டிவிட்டருக்கு லீவ் விட்ட எலான் மஸ்க்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா-வின் தலைவரான எலான் மஸ்க் அதிரடியான டிவீட் செய்வதில் மிகவும் பிரபலம், இவரது பல டிவீட்கள் டெஸ்லா நிறுவனத்தை உயர்த்தினாலும், சில டிவீட் இந்நிறுவனத்தை மதிப்பை மட்டும் அல்லாமல் முதலீட்டாளர்களின் மதிப்பையும் பெரிய அளவில் பாதிக்கிறது.

 

சமீபத்தில் கூட அமெரிக்கப் பங்குச்சந்தையில் பட்டையைக் கிளப்பி வரும் கேம்டாப் நிறுவன பங்குகள் சமுக வலைத்தளத்தில் பரவிய தகவல்களின் எதிரொலியால் தாறுமாறாக வளர்ச்சி அடைந்த போது, இந்நிறுவனப் பங்கு வளர்ச்சி குறித்து ஆதரவாக டிவீட் செய்தார் எலான் மஸ்க்.

எலான் மஸ்க்-ன் இந்த டிவீட் எந்த அளவிற்கு ஆதரவைப் பெற்றதோ, அதே அளவிற்கு எதிர்மறையான விமர்சனங்களையும் பெற்றது. இந்நிலையில் எலான் மஸ்க் சில காலத்திற்கு டிவிட்டர்-ஐ விட்டு வெளியேற முடிவு செய்துள்ளதாக டிவீட் செய்துள்ளார்.

டிவிட்டரில் எலான் மஸ்க்

டிவிட்டரில் எலான் மஸ்க்

எலான் மஸ்க் தனது டிவிட்டர் கணக்கின் மூலம் வெறும் 102 பேரை மட்டுமே பின்தொடரும் நிலையில், சுமார் 44.9 மில்லியன் மக்கள் மஸ்க்-கை பின் தொடர்ந்து வருகின்றனர். இதனால் எலான்-னின் ஒவ்வொரு டிவீட்டும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

டிவிட்டருக்கு லீவ்

டிவிட்டருக்கு லீவ்

சமுக வலைத்தளத்தில் பெரிய ஆர்வம் இல்லாமல் இருக்கும் எலான் மஸ்க் நீண்ட காலமாக டிவிட்டரில் மட்டும் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். டிவிட்டரை விட்டு வெளியேறும் எலான் மஸ்க் எப்போது திரும்ப வருவார் என்பதைத் தெரிவிக்காத காரணத்தால், மஸ்க்-ன் டிவிட்டர் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

இது பழைய கதை
 

இது பழைய கதை

இதேபோன்ற டிவீட்டை 2020 ஜூன் 2ஆம் தேதி வெளியிட்ட எலான் 2 நாட்களில் திரும்பவும் வந்துவிட்டார். இந்த முறை குறைந்தபட்சம் சில வாரங்களாவது எலான் மஸ்க் டிவிட்டர் பக்கம் வரமாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குக் காரணம் கடந்த ஒரு வருடமாக எலான் மஸ்க் செய்த பல டிவீட்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அப்படி என்ன டிவீட் போட்டார் என்று தான் கேட்குறீங்க, நீங்களே பாருங்கள்

டெஸ்லா பங்கு விலை ரொம்ப அதிகம்

டெஸ்லா பங்கு விலை ரொம்ப அதிகம்

ஒரு நிறுவனத்தின் தலைவராகவும், உரிமையாளராக இருந்துகொண்டு யாராவது தன் நிறுவனப் பங்குகள் மிகவும் அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது எனக் கூறுவார்களா.. எலான் மஸ்க் கூறியுள்ளார், பல தடைகளைத் தாண்டி டெஸ்லா சிறப்பான வர்த்தக வளர்ச்சியை அடைந்து டெஸ்லாப் பங்குகள் சிறப்பான வளர்ச்சியை அடைந்தது. இவரின் ஒரு வரி டிவீட்டால் டெஸ்லா பங்குகள் தடாலடியாகச் சரிந்தது.

ஜெப் பிசோஸ் காப்பிக் கேட்

ஜெப் பிசோஸ் காப்பிக் கேட்

எலான் மஸ்க்-க்குப் போட்டியாக அமேசான் நிறுவனத் தலைவர் ஜெப் பிசோஸ், மஸ்க் வர்த்தகம் செய்யும் அனைத்து வர்த்தகத்திலும் புதிதாக ஒரு நிறுவனத்தை உருவாக்கி வர்த்தகம் செய்வதாக அறிவித்து வந்த நேரத்தில், சமுக வலைத்தளத்தில் கோடிக்கணக்கான மக்கள் முன்னிலையில் ஜெப் பிசோஸ்-ஐ காப்பிக் கேட் எனக் கூறி டிவீட் செய்துள்ளார்.

சிக்னல் செயலி சூப்பர்

சிக்னல் செயலி சூப்பர்

பேஸ்புக்-ன் வாட்ஸ்அப் செயலியின் தனிநபர் கொள்கை இந்தியா மற்றும் பிற நாடுகளில் கொண்டு வந்த போது பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வாட்ஸ்அப்-ஐ உருவாக்கிய ப்ரைன் ஆக்டன் புதிதாக உருவாக்கியுள்ள signal செயலி மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது எனக் கூறி டிவீட் செய்தார். அன்று முதல் signal செயலி சிறப்பான வளர்ச்சியில் உள்ளது.

பிட்காயின் பாதுகாப்பான சொல்

பிட்காயின் பாதுகாப்பான சொல்

கிரிப்டோகரன்சி மீதான வர்த்தகத்தைப் பலரும் எதிர்த்து வந்த நிலையில், பிட்காயின் உச்ச நிலையில் இருந்த போது எலான் மஸ்க் தனது டிவிட்டரில் பிட்காயின் மிகவும் பாதுகாப்பான சொல் என டிவீட் செய்தார். அடுத்தச் சில நொடியில் நான் பிராங்க் பண்ணே.. கேமரா பாருங்க பானியில்.. விளையாட்டுக்குச் சொன்னதாக டிவீட் செய்தார்.

தங்க வீடு கூட இல்லை

தங்க வீடு கூட இல்லை

எலான் மஸ்க் தனது நிறுவன விரிவாக்கத்திற்காகவும், தனது நிர்வாக அலுவலகத்தை டெக்சாஸ் மாகாணத்திற்கு மாற்ற வேண்டும் என்ற திட்டத்தில் இருந்த எலான் மஸ்க் தனது சொத்துக்கள் அனைத்தையும் விற்பனை செய்ய உள்ளதாகவும், தனக்கு ஒரு வீடு கூட இல்லை எனவும் டிவீட் செய்தார்

செவ்வாய்க் கிரகத்தில் அணுக்குண்டு

செவ்வாய்க் கிரகத்தில் அணுக்குண்டு

செவ்வாய்க்கிரகத்திற்குச் செல்ல திட்டமிட்டு வரும் எலான் மஸ்க், செவ்வாய்க்கிரகத்தில் அணுக்குண்டு போட வேண்டும் என்பது போல் Nuke Mars! என டிவீட் செய்து அடுத்த சில நிமிடங்களில் புதிதாக டிசர்ட் வருகிறது என டிவிட் செய்து நெட்டிசன்களைத் திணறடித்தார்.

கடைசி டிவீட் - ஜெர்மனியில் புதிய தொழிற்சாலை

டிவிட்டரை விட்டு வெளியேறப் போகும் முன் ஜெர்மனி நாட்டில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் டெஸ்லா ஜிகா தொழிற்சாலையின் வீடியோவை டிவீட்டாகப் பதிவிட்டு இருந்தார்.

இந்தியாவிற்கு வந்த டெஸ்லா

இந்தியாவிற்கு வந்த டெஸ்லா

கடந்த வருடம் இந்தியாவிற்கு எப்போது டெஸ்லா வரும் என டிவிட்டரில் கேட்டதற்கு 2021ல் கட்டாயம் இந்தியாவிற்கு டெஸ்லா வரும் என டிவீட் செய்திருந்த நிலையில், தற்போது டெஸ்லா பெங்களூரில் அலுவலகத்தைத் திறந்துள்ளது. இதற்குச் சொன்னபடி இந்தியாவிற்கு வந்துவிட்டோம் என டிவீட் செய்துள்ளார் எலான் மஸ்க்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tesla's Elon musk leaves Twitter for a while: Here are some crazy tweets of Elon

Tesla's Elon musk leaves Twitter for a while: Here are some crazy tweets of Elon
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X