ரஷ்யாவின் அதிரடி முடிவு.. முதலீட்டாளர்களின் நிலை என்னாவது..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரஷ்யா - உக்ரைன் பதற்றத்தின் மத்தியில் பல்வேறு நாடுகளும் ரஷ்யாவுக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

 

ஆரம்பத்தில் இப்பிரச்சனை எழுந்த நிலையிலேயே பல அத்தியாவசிய பொருட்களின் விலை வரலாற்று உச்சத்தினை எட்டின.

குறிப்பாக கச்சா எண்ணெய் விலை, சமையல் எண்ணெய் விலை, கோதுமை, மக்காச்சோளம் என பலவற்றின் விலையும் உச்சம் தொட்டுள்ளன. இது இன்னும் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.

இலங்கையில் வரலாறு காணாத உச்சத்தினை தொட்ட பெட்ரோல் விலை.. இந்தியாவில் எப்போது?

நெருக்கடி கொடுக்க திட்டம்

நெருக்கடி கொடுக்க திட்டம்

இதற்கிடையில் ரஷ்யாவுக்கு எதிராக பல நாடுகளும் பொருளாதார தடை விதித்து வருகின்றன. இது மட்டும் அல்ல ரஷ்யாவின் மிக முக்கியமான வணிகமாக இருந்து வரும் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கே தடை விதித்து வருகின்றன. அது மட்டும் அல்ல, இன்னும் பல்வேறு பொருட்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. இன்னும் பல்வேரு நெருக்கடிகளையும் கொடுக்க அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் திட்டமிட்டு வருகின்றன.

தற்காலிக தடை

தற்காலிக தடை

இதற்கிடையில் ரஷ்ய பங்கு சந்தையில் பல்வேறு நிறுவனங்களும் பலத்த சரிவினைக் கண்டு வந்தன. ஒரு கட்டத்தில் சரிவினைக் கட்டுக்குள் கொண்டு வர பங்கு சந்தை வர்த்தகமானது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது வரையில் இது மீண்டும் வர்த்தகமாகவில்லை.

ரஷ்ய மத்திய வங்கி
 

ரஷ்ய மத்திய வங்கி

இந்த நிலையில் எப்போது தான் மீண்டும் வர்த்தகம் தொடங்கும் என்று எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. இதற்கிடையில் மார்ச் 14 - 18 காலகட்டத்தில் பங்கு சந்தை திறக்கப்படாது என்றும் அறிவித்துள்ளது. எனினும் சில திறந்த சந்தை அல்லாத பரிவர்த்தனைகள் மற்றும் SPFI கட்டண முறையை பயன்படுத்தும் பரிவர்த்தனைகளை தவிர எனவும் ரஷ்யாவின் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதுவும் நல்லது தான்

இதுவும் நல்லது தான்

மேலும் எப்போது முதல் செயல்படும் என இந்த வாரத்தின் இறுதியில் அறிவிக்கும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது. உண்மையில் ரஷ்ய வங்கியின் இந்த முடிவும் ஒரு வகையில் நல்லது தான். முதலீட்டாளர்களுக்கு ஏற்படும் தொடர் இழப்பு குறையும். அதுவும் தற்போது நிலவி வரும் நெருக்கடி நிலைக்கு மத்தியில், நிச்சயம் பங்கு வர்த்தகம் தொடங்கினாலும், அதுவும் சரிவினையே காணலாம்.ஆக ரஷ்ய மத்திய வங்கியின் இந்த முடிவானது நலல் முடிவே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Russian central bank decides not to reopen stock market trading

Russian central bank decides not to reopen stock market trading/ரஷ்யாவின் அதிரடி முடிவு.. முதலீட்டாளர்களின் நிலை என்னாவது..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X