடை செய்யவும் முடியாமல் தத்தளித்து வரும் நிலையில், ரஷ்யாவின் அதிரடி முடிவால் இனி ஐரோப்பிய நாடுகள் ரூபிளில் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

அதிர்ச்சியில் உலக நாடுகள்

அதிர்ச்சியில் உலக நாடுகள்

இது ஏற்கனவே யூரோ மற்றும் டாலர்களில் உள்ள ஒப்பந்தங்களை மீறுவதாக இருக்கும் என்று ஐரோப்பிய அரசாங்கள் கூறுகின்றன. மொத்தத்தில் ரஷ்யாவுக்கு எதிராக தடைகளை விதித்து வந்த நாடுகள், ரஷ்யாவின் ஒற்றை அறிவிப்பால் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். இந்த பிரச்சனை இன்னும் சர்வதேச அளவில் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

russia - ukraine crisis! Russia alert to stop supplying gas if not paid in rubles

russia - ukraine crisis! Russia alert to stop supplying gas if not paid in roubles/ஐரோப்பிய நாடுகளுக்கு பேரிடி.. விளாடிமிர் புடினின் கொடுத்த பதிலடி.. துணிச்சல் தான்..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X