35 வருடத்திற்குப் பின் முதல் முறையாகத் தியேட்டரை திறந்த சவுதி அரேபியா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சவுதி அரேபியா, பல கட்டுப்பாடுகளுடன் இன்றைய வாழ்வியல் முறையை ஏற்காமல் வாழ்ந்து வரும் நாடு என்றால் மிகையாகாது. ஆனால் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் பொறுப்புகளை ஏற்ற பின்பு அடுத்தத் தலைமுறைக்கான ஒரு நாட்டை உருவாக்க, இன்றைய வாழ்வியல் முறைக்கு அவசியம் இல்லாத கட்டுப்பாடுகளைப் படிப்படியாகத் தகர்த்து வருகிறார்.

35 வருடங்கள்

35 வருடங்கள்

இதன் படி 35 வருடங்களுக்குப் பின் சவுதி தலைநகர் ரியாத்-இல் முறை முறையாக இன்று திரையரங்கில் திரைப்படம் திரையிடப்பட்டது. இதுநாள் வரை மதக் கட்டுப்பாடுகளின் காரணமாகத் திரைப்படங்கள் திரையிடுவதற்குத் தடை இருந்தது.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

இந்நிலையில் இன்றைய வேகமான வாழ்க்கை முறைக்கு அவசியம் இல்லாத கடுப்பாடுகளைத் தவிர்க்கும் விதமாக ரியாத் நகரில் திரைப்படம் திரையிடப்பட்டது.

35 வருடத்திற்குப் பின் திரையிடப்படும் முதல் திரைப்படம் என்பதால் மக்கள் மத்தியிலும் அதிகளவிலான எதிர்பார்ப்பு இருந்தது.

 

தெறிக்கவிட்ட பிளாக் பாந்தர்

தெறிக்கவிட்ட பிளாக் பாந்தர்

உலக நாடுகள் முழுவதும் வெற்றிநடைபோடும் பிளாக் பாந்தர் திரைப்படம் இன்று திரையிடப்பட்டது.

இன்றைய காலை காட்சியில் சவுதி மக்கள் மட்டும் அல்லாமல் வெளிநாட்டவர்கள் பவரும் கலந்துகொண்டனர்.

 

அமைச்சர்

அமைச்சர்

முதல் காட்சியில் சவுதி கலாச்சாரம் மற்றும் தகவல் துறை அமைச்சர் Awwad Alawwad மற்றும் திரைப்படப் பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

 இலக்கு...

இலக்கு...

இதேபோல் சவுதி அரசு 2030ஆம் வருடத்திற்கு அந்நாடு முழுவதும் சுமார் 350 தியேட்டர்களில் சுமார் 2,500 திரைகளை அமைக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இதன் மூலம் தமிழ் மற்றும் உலகச் சினிமா அதிக வருமானத்தைப் பெறும்.

2030

2030

சமுக மற்றும் பொருளாதாரச் சீர்திருத்த திட்டம் விஷன் 2030 கீழ் சவுதி இளவரசர் முகமத் பின் சல்மான் மற்றும் கலாச்சாரம் மற்றும் தகவல் அமைச்சகம் இணைந்து இந்த முடிவை எடுத்து 2018ஆம் ஆண்டில் துவக்கத்தில் நாட்டு மக்களுக்கு அறிவித்தது.

 கார்..

கார்..

அதேபோல் முகமத் பின் சல்மான் பெண்கள் கார்களைத் தனியார் ஓட்டவும் அனுமதி அளித்துப் பெண்கள் மீதான கட்டுப்பாடுகளின் முதல் தடையைத் தகர்த்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Saudi Arabia opens 1st movie theater in 35 years

Saudi Arabia opens 1st movie theater in 35 years
Story first published: Thursday, April 19, 2018, 16:23 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X