4,500 பணியாளர்களை வீட்டுக்கு அனுப்ப சீமென்ஸ் முடிவு!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெர்லின்: ஜெர்மானிய நிறுவனமான சீமென்ஸ், இந்தியா மட்டும் இல்லாமல் உலக நாடுகளிலும் செயல்பட்டு வருகிறது.

 

இந்நிறுவனத்தின் மறுசீரமைக்கும் திட்டத்தில் 7,800 பணியாளர்களை நிறுவனத்தை விட்டு வெளியேற்றுவதாக பிப்ரவரி மாத அறிவித்தது.

தற்போது இத்திட்டத்தின் ஒரு பகுதியாக 4,500 பணியாளர்களை நீக்கும் பணியில் சீமென்ஸ் நிர்வாகம் இறங்கியுள்ளதாக வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

ஜெர்மனி அலுவலகம்

ஜெர்மனி அலுவலகம்

சீமென்ஸ் நிர்வாகம் தற்போது செயல்படுத்தி உள்ள 4,500 பணியாளர்கள் வெளியேற்றும் திட்டத்தில், ஜெர்மனி அலுவலகத்தில் மட்டும் 2,200 பணியாளர்கள் வெளியேற்ற இந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் எத்தனை?

இந்தியாவில் எத்தனை?

இந்நிறுவனம் இந்தியாவிலும் செயல்படுவது நாம் அனைவரும் அறிந்த ஒன்று, எனவே இந்திய அலுவலகங்களிலும் பணியாளர்கள் பணி நீக்கம் இருக்கும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால் குறிப்பிட்ட எண்ணிக்கையை இந்நிறுவனம் தெரிவிக்கவில்லை. மேலும் இந்த 4,500 பணியாளர்கள் நீக்கத்தை இந்தியா மட்டும் அல்லாமல் உலக நாடுகளில் இருக்கும் அலுவலகங்களிலும் செயல்பட உள்ளது.

ஜோய் கெய்சர்
 

ஜோய் கெய்சர்

இந்நிறுவனத்தின் தலைவரான ஜோய் கெய்சர் மே 2014ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட திட்டத்தில், இந்நிறுவனத்தில் தேவையற்ற துறைகள் மற்றும் பிரிவுகளை நீக்கவும், பல தரப்பட்ட பணியிடங்களையும் காலி செய்ய முடிவு செய்துள்ளார்.

இத்திட்டம் 2016ஆம் ஆண்டுக்குள் முடிக்கவும் ஜோயி முடிவு செய்துள்ளார்.

செலவுக் குறைப்பு

செலவுக் குறைப்பு

இத்திட்டங்களின் மூலம் இந்நிறுவனம் 1.2 பில்லியன் டாலர் பணத்தைச் சேமிக்க முடிவு செய்துள்ளது. மேலும் நிறுவனம் தற்போது செயல்படுத்தி வரும் திட்டத்தின் மூலம் அதிகப்படியான லாபத்தைப் பெறவும் சீமென்ஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்டஸ்

தமிழ் குட்ரிட்டன்டஸ்

இனி தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை சமுக வலைதளங்கள் மூலம் இணைந்திடலாம். பேஸ்புக், டிவிட்டர் மற்றும் கூகிள் பிள்ஸ்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Siemens says to cut 4,500 jobs worldwide

German engineering giant Siemens said on Thursday that it would slash an additional 4,500 jobs worldwide, on top of 7,800 cuts announced in February as part of an ongoing restructuring plan.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X