45 வருட வர்த்தகத்தில் முதல் முறையாக இத்தாலி-யில் ஸ்டார்பக்ஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் முன்னணி காஃபி பார் நிறுவனமான ஸ்டார்பக்ஸ் 45 வருட வெற்றிகரமான வர்த்தகத்தில் முதல் முறையாக இத்தாலி நாட்டிற்குள் நுழைந்துள்ளது.

 

இதுகுறித்து இந்நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியான Howard Schultz கூறுகையில், 3 தசாப்தங்களுக்கு முன்பு இத்தாலி நாட்டின் மிலன் நகருக்குச் சுற்றுலா வந்தபோது பல பிரபலமான காஃபி பார்களைப் பார்த்து வியந்ததாகக் கூறினார். இந்நாட்டு மக்களைக் கவர தனிப்பட்ட சுவை வேண்டும் என்றும் கூறினார்.

26,000 கிளைகள்

26,000 கிளைகள்

45 வருட வர்த்தகத்தில் 75 நாடுகளில் 26,000 கிளை கொண்டு மிகப்பெரிய அனுபவம் பெற்றுள்ள ஸ்டார்பக்ஸ் நிறுவனத்திற்கு இத்தாலி நாட்டில் தனது வர்த்தகத்தைத் துவங்க இது சரியான நேரமா என்பது கூடத் தெரியவில்லை.

இந்நிலையில் உலகில் மிகச் சிறந்த எக்ஸ்ப்ரஸோ கிடைக்கும் நாட்டிற்குள் ஸ்டார்பக்ஸ் நுழையத் திட்டமிட்டுள்ளது.

2018இல் மிலன்

2018இல் மிலன்

ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ பதவியில் இருந்து வெளியேறத் திட்டமிட்டு வரும் Howard Schultz, இனி இந்நிறுவனத்தின் புதுமைகளில் கவனத்தைச் செலுத்த உள்ளார்.

இந்நிலையில் 2018ஆம் ஆண்டு மிலன் நகரில் புதிய வர்த்தகக் கிளை மட்டும் அல்லாமல் நிறுவனத்திற்குள்ளேயே காஃபி கொட்டைகளின் வறு தளங்களை அமைக்க உள்ளது ஸ்டார்பக்ஸ்.

புதிய மையில்கல்
 

புதிய மையில்கல்

இத்தாலி நாட்டு வர்த்தகம் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்திற்கு மிகமுக்கியமாகும். இந்நாட்டுச் சந்தையில் வெற்றிப்பெற்றுவிட்டால், உலகளவில் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய அளவிலான மதிப்பு உயரும்.

இந்தியா

இந்தியா

இந்தியாவில் ஸ்டார்பக்ஸ் நிறுவனம் டாடா குழுமத்தின் டாடா ப்ரூவெரிஸ் நிறுவனத்துடன் இணைந்து பெங்களுரூ, டெல்லி, மும்பை எனப் பல பகுதிகளில் தனது வர்த்தகத்தை நடத்தி வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Starbucks ready to enter Italy after 45 years of business

Starbucks ready to enter Italy after 45 years of business
Story first published: Tuesday, February 28, 2017, 17:50 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X