அமேசானில் பொருட்களை வாங்காதீர்கள், சில உயிர்களை காப்பாற்றலாம்! அமேசான் ஊழியர் கோரிக்கை!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் நம்பர் 1 பணக்காரர் ஜெஃப் பிசாஸின் கம்பெனி தான் அமேசான்.

உலகின் நம்பர் 1 பணக்காரருக்கு அமேசான் Ex- ஊழியரின் பொளேர் கேள்வி!
 

இந்த அமேசான் கம்பெனியில் எல்லாம் வேலை கிடைத்தால் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என்பார்கள்.

ஆனால் அப்படிப்பட்ட அமேசானில் கூட சில பெரிய பிரச்சனைகள் இருக்கிறது, என்றால் நம்புவீர்களா..? நம்பித் தான் ஆக வேண்டும். அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தை தான் க்ரிஸ் ஸ்மால் என்பவர் பத்திரிகைகளிடம் பகிர்ந்து இருக்கிறார்.

ஒப்பந்தம் மூலம் பாதுகாப்பை தேடும் எண்ணெய் நிறுவனங்கள்.. மோசமான நிலை தான்.. இன்னும் என்ன நடக்குமோ!

க்ரிஸ் ஸ்மால்ஸ்

க்ரிஸ் ஸ்மால்ஸ்

அமேசான் நிறுவனத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தவர் தான் க்ரிஸ் ஸ்மால்ஸ் (Chris Smalls). இவர் சமீபத்தில் அமேசான் நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்டார். Fire செய்யப்பட்டார் என்பது தான் சரியான வார்த்தை. வேலையில் இருந்து நீக்கப்படும் போது, நியூயார்க் நகரத்தில் ஸ்டேடன் தீவில் (Staten Island) அமேசானுக்குச் சொந்தமான குடோனில், மேனேஜர் உதவியாளராக பணியாற்றிக் கொண்டிருந்தார்.

ஒரு அணி

ஒரு அணி

க்ரிஸ் ஸ்மால்ஸ் (Chris Smalls)-ன் கீழ் சுமார் 60 - 100 பேர் வேலை பார்த்து வந்தார்கள். இவர்களின் வேலை அங்கு இருக்கும் ரேக்குகளில் இருந்து கன்வேயர் பெல்டில், பார்சல்களை தூக்கி வைப்பது தான். எல்லாம் நன்றாகத் தான் போய் கொண்டு இருந்தது கடந்த மார்ச் 2020 வரை.

உடல் நலம்
 

உடல் நலம்

கடந்த மார்ச் 2020-ல், க்ரிஸ் ஸ்மால்ஸ் (Chris Smalls) வேலை பார்த்துக் கொண்டிருந்த இடத்தில், கொரோனா தொற்று வருவதற்கு முன்பே, அங்கு வேலை பார்ப்பவர்கள் உடல் நலக் குறைவுக்கு ஆளாவதைப் பார்த்து இருக்கிறார். உடல் சோர்வாக இருப்பது (Fatigue), மயக்கம் வருவது போல் இருப்பது (Light headedness), வாந்தி எடுப்பது (Vomitting) என பாதிக்கப்படுவதைப் பார்த்து இருக்கிறார்.

புகார்

புகார்

உடனடியாக க்ரிஸ் ஸ்மால்ஸ் (Chris Smalls), அமேசான் நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டுத் துறையிடம் புகார் கொடுத்து இருக்கிறார். ஆனால் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. அதே போல, ஊழியர்களுக்கு கை உறைகள் (Gloves) ரப்பரில் தான் இருந்தது. latex-ல் இல்லை, முகமூடி இல்லை, சானிட்டைசர்கள் இல்லை.

ஓவர் டைம்

ஓவர் டைம்

இப்படி பல பிரச்சனைகளுக்கு மத்தியில், கூடுதலாக வரும் ஆர்டர்களைச் சமாளிக்க, அமேசான் ஊழியர்கள் கட்டாயம் ஓவர் டைம் பார்க்க வேண்டும் எனச் சொல்லி இருக்கிறது நிர்வாகம். இப்படி ஓவர் டைம் பார்ப்பதற்கு, வழக்கமாக வரும் சம்பளத்தை விட, ஒரு மணி நேரத்துக்கு 2 டாலர் கூடுதலாக கொடுப்பார்களாம்.

உடல் நிலை

உடல் நிலை

க்ரிஸ் ஸ்மால்ஸ் (Chris Smalls) குடோனின் பாதுகாப்பு நடவடிக்கைகள் சரி இல்லாததால் விடுப்பு எடுத்து வீட்டிலேயே இருந்து இருக்கிறார். மற்ற சில பல ஊழியர்களும், தங்கள் உயிருக்கு பயந்து விடுப்பு எடுத்து வீட்டிலேயே இருந்து இருக்கிறார்கள். க்ரிஸ் ஸ்மால்ஸ் (Chris Smalls)-க்கு விடுப்பு தீர்ந்துவிட்டதால் மீண்டும் அலுவலகத்துக்குச் சென்று இருக்கிறார்.

சம்பளம்

சம்பளம்

க்ரிஸ் ஸ்மால்ஸ் அதிகாரியாக இருந்ததால் அவருக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு இருந்தது. ஆனால் மற்ற கடை நிலை ஊழியர்களுக்கு அந்த வசதி கிடையாது, வந்து வேலை பார்த்தால் சம்பளம் இல்லை என்றால் சம்பளம் கிடையாது. அப்படியும் உயிருக்கு பயந்து சிலர் விடுப்பில் இருந்து இருக்கிறார்கள்.

கொரோனா இருக்கு

கொரோனா இருக்கு

கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 31, 2020) அன்று அலுவலகத்துக்குச் சென்ற போது, மேலாளர்களுக்கான கூட்டத்தில், அமேசான் ஊழியரில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்ததைச் சொல்லி இருக்கிறார்கள். அப்போது கூட, சக ஊழியர்களிடம் இதைப் பற்றிச் சொல்ல வேண்டாம், எனச் சொல்லி இருக்கிறார்களாம்.

தகவல்

தகவல்

ஆனால் க்ரிஸ் ஸ்மால்ஸ் (Chris Smalls) தன்னால் முடிந்த வரை ஊழியர்களிடம் விவரங்களைச் சொல்லி இருக்கிறார். அதோடு அரசு தரப்புக்கும் விவரங்களைத் தெரியப்படுத்தி இருக்கிறார். அமேசானின் அந்த குடோனை முழுமையாக மூடி, சானிட்டைஸ் செய்யப்பட வேண்டும் என்கிற நோக்கில் செய்து இருக்கிறார்.

அமேசான் உயர் அதிகாரி

அமேசான் உயர் அதிகாரி

அதன் பின், அமேசான் நிறுவனத்தின் பொது மேலாளரிடம் கூட விவரங்களைச் சொல்லி இருக்கிறார்.

1. குடோன் முழுமையாக மூடப்பட்டு சானிட்டைஸ் செய்யப்பட வேண்டும். இந்த சானிட்டைஸ் செய்யப்படும் காலத்தில் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கப் பட வேண்டும்.

2. உடல் நலம் சரி இல்லாதவர்கள் வேலைக்கு வரவில்லை என்றாலும் அவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்பட வேண்டும்... என்கிற கோரிக்கைகளையும் வலுவாக முன் வைத்து இருக்கிறார். ஆனால் செவிடன் காதில் ஊதிய சங்காகத் தான் இருந்தது க்ரிஸ் ஸ்மால்ஸ் (Chris Smalls)-ன் கோரிக்கைகள்.

மீடியா

மீடியா

அமேசான் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்காததால், அமேசான் அலுவலகத்தில் இருந்து, க்ரிஸ் ஸ்மால்ஸ் (Chris Smalls) உட்பட சில ஊழியர்கள் வெளிநடப்பு செய்து இருக்கிறார்கள். அதோடு விவரங்களை மீடியாவிடமும் தெரியப்படுத்தி இருக்கிறார்கள். எனவே அமேசான் நிறுவனம் க்ரிஸ் ஸ்மால்ஸ் (Chris Smalls)-ஐ வேலையில் இருந்து நீக்கி இருக்கிறது.

கோரிக்கை

கோரிக்கை

இது எல்லாம் போக, க்ரிஸ் ஸ்மால்ஸ் (Chris Smalls) ஒரு கோரிக்கை வைத்து இருக்கிறார். "நீங்கள் அமேசான் வாடிக்கையாளரா? அமேசானில் பொருட்களை வாங்காதீர்கள். நீங்களே நேரடியாக மளிகை கடைகளுக்குச் சென்று பொருட்களை வாங்குங்கள். நீங்கள் சில உயிர்களை காப்பாற்றலாம்" என உருக்கமான கோரிக்கையையும் முன் வைத்து இருக்கிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Stop buying from amazon former amazon employee request

Former amazon employee Chris smalls said that "If you’re an Amazon customer, here’s how you can practice real social distancing: stop buying goods from amazon. Go to the grocery store instead. You might be saving some lives".
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X