எண்ணெய் ஜாம்பவானின் அதிரடி திட்டம்.. இந்தியா என்ன செய்யப்போகிறது..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் எண்ணெய் உற்பத்தியில் இரண்டாவது நாடாக விளங்கும் சவுதி அரேபியா, அதன் உள்நாட்டு எண்ணெய் நுகர்வினை குறைக்க திட்டமிட்டுள்ளது.

 

அதாவது லிக்விட் எரிபொருளுக்கு பதிலாக, கேஸ் மற்றும் புதுபிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை பயன்படுத்த திட்டமிடுவதாகவும் அந்த நாட்டு நிதியமைச்சர் கூறியுள்ளார்.

மேலும் அப்படி செய்தால் சவுதிக்கு, அடுத்த பத்தாண்டுகளில் 200 பில்லியன் டாலர்களை மிச்சப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளது.

சவுதியின் சூப்பர் திட்டம்

சவுதியின் சூப்பர் திட்டம்

இதன் மூலம் செலவுகளை குறைப்பதற்காக சவுதி முயல்வதாகவும் கூறியுள்ளது. மேலும் உலகின் தலைசிறந்த எண்ணெய் ஏற்றுமதியாளர் அதன் பொருளாதாரத்தினை நவீனமயாக்குவதற்கும், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், எண்ணெய் வருவாயை மட்டுமே சார்ந்து இருப்பதை குறைப்பதற்காகவும் இந்த திட்டத்தினை திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே சவுதி இந்த திட்டத்தில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பல ஒப்பந்தங்களில் கையெப்பம்

பல ஒப்பந்தங்களில் கையெப்பம்

சவுதியின் இந்த திட்டம் அடுத்த 10 ஆண்டுகளில் சவுதிக்கு 800 பில்லியன் ரியால்களை (213.34 பில்லியன் டாலர்), அரசாங்கத்திற்கு சேமிக்க உதவும். அரசின் இந்த திட்டம் சேமிப்புக்கும், முதலீட்டிற்கும் பயன்படுத்தலாம் என திட்டமிடுகின்றது. அதுமட்டும் அல்ல, எண்ணெய் பயன்பாட்டினை குறைப்பதற்காக, மின்சார வாங்குதல் தொடர்பான ஒப்பந்தம், ஏழு புதிய சோலார் திட்டங்கள் குறித்தான ஒப்பந்தம், மின்சார உற்பத்தி குறித்தான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.

மிக மோசமாக பாதிப்பு
 

மிக மோசமாக பாதிப்பு

சவுதியின் இந்த பிரம்மாண்ட திட்டமானது, கடந்த ஆண்டு கொரோனா பரவலின் காரணமாக குறைந்த கச்சா எண்ணெய் விலையால், மிக நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டது. சவுதியின் முக்கிய வருவாய் என்பது இந்த எண்ணெய் வர்த்தகமாகும். ஆக எண்ணெய் விலை வீழ்ச்சியினால் சவுதி மிக மோசமாக பாதிக்கப்பட்டது. இதன் பின்னர் தான் சவுதி இந்த திட்டங்களை வேகப்படுத்த தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நிதி நிலை பராமரிப்பு

நிதி நிலை பராமரிப்பு

மேலும் 2025 மற்றும் 2030க்கும் வரையிலான நிதி நிலைத் தன்மை என்பது எங்களுக்கு முன்னுரிமையாக இருக்கும். விஷண் 2030 நிர்ணயித்த அனைத்து இலக்குகளையும் நாங்கள் அடையும் வரை, நிதி நிலைத்தன்மையை பராமரிக்கவும் அரசாங்கம் செலவினங்களை கட்டுப்படுத்தவும் வேண்டும் என்று கூறியுள்ளது.

2030 வேலையின்மை இலக்கு

2030 வேலையின்மை இலக்கு

கடந்த ஆண்டின் இறுதியில் வேலையின்மை 12.6% ஆக இருந்தது. கடந்த ஆண்டு இரண்டாவது காலாண்டில் பொருளாதாரம் தொற்று நோய்களின் போது இந்த விகிதம் 15.4% ஆக இருந்தது. இந்த நிலையில் 2030ல் 7% மேல் இருக்க வேண்டும் என்றும் சவுதி இலக்கு வைத்துள்ளது. ஆக நாங்கள் 2030-க்கான எங்கள் இலக்கினை பராமரித்து வருகிறோம் என்றும் ஜாதான் கூறியுள்ளார்.

இந்தியா என்ன செய்கிறது?

இந்தியா என்ன செய்கிறது?

சவுதி அரேபியா போன்ற எண்ணெய் ஜாம்பவான்களே எண்ணெய் நுகர்வினை குறைக்க திட்டங்களை தீட்டி வரும் நிலையில், அதிகளவிலான எண்ணெய் இறக்குமதியினை மட்டுமே நம்பியுள்ள இந்தியா இன்னும் அதன் வேகத்தினை அதிகப்படுத்த வேண்டும். இந்தியா ஏற்கனவே அதற்கான திட்டங்களில் இறங்கியுள்ளது. மின்சார வாகன உற்பத்தியை, பயன்பாட்டினை ஊக்குவித்து வருகின்றது. எனினும் இதனை இன்னும் துரிதப்படுத்த வேண்டும். இது வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். பொருளாதார வளர்ச்சிக்கு கைகொடுக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக நிச்சயம் எதிர்காலத்தில் மின்சார வாகன பயன்பாடானது அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதனாய் சுற்றுசூழல் மாசுபாடு குறையும். எரிபொருளுக்கான செலவும் குறையும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Saudi Arabia sees over $200 billion in saving from liquid reforms plan

Saudi Arabia updates.. Saudi Arabia sees over $200 billion in saving from liquid reforms plan
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X