ஒழுங்கா சம்பளம் கொடுக்கல! அதிரடி நடவடிக்கை எடுத்த அமெரிக்க அட்டர்னி! ஊழியர்கள் ஹேப்பி அண்ணாச்சி!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

H1B விசாக்களைப் பற்றிப் படித்து இருப்போம். அமெரிக்காவில், ஒரு துறையில் கோட்பாடு ரீதியாகவோ (Theory) அல்லது டெக்னிக்கல் ரீதியாகவோ நிபுணத்துவம் தேவைப்படும் சிறப்புப் பதவிகளுக்கு, இந்த விசா மூலம் வெளி நாடுகளில் இருந்து வேலைக்கு அமர்த்திக் கொள்வார்கள்.

 

இந்திய ஐடி ஊழியர்களில் கணிசமானவர்கள் இந்த H1B விசாவில் தான் அமெரிக்காவில் வேலை பார்த்து வருகிறார்கள்.

இந்த விசா மூலம், அமெரிக்காவில் வேலைக்குச் சேர்ந்தவர்களுக்கு, சரியாக சம்பளம் கொடுக்கவில்லை. அதைப் பற்றித் தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.

Savantis கம்பெனி

Savantis கம்பெனி

Savantis என்கிற கம்பெனி (முன்பு Vedicsoft Solutions என்று அழைக்கப்பட்டது) இந்தியாவிலும் செயல்பட்டு வருகிறது. இந்த கம்பெனி, கன்சல்டிங், டெக்னாலஜி, staffing போன்ற பல வேலைகளைச் செய்து வருகிறது. இந்த கம்பெனி, H1B விசா வைத்திருந்த பல வெளிநாட்டைச் சேர்ந்தவர்களை அதிகம் வேலைக்கு அமர்த்தியது.

சம்பளம் கொடுக்கல

சம்பளம் கொடுக்கல

கடந்த ஜனவரி 2014 முதல், ஜூன் 2018 கால கட்டம் வரை, மேலே சொன்ன சவண்டில் கம்பெனி, H1B விசா ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தை முறையாகவும், குறிப்பிட கால இடைவெளியிலும் கொடுக்கவில்லை என US Immigration and Customs Enforcement அமைப்பு தன் ஸ்டேட்மெண்டில் சொல்லி இருக்கிறது.

டெபாசிட் கட்டச் சொன்னது
 

டெபாசிட் கட்டச் சொன்னது

அதோடு H1B விசா வைத்திருந்தவர்கள், இந்த கம்பெனியில் வேலைக்கான விண்ணப்பங்களைச் சமர்பிப்பதற்கு முன்பே, செக்யூரிட்டி டெபாசிட் செலுத்தச் சொல்லி இருக்கிறது சவண்டிஸ் (Savantis) கம்பெனி. இது தவறான வழிமுறை என்றும் US Immigration and Customs Enforcement சொல்லி இருக்கிறது.

3.45 லட்சம் டாலர்

3.45 லட்சம் டாலர்

இதை எல்லாம் கண்டு பிடித்த பின், நியூ ஜெர்ஸி மாகாண அட்டர்னி மற்றும் அமெரிக்காவின் தொழிலாளர் துறை (Department of Labor), சாவண்டிஸ் (Savantis) கம்பெனி மீதான இந்த விதி மீறல்களை சரி செய்ய, 3,45,365 அமெரிக்க டாலரை செலுத்த உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

ஊழியர்களுக்கே பணம்

ஊழியர்களுக்கே பணம்

சாவண்டிஸ் (Savantis) கம்பெனி செலுத்தும் இந்த பணத்தை, முன்னாள் மற்றும் இன்னாள் ஊழியர்களுக்கே வட்டியுடன் திருப்பிச் செலுத்த பயன்படுத்தப் போவதாகச் சொல்லி இருக்கிறது US Immigration and Customs Enforcement. ஆனால் எத்தனை ஊழியர்கள் இந்த செட்டில்மெண்டில் பயன்பெறுவார்கள் என்கிற விவரத்தைச் சொல்லவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Savantis a US company to pay $345,365 to resolve H1B violations

The New jersey attorney and US department of labor ordered to pay $345,365 to resolve savantis company's H1B violations
Story first published: Friday, September 18, 2020, 14:47 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X