தாலிபான்களுக்கு செம வேட்டை தான்.. $1 டிரில்லியன் மதிப்புள்ள விலையுயர்ந்த கனிமங்கள்.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தற்போது திரும்பும் பக்கமெல்லாம் எல்லாம், எல்லா மீடியாக்களிலும் ஆப்கானிஸ்தான் மற்றும் தாலிபான்கள் பேச்சு தான். சர்வதேச நாடுகளை அஞ்ச வைத்துள்ளது ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்து வரும் நிகழ்வுகள். அந்தளவுக்கு மோசமானவையாகவும், கொடூரமானதாகவும் இருந்து வருகின்றது.

 

சொல்லப்போனால் இன்று ஒட்டுமொத்த உலகின் கவனத்தையும் தாலிபான்கள் ஈர்த்துள்ளனர்.

உண்மையில் இவர்கள் யார்? இவர்களின் நோக்கம் தான் என்ன? எதற்காக இவர்கள் இப்படி ஒரு செயலில் ஈடுபட்டுள்ளனர் வாருங்கள் விரிவாக பார்க்கலாம்.

யார் இந்த தாலிபான்கள்?

யார் இந்த தாலிபான்கள்?

கடந்த 1980களில் தங்கள் நாட்டினை வசமாக்க முயன்ற சோவியத் படைகளுக்கு எதிராக ஆப்கானிஸ்தானை சேர்ந்த பலரும் போராட்டத்தில் குதித்தனர். இவர்களே தாலிபான்கள் ஆவர். இவர்கள் முஜாஹிதீன் என்றும் அழைக்கப்படுகின்றனர். நாடு முழுவதும் இஸ்லாமிய சட்டத்தினை அமல்படுத்துவதும், பிற நாடுகளின் தாக்கத்தினை தங்கள் நாட்டில் இருந்து அகற்றுவதுமே இவர்கள் நோக்கம் என கூறப்படுகிறது.

கடுமையான சட்டங்கள்

கடுமையான சட்டங்கள்

கடந்த 1996ம் ஆண்டு காபூலை தாலிபான்கள் கைப்பற்றிய பின்னர், மிகக் கடுமையான சட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. குறிப்பாக பெண்கள் தலை முதல் கால் வரை மூடியிருக்கும் ஆடைகளை அணிய வேண்டும், ஆண் துணை இல்லாமல் தனியாக வெளியே செல்லக்கூடாது. பெண்கள் கல்வி கற்கவோ, வேலைக்கு செல்லவோ கூடாது என பெண்களுக்கான உரிமைகள் முழுவதும் பறிக்கப்பட்டன.

பலவற்றிற்கும் தடை
 

பலவற்றிற்கும் தடை

இது மட்டும் அல்ல, தொலைக்காட்சி, பாடல்கள் தடை செய்யப்பட்டதோடு இஸ்லாமிய விடுமுறை அல்லாத பிற விடுமுறை நாட்களுக்கும் தடை விதிக்கப்பட்டன. இப்படி பல மோசமான பிரச்சனைகளுக்கு மத்தியில் தான், அமெரிக்காவில் தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதல் நடந்த ஒரு மாதத்திற்குள்ளாகவே அமெரிக்கா மற்றும் அதன் நேசப் படைகள் ஆப்கானிஸ்தான் மீது படை எடுத்தன. அல்கொய்தாவுக்கு தாலிபான்கள் உதவி செய்வதை தடுத்து நிறுத்தவும், ஆப்கானிஸ்தானை தங்களின் புகழிடமாக அல்கொய்தா பயன்படுத்துவதை தடுக்கவுமே, அந்நாட்டின் மீது படை எடுத்ததாக அமெரிக்கா தரப்பில் அப்போது தெரிவித்தது.

முடிவு எட்டப்படவில்லை

முடிவு எட்டப்படவில்லை

இதற்கிடையில் கடந்த 2017ம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதும், தாலிபான்கள் அவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பினர். அதில், தங்கள் நாட்டில் இருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெற வேண்டும் என்று கோரியிருந்தனர். எனினும் இந்த விவகாரத்தில் கடைசி வரையில் முடிவு எட்டப்படாமலேயே இருந்தது. இறுதியாக கடந்த ஆண்டு தாலிபான்கள் மற்றும் டிரம்ப் அரசாங்கத்துக்கு இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. எனினும் இந்த ஒப்பந்தத்திற்கு பிறகும் அமைதி என்பது எட்டப்படவில்லை.

டிரில்லியன் டாலர் மதிப்பிலான தாதுக்கள்

டிரில்லியன் டாலர் மதிப்பிலான தாதுக்கள்

தாலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானில், தற்போது பயன்படுத்தப்படாத 1 டிரில்லியன் டாலர் தாதுக்கள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் பல உலகிற்கு தேவையை நிறைவு செய்யும் ஒன்றாகவும் உள்ளன. அந்த கனிம வளங்கள், எதிர்காலத்தில் புதுபிக்கதக்க எரிசக்தி தயாரிப்பில், மிக முக்கிய பங்கு வகிக்கலாம் என நம்பப்படுகிறது. எனினும் அந்த இயற்கை வளங்களை எடுப்பது அவ்வளவு எளிதல்ல என கூறப்படுகிறது.

நிதி நெருக்கடி ஆப்கானிஸ்தான்

நிதி நெருக்கடி ஆப்கானிஸ்தான்

நிதி ரீதியாக பெரும் நெருக்கடியில் உள்ள ஆப்கானிஸ்தான், இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு, தற்போது மீண்டும் இன்னும் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இது இன்னும் ஆப்கானிஸ்தானுக்கு கிடைத்து வந்த ஆதரவையும் தடுத்து நிறுத்தியுள்ளது. இது இன்னும் நெருக்கடி நிலைக்கு தள்ளியுள்ளது.

காப்பர் விலை

காப்பர் விலை

அமெரிக்காவின் புவியியல் ஆய்வு அறிக்கையின் படி, கனிம வளங்களில் பாக்சைட், தாமிரம், இரும்புதாது, லித்தியம் மற்றும் அரிய தாதுக்கள் என பல அரிய தாதுக்கள் உள்ளன. நடப்பு ஆண்டினை பொறுத்த வரையில் டன்னுக்கு 10,000 டாலர்களுக்கும் அதிகமாக காப்பரின் விலை அதிகரித்துள்ளது.

முக்கிய மூலப் பொருள்

முக்கிய மூலப் பொருள்

இது அதிக வெப்பம் மற்றும் மின் கடத்தும் திறனை கொண்டுள்ளது. கேபிள்களை தயாரிப்பதற்கான முக்கிய மூல பொருளாக உள்ளது. மறுபுறம் லித்தியம் கார் பேட்டரிகள் மற்றும் காற்றாலைகள் உருவாக்குவதிலும் ஒரு முக்கிய மூல பொருளாக உள்ளது.

40 மடங்கு தேவை அதிகரிக்கும்

40 மடங்கு தேவை அதிகரிக்கும்

சர்வதேச எரிசக்தி நிறுவனம் லித்தியத்திற்கான தேவை 2040ல் 40 மடங்கு அதிகரிக்கலாம் என மதிப்பிட்டுள்ளது. அத்தகைய தேவையுள்ள ஒரு தாது, ஆப்கானிஸ்தானில் அதிகளவில் இருப்பினைக் கொண்டுள்ளது. இப்படி அரிய தாதுக்களை கொண்டுள்ள எரிசக்தி துறையின் முக்கிய பகுதியாக, அரிய பூமியின் தாயகமாகவும் ஆப்கானிஸ்தான் உள்ளது.

விலைமதிப்புமிக்க உலோகங்கள்

விலைமதிப்புமிக்க உலோகங்கள்

இது தவிர ஆப்கானிஸ்தானில் நியோடைமியம், பிரசோடைமியம் மற்றும் டிஸ்ப்ரோசியம் ஆகியவை அடங்கும்.

மேலும் டால்க், பளிங்கு, நிலக்கரி மற்றும் இரும்பு, மரகதங்கள் மற்றும் டூர்மலைன், லாபிஸ் லாசுலி போன்ற விலை மதிப்புமிக்க கற்களும் இருந்து வருகின்றன.

எனினும் இந்த கற்கள் சட்ட விரோதமாக பாகிஸ்தானுக்கு கடப்படுவதாக கூறப்படுகிறது.

$1 டிரில்லியன் மதிப்பு

$1 டிரில்லியன் மதிப்பு

USGS அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் பயன்படுத்தப்படாத கனிமத்தின் மொத்த மதிப்பு சுமார் 1 டிரில்லியன் டாலர் இருக்கலாம் என மதிப்பிடப்படுள்ளது. எனினும் ஆப்கானிஸ்தான் அரசு அதன் மதிப்பினை மூன்று மடங்கு அதிகமாக வைத்துள்ளது. எனினும் கனிம வளங்களை எடுப்பது அவ்வளவு எளிதல்ல என்பதும் நினைவு கொள்ள தக்கது. ஏனெனில் தற்போது உலக நாடுகளின் முழு நிதியும் ஆப்கானிதானுக்கு நிறுத்தப்பட்டுள்ளது.

மீட்க பயன்படுமா?

மீட்க பயன்படுமா?

ஆப்கானிஸ்தானின் காபூல் நகரம் வீழ்ச்சியடைந்ததும் என்ன செய்வது என்று தெரியாமல், இருபது ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் செய்திருக்கும் முதலீடுகளையும், உடைமைகளையும் விட்டுவிட்டு மற்ற பல நாடுகள் அவசர அவசரமாக வெளியேறிக் கொண்டிருக்கின்றன. அதிகாரிகளையும் குடிமக்களையும் மீட்டு வருகின்றன. இந்த சமயத்தில் சரிந்துள்ள ஆப்கானிஸ்தானின் பொருளாதாரத்தினை மீட்க இந்த அரிய உலோகங்கள் பயன்படுமா?

தாலிபான்கள் சரியாக பயன்படுத்துவார்களா? இந்த விலைமதிப்புமிக்க உலோகங்கள் நாட்டின் பொருளாதாரத்தினை மேம்படுத்த உதவுமா? பொறுத்திருந்து பார்க்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Taliban hold key to 1 trillion dollars in trove of minerals

afghanistan latest news updates.. Taliban hold key to 1 trillion dollars in trove of minerals
Story first published: Sunday, August 22, 2021, 21:34 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X