உலகளாவிய எண்ணெய் நெருக்கடி ஏற்படலாம்.. சவுதி அராம்கோ CEO எச்சரிக்கை.. ஏன் தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெரும்பாலான நிறுவனங்கள் பசுமை எரிசக்தி அழுத்தங்களை எதிர்கொள்வதால், இந்த துறையில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய பயப்படுகின்றனர். இதனால் உலகம் ஒரு பெரிய அளவிலான எண்ணெய் சப்ளை நெருக்கடியினை எதிர்கொள்ளலாம் என சவுதி அராம்கோவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

 

முதலீடுகள் குறைந்துள்ளதால் உற்பத்தியினை விரிவுபடுத்த முடியாது. இது உற்பத்தியில் தாக்கத்தினை எதிர்கொள்ளலாம்.

உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளரின் தலைவர் அமின் நாசர், ஒரு நாளைக்கு 2027ம் ஆண்டில் உற்பத்தியினை 13 மில்லியன் பேரல்களாக விரிவுபடுத்த திட்டமிட்டிருந்தது. இது தற்போது ஒரு நாளைக்கு 12 மில்லியன் பேரல்களாக உள்ளது. எனவே எண்ணெய் உற்பத்தியினை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.

உங்க சங்காத்தமே வேண்டாம்.. சீனாவை விட்டு வெளியேறிய அமெரிக்க நிறுவனம்..!

தேவை அதிகரிக்கலாம்

தேவை அதிகரிக்கலாம்

உலகம் தற்போது 2% குறைவான உதிரி திறனுடன் இயங்குகிறது. கொரோனாவிற்கு முன்பு 2.5 மில்லியன் பேரல்கள் எண்ணெயினை விமானத் துறை பயன்படுத்தியது. விமானத் தொழில் வேகம் எடுத்தால், தேவை அதிகரிக்கலாம். இதனால் பிரச்சனைகள் அதிகரிக்கலாம்.

முதலீடுகள் சரிவு

முதலீடுகள் சரிவு

ரஷ்யா - உக்ரைன் பிரச்சனையினால் முதலீடுகள் குறைந்துள்ளது. இதனால் எரிபொருள் நெருக்கடியினை எதிர்கொள்ளலாம். தொற்று நோயினை தொடர்ந்து ரஷ்யா - உக்ரைன் பிரச்சனை வந்துள்ளது. சீனாவிலும் தற்போது கொரோனாவின் காரணமாக லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் லாக்டவுன் கட்டுக்குள் வரலாம். ஆக விரைவில் வளர்ச்சி தொடங்கலாம் என கூறியுள்ளார்.

உற்பத்தி அதிகரிப்பு
 

உற்பத்தி அதிகரிப்பு

சவுதி அரேபியா தற்போது 10.5 மில்லியன் பேரல்கள் உற்பத்தி செய்து வருகின்றது. உலகில் ஒவ்வொரு பத்தாவது பேரல்களையும் உற்பத்தி செய்கிறது. மேலும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஓபெக் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளுடனான ஒப்பந்தம் காலாவதியாகும். இது உற்பத்தியினை 11 மில்லியன் பேரலாக உயர்த்தலாம்.

விலைவாசி அதிகரிக்குமோ?

விலைவாசி அதிகரிக்குமோ?

அதிகரித்து வரும் தேவையினை சமாளிக்க அரசு, உற்பத்தியினை விரைவாக அதிகரிக்கவும், திறனை வேகமாக விரிவுபடுத்தவும் மேற்கு நாடுகளின் அழைப்பை ரியாத் எதிர்கொண்டுள்ளது.

இந்த நிலையில் இனி வரவிருக்கும் மாதங்களில் முதலீடுகள் செய்யப்படுமா? உற்பத்தி அதிகரிக்குமா? எண்ணெய் நெருக்கடி தவிர்க்கப்படுமா? தற்போதே விலை உச்சத்தில் காணப்படுகிறது. சவுதி அராம்கோ சொல்வது போல நடந்தால், இன்னும் விலை வாசி அதிகரிக்குமோ? என்ற அச்சம் எழுந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Saudi Aramco CEO warns global oil Crisis due to lack of investment:

The head of Saudi Aramco has said that the world could face an oil supply crisis as investors are afraid to invest in crude oil production.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X