தாலிபான்களுக்கு எதிர்பார்க்காத செக்.. அரசு பணத்தை தொட கூட முடியாத சோகம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் மொத்தமாகக் கைப்பற்றியுள்ள நிலையில் அந்நாடு முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

 

எங்கு பாரத்தாலும் துப்பாக்கி உடன் ஆட்கள் நடமாட்டம், ராணுவ வாகனங்கள் இடைவிடாமல் சாலையில் ரோந்து, இதற்கிடையில் மக்கள் இயல்பு வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் பல பகுதிகளில் பள்ளி, கல்லூரிகள் இயங்க துவங்கியுள்ளது, ஆனால் மக்கள் இயல்பு வாழ்க்கையை வாழவில்லை என்பது உறுதியாகத் தெரிகிறது.

இந்த சூழ்நிலையில் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய தாலிபான்களுக்கு அந்நாட்டின் அரசின் சுமார் 9 பில்லியன் டாலர் அளவிலான தொகையைத் தொட முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

 தாலிபான்கள்

தாலிபான்கள்

சுமார் 20 வருடப் போராட்டத்திற்குப் பின்பு தாலிபான்கள் ஆட்சி அமைக்கும் நிலையை ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றியது மூலம் அடைந்துள்ளது. ஆனா ஆட்சியை நடத்துவது என்ன அவ்வளவு ஈசியா, எவ்வளவு பணம் வேண்டும்..? இந்த பணத்திற்குத் தான் தற்போது செக் வைக்கப்பட்டு உள்ளது.

 ஆப்கான் நாணயத்தின் மதிப்பு

ஆப்கான் நாணயத்தின் மதிப்பு

தாலிபான் ஆப்கான் நாட்டின் முன்னேறி வரும் காரணத்தால் முதலீட்டாளர் டாலர் முதலீட்டை அதிகளவில் வெளியேற்றி வந்த காரணத்தால் டாலர் முதலீடுகள் பெருமளவு குறைந்துள்ளது. இதனால் ஆப்கான் நாணயத்தின் மதிப்பு வரலாறு காணாத சரிவைச் சந்தித்தது.

 DAB கவர்னர் அஜ்மல் அகமதி
 

DAB கவர்னர் அஜ்மல் அகமதி

இதனால் சனிக்கிழமை ஆப்கானிஸ்தான் நாட்டின் மத்திய வங்கியான டா ஆப்கானிஸ்தான் வங்கி (அதாவது நம்ம ஊரு ரிசர்வ் வங்கியைப் போன்றது) கவர்னர் அஜ்மல் அகமதி டாலர் பரிமாற்றத்திற்குத் தடை விதித்தார். இதனால் ஆப்கான் நாட்டின் நாணயமான ஆப்கானி மதிப்பு சரிவில் இருந்து மீண்டது.

 9 பில்லியன் டாலர் சொத்து

9 பில்லியன் டாலர் சொத்து

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டின் மத்திய வங்கியான டா ஆப்கானிஸ்தான் வங்கி சுமார் 9 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்கள் முதலீடுகளை நிர்வாகம் செய்து வருகிறது. இதில் 7 பில்லியன் டாலர் மதிப்பிலான பணம், தங்கம், பத்திரம் மற்றும் இதர முதலீடுகள் அனைத்தும் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் உடன் உள்ளது.

 0.2 சதவீத மட்டுமே மிஞ்சியுள்ளது

0.2 சதவீத மட்டுமே மிஞ்சியுள்ளது

எஞ்சியுள்ள 2 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகளும், சொத்துக்களும் பிற நாட்டு மத்திய வங்கிகளிடமும், சுவிஸ் வங்கிகளிடமும் உள்ளது. மொத்த சொத்து மதிப்பில் வெறும் 0.2 சதவீதம் அல்லது அதற்குக் குறைவான தொகை மட்டுமே மத்திய வங்கியான டா ஆப்கானிஸ்தான் வங்கி கருவூலத்தில் உள்ளது.

  அஜ்மல் அகமதி டிவிட்டர்

அஜ்மல் அகமதி டிவிட்டர்

இதுகுறித்து ஆப்கான் நாட்டை விட்டு ஓடிப்போன டா ஆப்கானிஸ்தான் வங்கி கவர்னர் அஜ்மல் அகமதி தொடர்ந்து டிவிட்டரில் நாட்டின் நிலை குறித்தும், நிதி நிலை குறித்தும் டிவீட் செய்து வருகிறார். இப்படி அவர் டிவீட் செய்த தரவுகள் படி...

 9.0 பில்லியன் டாலர் உள்ளது

9.0 பில்லியன் டாலர் உள்ளது

கடந்த வார முடிவில் டா ஆப்கானிஸ்தான் வங்கியின் மொத்த இருப்பு 9.0 பில்லியன் டாலர். இதில் சர்வதேச பாதுகாப்பு தரத்தின் அடிப்படையில் பெரும் பகுதி தொகை, முதலீடுகள், சொத்துக்கள் வெளிநாட்டு மத்திய வங்கிகளில் தான் உள்ளது. இதன் படி

நிதி நிலை விபரம்

இதில் 7.0 பில்லியன் டாலர் அமெரிக்க பெடரல் ரிசர்வ்-ல் உள்ளது.

அமெரிக்க பத்திரங்களில் - 3.1 பில்லியன் டாலர்

WB RAMP சொத்துகளில் - 2.4 பில்லியன் டாலர்

தங்கம் -1.2 பில்லியன் டாலர்

பணமாக கணக்குகளில் - 0.3 பில்லியன் டாலர்

பிற சர்வதேச கணக்குகளில் 1.3 பில்லியன் டாலர்

BIS - 0.7 பில்லியன் டாலர் உள்ளது என தெரிவித்துள்ளார்.

 ஐஎம்எப் நிதியுதவி

ஐஎம்எப் நிதியுதவி

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ஐஎம்எப் சமீபத்தில் 650 மில்லியன் டாலர் தொகையை ஆப்கான் அரசுக்கு வழங்க ஒப்புதல் அளித்தது. ஆகஸ்ட் 23ஆம் தேதி 340 மில்லியன் டாலர் தொகையைக் கொடுக்க திட்டமிடப்பட்டு இருந்தது. தற்போது தாலிபான்கள் ஆப்கான்-ஐ கைப்பற்றியுள்ளதால் இந்த தொகை கொடுக்கப்படுமா என்பது கேள்விக்குறி தான்.

 கணக்குகள் தடை

கணக்குகள் தடை

இன்றளவு தாலிபான்கள் சர்வதேச நாடுகள் பட்டியலில் தடை செய்யப்பட்ட இயக்கமாகவே இருக்கும் காரணத்தால் ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆட்சி அமைத்தாலும் அரசின் 9 பில்லியன் டாலர் தொகையைத் தொட முடியாது. சர்வதேச சட்டதிட்டங்கள் படி இந்த கணக்குகள் frozen செய்யப்படும்.

 தாலிபான் புரிந்துகொள்ள வேண்டும்

தாலிபான் புரிந்துகொள்ள வேண்டும்

தாலிபான் இந்த கட்டமைப்பை புரிந்துகொள்ள வேண்டும் டா ஆப்கானிஸ்தான் வங்கி உத்தரவிட்டால் இந்த பணத்தை ஒரு காலமும் பெற முடியாது. இது நேரடியாக அமெரிக்க உத்தரவின் பெயரில் இயங்குபவை எனவும் அஜ்மல் அகமதி டிவீட் செய்துள்ளார்.

 ஆட்சி செய்ய எளிதல்ல

ஆட்சி செய்ய எளிதல்ல

இதுமட்டும் அல்லாமல் தாலிபான் ராணுவத்தை வீழ்த்தி வெற்றி பெற்று இருக்கலாம். ஆனால் தற்போது ஆட்சி செய்ய வேண்டும் அது அவ்வளவு எளிதான ஒன்று இல்லை. தாலிபான்களுக்கு தற்போது ஆப்கான் அரசை நடத்த ஒரு சரியான நிதி வல்லுநர்கள் கட்டாயம் தேவை இல்லையெனில் தாக்குப்பிடிக்க முடியாது.

 ஆப்கான் அதிபர் எஸ்கேப்

ஆப்கான் அதிபர் எஸ்கேப்

முன் அறிவிப்பு இல்லாமல் ஆப்கான் அதிபர் நாட்டை விட்டு எஸ்கேப் ஆன நிலையில் மக்களும், அரசு அதிகாரிகள், அமைச்சர்களும், பெரும் பணக்காரர்களும் வேறு வழியில்லாமல் நாட்டை விட்டுத் தப்பித்தால் போதும் என நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

அஜ்மல் அகமதி தப்பி ஓட்டம்

இதில் அஜ்மல் அகமதியும் விதிவிலக்கு அல்ல, கடைசி நேரத்தில் போராடிக் கூட்டத்தோடு கூட்டமாக ராணுவ விமானத்தில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு தப்பி ஓடிய கதையை டா ஆப்கானிஸ்தான் வங்கியின் கவர்னர் அஜ்மல் அகமதி டிவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Taliban cant touch 9 billion dollar assets of Da Afghanistan Bank

Taliban cant touch the 9 billion dollar assets of Da Afghanistan Bank
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X