சும்மா இருப்பதற்கெல்லாம் காசு வேண்டாம்.. சுவிஸ் அரசின் நிபந்தனையற்ற ஊதியத்திற்கு மக்கள் எதிர்ப்பு..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெர்ன்: சுவிட்சர்லாந்து நாட்டில் வறுமையை ஒழிக்க அந்நாட்டு அரசு குடிமக்களுக்கும் ஒவ்வொரு மாதமும் நிபந்தனையற்ற அடிப்படை ஊதியம் என்ற வகையில் 2,500 சுவிஸ் பிராங்களை வழங்க முடிவு செய்தது.

இத்திட்டத்தை அமல்படுத்த கடந்த ஞாயிற்றுக்கிழமை மக்கள் மத்தியில் வாக்கெடுப்புச் செய்யப்பட்ட போது இத்திட்டத்திற்கு மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.

2500 பிராங்

2500 பிராங்

சுவிஸ் அரசு திட்டமிட்டுள்ள படி, இந்நாட்டில் வறுமையை ஒழிக்கும் விதமாகக் குடிமக்களுக்கு, அரசு அளிக்கும் சில சலுகைகள் அளிப்பதை நிறுத்திவிட்டு மாதம்தோறும் 2,500 சுவிஸ் பிராங், குழந்தைகளுக்கு 625 சுவிஸ் பிராங்களுக்கு வழங்க முடிவு செய்தது.

வாக்கெடுப்பு

வாக்கெடுப்பு

இத்திட்டம் நிறைவேற்றப்பட 1 லட்சம் கையெழுத்து வேண்டும் என்பதால் பொது வாக்கெடுப்புக்குச் செல்ல சுவிஸ் அரசு முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஜூன் 5ஆம் தேதி (நேற்று) மக்கள் மத்தியில் வாக்கெடுப்புச் செய்யப்பட்டது.

படம்: WSJ

எதிர்ப்பு

எதிர்ப்பு

இவ்வாக்கெடுப்பின் முடிவுகள் அரசுக்குச் சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அதிகமானோர் அரசின் நிபந்தனையற்ற அடிப்படை ஊதியத்தை எதிர்த்துள்ளனர்.

குறிப்பாக 5இல் 4பேர் அரசின் இத்திட்டம் வேண்டாம் என்று வாக்களித்துள்ளனர்.

 

முதல் நாடு

முதல் நாடு

உலகிலேயே முதல் நாடாக, அரசின் நிபந்தனையற்ற ஊதிய திட்டத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளது சுவிஸ்.

பின்லாந்து

பின்லாந்து

இந்நாட்டில் இயந்திரங்கள் மக்களின் வேலைவாய்ப்புகளை அதிகளவில் குறைத்துள்ளதால், இந்நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில், சுவிஸ் நாட்டின் அதேபோன்ற திட்டத்தைச் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது பின்லாந்து.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Swiss voters say no to ‘money for nothing' plan

Swiss voters rejected by a wide margin on Sunday a proposal to introduce a guaranteed basic income for everyone living in the wealthy country after an uneasy debate about the future of work at a time of increasing automation.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X